KRISH YADHAV
மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757) முதன்முதலாக தென்னிந்தியாவில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சுதந்திர போராட்ட வீரா் ஆக திகழ்ந்தார். அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் என்னும் சீமையில் பிறந்தார்.சின்ன அழகுமுத்து கோன் 1729ஆம் ஆண்டு ஜனவரி 24 ம் நாள் பிறந்தார். வீர அழகுமுத்து கோனுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11 தமிழ்நாடு அரசால் விழா நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆட்சி செய்த மாமன்னர் அழகுமுத்துக்கோனார் இராணி அழகுமுத்தம்மாள் ஆகிய இணையருக்கு பிறந்த அழகுமுத்து சகோதரர்கள் எனப்படும் இவர்கள் மூத்த சகோதரர் வீர அழகுமுத்துக்கோன் எனவும் இளைய சகோதரர் சின்ன அழகுமுத்து எனவும் அழைக்கப்பட்டனர்.எட்டயபுரம் மன்னர் ஜெகவீரராம பாண்டிய எட்டப்ப மன்னரிடம் நட்பு கொண்டிருந்தனர்.அழகுமுத்து சகோதரர்கள் எட்டயபுரம் பாளையத்திற்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டனர்.1750 ஆம் ஆண்டு தந்தை மாமன்னர் அழகுமுத்துக்கோன் இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்டு அனுமந்தகுடியில் மரணம் அடைந்தார்.இதனையடுத்து மூத்த சகோதரரான மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டிக் கொண்டார்.1750 ல் ஆங்கிலேய அரசு,பாளையங்களில் வரி வசூலிப்பதற்காக வசூல் அறிக்கையை வெளியிட்டது.இதனை கண்ட சின்ன அழகுமுத்து யாதவ், வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் கப்பம் ஏதும் கட்ட முடியாது என கூறி ஆங்கிலேயர்களை சீண்டினார்.இதனால் கோபமடைந்த ஆங்கிலேய கம்பெனி எட்டயபுரம் மீது போர் தொடுத்தது.ஜெகவீரராம பாண்டிய எட்டப்பருக்கு எட்டயபுரம் உயிர் என்றால் கட்டாலங்குளத்தை உடலாக மதிக்கக்கூடியவர்.எட்டயபரம் மன்னருக்கு உதவுவதற்காக அழகுமுத்து சகோதரர்கள், எட்டையபுரம் பாளையத்திற்கு தலைமை தாங்கி 1750 முதல் 1755 வரை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டனர்.1755ல் நடந்த போரின் முடிவில் சின்ன அழகுமுத்து யாதவ் துப்பாக்கியால் சுடப்பட்டு பெருமாள் கோவில் வாசலில் வீர மரணம் அடைந்தார்.1750ல் ஆங்கிலேயர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்ன அழகுமுத்து தொடங்கிய போரே 1755ல் அவருக்கு முடிவைத் தேடித் தந்தது.அதனைத்தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கும் பாளையக்காரர்களுக்குமிடையே பல போர்கள் நடந்தன. பிறகு 1757ஆம் ஆண்டு மற்றொரு போரில் கான்சாகிப் என்ற ஆங்கிலப் படைத்தளபதியின் சூழ்ச்சியின் காரணமாக பெத்தநாயக்கனூர் கோட்டையில் இரவு பொழுதில் மாவீரன் அழகுமுத்துக்கோன் கைது செய்யப்பட்டு நடுகாட்டூர் என்னும் இடத்தில் பீரங்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றும் 248 போர் வீரர்களையும் 6தளபதிகளையும் கொன்று குவித்தனர். வருடம் தோறும் ஜூலை 09 சின்ன அழகுமுத்து யாதவ் பிறந்த தினமாக பொங்கல் வைத்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.தமிழக அரசு சார்பில் ஜூலை 11 ம் நாள் வருடம் தோறும் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.
மன்னர் வீர அழகுமுத்துக்கோன் பிறப்பு ஜனவரி 23 1728 கட்டாலங்குளம் இறப்பு 18 நவம்பர் 1757 நடுக்காட்டூர் தேசியம் Indian பணி சுதந்திர போராட்ட வீரா், குறுநில மன்னர்.மாவீரன் அழகுமுத்து கோன் (1710-1757): வேறொரு மொழியில் படிக்கவும் இந்தப் பக்கத்தைக் கவனிக்கவும் தொகு Learn more இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ அழகு முத்துக்கோன் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) Learn more இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் மாவீரன் அழகுமுத்துக் கோன் (1728-1757):
தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன் (1728-1757) ஆவர் . அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார். பிரிட்டிஷ் மற்றும் மருதநாயகம் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டார் . தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவரைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவரது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். `தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.மாவீரன் அழகுமுத்துக் கோன் 1757 இல் பீரங்கியின் மூலம் கொல்லப்பட்டார். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. . இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, தமிழ் சமூகம் பெருமை தேடிக் கொண்டது.
மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிவந்த தகவல்
மாவீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாறு உலகறிய பல்வேறு தரப்பினர் உதவி இருக்கின்றார்கள். அதைப்பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த, பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்கிற திரைப்படம் வெளிவந்தது. அப்போது இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த பாத்திரமான எட்டப்பன் பிறந்த கிராமமான எட்டயபுரம் பற்றி காட்டப்பட்டது. இதை கண்டு மனம் வருந்திய எட்டயபுரம் அரசன் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து எட்டயபுரம் சமஸ்தானம் அந்த படத்தில் சுதந்திரப்போராட்டத்திற்கு எதிராக சித்தரிக்கப்பட்டதாகவும் அதை சீர் செய்யும் வகையில் தமிழறிஞர் அனைவரும் அந்த களங்கத்தை நீக்க உதவுமாறு கோரினார். இதனையடுத்து தமிழறிஞர்கள் எட்டயபுரம் சமஸ்தான புத்தக சாலையை படித்து ஆராய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கோரினர். இதை ஏற்ற அரசர், புத்தக சாலையை ஆராய அனுமதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து, பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் சாமி தீட்சிதர் என்பவர் 1878ஆம் ஆண்டு எழுதி வம்சிமணி தீபிகை என்கிற புத்தகமும் டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and present என்கிற புக்கங்களில் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற அரசனுக்கு மாவீரன் அழகுமுத்துக்கோன் தளபதியாக இருந்ததாகவும் அழகுமுத்துக்கோன் இல்லை என்றால் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் இல்லை என்று அந்த புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்த கால கட்டம் 1750என்று கருதப்படுகிறது. இந்த குறிப்புகள் பின்னர் தினமனி நாளிதழில் கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்ற பகுதியில் வெளி வந்தது. இதேபோல்,1976 ஆம் ஆண்டு எட்டயபுரம் வரலாறு என்கிற புத்தகத்தில் 65 பக்கம் வீரன் அழகுமுத்துக்கோன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்வைக்காரன் பட்டம் சேர்வைக்காரன் பட்டம் பெற போட்டிகள் உள்ளன. அவற்றில் வாள்வீச்சு, காளை அடக்குதல் ,மல்யுத்தம் போன்ற பல போட்டிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்றால்தான் சேர்வைக்காரன் என்ற பட்டம் வழங்கப்படும். இதுபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் வெற்றி பெற்று திருமலைநாயக்கர் அரசரிடம் சேர்வை என்கிற பட்டம் பெற்றார். அதேபோல், மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் யாதவ குலத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது.