க.பவன் (K.Pavan) இன் முழுப்பெயர் கந்தசாமி இதயபவன் (Kanthasami Ethayapavan) ஆகும். தமிழ் ஊடகவியலாளரான இவர் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிறந்தார். சுமார் ஒரு தாஸாப்தத்திற்கு மேலாக ஊடகத்துறையில் சேவையாற்றிவருகிறார். பல்வேறு தமிழ் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் பணியாற்றிய இவர் ஒரு இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பாடல் துறை (Journalism and Mass Communication)பட்டதாரியாவர். சிறுவயது தொடக்கம், க.பவன் தமிழ் எழுத்து துறையில் ஆர்வம் கொண்டிருந்ததன் பயனாக ஊடகத்துறையில் பிரவேசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. புகைப்பட பிடிப்பில் க.பவன் கொண்டிருந்த திறமை இவர் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொள்ள வழிவகுத்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:K.Pavan&oldid=1108159" இலிருந்து மீள்விக்கப்பட்டது