V1 Murder Case 2019-ஆம் ஆண்டில், பாவேல் நவநீதன் இயக்கத்தில் வெளிவந்த V1- Murder Case துப்பறியும் த்ரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் பாவேல் நவநீதன்

தயாரிப்பு அரவிந்த் தர்மராஜ்

பாத்திரங்கள் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா

இசை ரோணி ரபேல்

ஒளிப்பதிவு கிருஷ்ண சேகர்

எடிட்டிங் பிரேம் குமார்

வழங்கியவர் பாசிடிவ் பிரிண்ட்; ஸ்டுடியோ

வெளியான நாள் 27 டிசம்பர் 2019

நாடு இந்தியா

மொழி தமிழ்

திரைவிமர்சனம் கதையின் துவக்கமானது, பணி முடித்து இரவு தனியாக வீடு திரும்பும் நர்மதா (காயத்ரி) மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கினை மேற்கொள்ளும் தடயவியல் அதிகாரி லூனா (விஷ்ணுபிரியா) என்பவரால் கொலை பற்றிய காரணம் விசாரிக்கப்படுகிறது. குற்றத்தின் பின்னணி சரிவர தெரியாத காரணத்தால், அதே துறையில் பணியாற்றும் தனது நண்பரான அக்னி (அருண்காஸ்ட்ரோ) என்பாரின் உதவியினை நாடுகிறார். நிக்டோபோபியா (இருட்டினை கண்டால் ஏற்படும் பயம்) சிகிச்சை பெற்று கொண்டிருப்பதால் வழக்கில் ஆர்வமின்றியும், தன் தோழியிடம் வெறுப்பினையும் காண்பிக்கிறார். ஒரு கட்டத்தில் வழக்கினை ஏற்று விசாரணை செய்கையில், கொலையுண்ட பெண் 6 மாதங்களாக தனது ஆண் நண்பர் இன்பா (லிஜேஸ்) என்பாருடன் வசித்து வந்ததும், இன்பா-வை காட்டிலும் அந்தஸ்து பேதங்களில் உயர்ந்த பின்னணி உடையவர் என்பதையும், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்திருப்பதையும் அறிகின்றனர். இன்பா கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகித்து விசாரிக்க சென்ற பொழுது, அவரது இல்லத்தில் இறந்த நிலையில் இருப்பதை கண்டு, அவர் மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதிலிருந்து, மீண்டும் கொலை வழக்கினை தொடர்ந்து விசாரிக்கின்றனர். பல்வேறு யுக்திகளில் பலவாறான விசாரணை மேற்கொள்கின்றனர். இறுதியாக, கொலையாளியினை கைது செய்தனரா, அக்னி தனது இருட்டு பயத்திலிருந்து மீண்டாரா என விறுவிறுப்பான கதைக்களத்தில் வித்தியாசமான முயற்சிகளையும், சிறந்த நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தியிருப்பது கதைக்கு பலம் சேர்த்திருக்கின்றது. கதாபாத்திரங்கள்

ராம் அருண் காஸ்ட்ரோ - அக்னி

விஷ்ணு பிரியா - லூனா

காயத்ரி - நர்மதா

லிஜேஸ் -

இன்பா

மைம் கோபி

ராமசந்திரன் துரைராஜ்

லிங்கா தயாரிப்பு பாவேல் நவநீதன் தனது கதையினை திரைப்படமாக்க கடின முயற்சிகள் செய்து, பல தயாரிப்பாளரிடமும் கதையினை விளக்கி, பல்வேறு சிரமங்களுக்குப்பிறகு மேற்கூறிய தயாரிப்பளர் பெற்ற பிறகு இக்கதையினை திரைப்படமாக்கப்பட்டது. ராம் அருண் காஸ்ட்ரோவும் (கடைசியாக ஒட்டத்தூதுவன் படத்தில் நடித்தவர்) மற்றும் மலையாள நடிகை விஷ்ணு பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெளயீடு இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் பெற வெளியிடப்பட்டது. காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியாவின் நடிப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய முதல் பகுதி, மற்றும் பாடல் பற்றாக்குறை காரணங்களால் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஐந்து நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களை வழங்கியது. ஆனால் படத்தின் இரண்டாம் பகுதி ஒரு த்ரிலரின் முக்கிய கூறுகள் இல்லாததால் விமர்சிக்கப்பட்டது. ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரே காட்சியினை வெவ்வேறு விதங்களில் கூறும் காட்சிகளை இந்து பத்திரிக்கை பாராட்டியது. ஆனால் திரைக்கதை மற்றும் சில காட்சிகளின் நம்பகத் தன்மையினை விமர்சித்தது. டெக்கான் கிரானிக்கிள் காஸ்ட்ரோ மற்றும் விஷ்ணுபிரியா நடிப்பினை பாரட்டியுள்ளது.


Reference: https://en.wikipedia.org/wiki/V1_(film)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:K.Damodaran&oldid=3908964" இலிருந்து மீள்விக்கப்பட்டது