KADDUVAN
Joined 19 அக்டோபர் 2011
யாழ்நகரின் வடக்கில் பன்னிரண்டு மைல் தொலைவில் தெல்லிப்பழை என்னும் அழகிய கிராமம் உள்ளது.இதனை அண்மிய சிற்றூர் கட்டுவன். இது நீர்வளம்,நிலவளம்,கற்றோர்வளம்,சான்றோர்வளம் எனபல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த செம்மண் நிலப்பரப்பாகும்.
மேற்கே காங்கேசன்துறை வீதி,கிழக்கே பலாலி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை கொண்டபெருநிலப்பரப்பில்.மயிலிட்டி,குப்பிளான்,குரும்பசிட்டி,புன்னாலைகட்டுவன்,
சுன்னாகம்,மல்லாகம் என அயலூர்களை எல்லையாக கொண்ட ஊராகும்.
- இந்தியாவின் ஆதிகுடிகளாகிய குட்டுவர்கள் வாழ்ந்த பிரதேசம்
- ஆகயால் குட்டுவனூர் என அழைக்கப்பட்டு பின் மருவி
- கட்டுவன் ஆனது. என்று வரலாறு கூறுகின்றது.