Kadhar24
Joined 28 சனவரி 2011
தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ? என்னவிதமான தமிழர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் எந்த பிரட்சனைகாவது தீர்வு வேண்டும் என்று ஆர்வம் காட்டியிருக்கிறர்களா? எந்த மனிதன் எப்படி போனால் என்ன ? நமக்கு சாப்பாடு கிடைக்கிறதா உடை ,உறைவிடம் கிடைக்கிறதா? அது போதும் .தனது தெருவில் சக மனிதன் சண்டை இட்டு கொண்டால் கண்டும் காணாமலும் செல்லும் ,நம் தமிழ் சமூகம் எப்படி? சக மாநிலங்களிலோ ,சக நாட்டிலோ மற்றோர் தமிழனுக்கு பிரச்சினை என்றால் பொங்கி எழுவான் ?இவன் இப்படி ஆனதற்கு யார் காரணம்?இவனுக்கு சுரனையோ ,மொழி உணர்வோ ,மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சம் கூட இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ?சக தமிழர்கள் அநியாயமாக பாதிப்படைவதை பார்த்து அதனால் மனம் பாதிக்கப்பட்டு தனது உள்ளக்குமுறலை வெளிபடுத்திய தமிழர்களை இந்த அரசு ஜெயில்ளில் வைத்து அழகு பார்க்கிறது .என்ன விதமான தமிழர்கள் உருவாகவேண்டும் ?என இந்த அரசு எதிர்பார்கிறது? தமிழர்கள் சிந்திக்க கூடாது ,எந்த பிரச்சனைக்கும் செல்லக்கூடாது .நாங்கள் கொடுக்கும் டாஸ்மாக் சரக்கை அருந்தி விட்டு ,நாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் அரிசியை சாப்பிட்டு விட்டு ,நாங்கள் கொடுக்கும் இலவச தொலைக்கட்சியில் ,நாங்கள் தயாரிக்கும் மானாட மயில்லாட நிகழ்ச்சியை பார்த்து வாழ்வை ஓட்டி விட வேண்டும் .இதை தானே ஐயா ,நீங்கள் எதிர்பார்க்கிரிர்கள் ? உங்கலை நம்பி எங்கள் குழந்தைகளை உங்கள் அரசுப் பள்ளியில் கல்வி கற்க அனுப்பிகிறோம். என்ன விதமான கல்வியை நீங்கள் எங்கள் குழைந்தைகளுக்கு கற்றுக் கொடிப்பிர்கள் .வளர்ந்த மனிதனாகிய எங்களையை உணர்வில்லாமல் ஆக்குவதற்கு என்ன உண்டோ?அதை செய்கிறிர்கள் .பாவம் எங்கள் குழந்தைகள் சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும்படியான ஒரு வாழ்வை அவர்களுக்கு கொடுத்து விடாதிர்கள்.உங்கள் வாரிசுக்காவது சிந்திக்கும் கல்வி முறையை கொடுத்து அவர்கள் நன்றாக வாழ நன்றாக ஆள முயற்சி எடுப்பிர்களா ?அதைத் தானே செய்கிறிர்கள் . தமிழ் சிங்கங்கலே கருத்தை படித்து பகிரவும் .நன்றி .
Posted by kadhar24 at 11:38 PM 0 c