மகாபாரதம் கர்ணன் பற்றிய செய்திகள் வீக்கீப்பீடியா:

    துரியோதனனுக்கும்,கெளரவ சேனையைச் சேர்ந்தவர்களுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தவன் கர்ண மாமன்னன் ஆவான்.இவன் கொடைக்குணத்திலே மிகவும் சிறந்தவனாகவும் நட்பிற்கு இலக்கம் வகுக்கின்றவனாகவும் விளங்கியவன்.
       இவன் குந்தி தேவிக்கும் சூரிய பகவானுக்கும் பிறந்த குழந்தையாவான்.இவன் குந்திதேவியின் சிறிய பிராயத்தில் சூரிய பகவானின் அருளால் பிறந்தவன் ஆவான்.மறைமுகமாகப் பிறந்த இந்த குழந்தையை தன்னோடு வளர்க்க எண்ணாது அதனை பழிபாவத்திற்கு அஞ்சி ஒரு பேழையில் இட்டு ஆற்றில் விட்டு விடுகின்றாள்.கங்கையாற்றின் வழியாக இந்தப் பேழை வந்து கொண்டிருந்தபோது அங்கே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அதிரதன் என்கிற தேர்ப்பாகன் அந்தப் பேழையைக் கண்டு எடுக்கின்றான்.
  திறந்து பார்க்கின்றபோது,அதிலே கவச குண்டலங்களோடு அழகிய ஆண் மகவு ஒன்று இருப்பதனைக் காணுகின்றான். 
       அந்தப் பிள்ளையை எடுத்து தனது மனைவியிடம் காட்டுகின்றான்.
       அவர்களுக்கு மகப்பேறு இல்லாததினால் தாமே வளப்பதற்கு ஆசைப்படுகின்றாள் அவனுடைய மனைவி.
     எனவே,அப்பிள்ளைக்குக் கர்ணன் என்கிற பெயரிட்டு தமது சுவீகாரப் பிள்ளையாக வளர்க்கின்றனர்.
      கர்ணன் போர்க்கலையிலும், கல்வி பயில்வதிலும் ஆர்வம் மிகக் கொண்டவனாக விளங்கினான்.கர்ணனுக்கு சூரிய புத்திரன்,ராதேயன் என்கிற பெயர்கள் வழங்கப்படுகிறது.
        துரோணரிடம் சென்று சகல கலைகளையும் கற்க விரும்பினான் கர்ணன்.ஆனால் கர்ணன் தேரோட்டி யின் மகன் என்பதறிந்து துரோணர் அவனைத் தமக்கு மாணவராக ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்தார்.
      எனவே, கர்ணன் பரசுராமரிடம் சென்று தம்மை சீடனாக னக்கியப்படுத்திக் கொண்டான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jeevitha_krishnan&oldid=3327199" இலிருந்து மீள்விக்கப்பட்டது