சிங்கப்பூர் இம்பியா (Singapore Imbiah Lookout) வரலாறு இம்பியா, 1980-இல் செந்தோசாவில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய சுற்றுலாத் தளமாகும். 2003-ல் தான் இதற்கு ‘இம்பியா பார்வையிடம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. பொதுவாக, செந்தோசாவின் பரப்பளவில் 30% இம்பியாவின் பரப்பளவாகும். ஆனால், தற்போது 20% பரப்பளவுதான் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல இடங்கள் உள்ளன.

புலி வான் கோபுரம் (Tiger Sky Tower) கார்ல்ஸ்பர்க் வான் கோபுரம் என்று இக்கோபுரத்தை அழைத்தார்கள். அதற்குப் பின்புதான் டைகர் வான் கோபுரம் என்று அழைத்தனர். இக்கோபுரம் தரையிலிருந்து 110 மீட்டர் உயரம் கொண்டது. கடலின் மட்டத்திலிருந்து பார்க்கும்போது இதன் உயரம் 131 மீட்டர் ஆகும். கீழ்த்தளத்திலிருந்து மேலே பார்க்கும்போது வட்ட வடிவத்தில் ஓர் அறை இருக்கிறது. கண்ணாடிச் சன்னல்கள் இருக்கும் அறையினுள் குளிர்சாதன வசதி உள்ளது. அந்த அறையினுள் 72 பார்வையாளர்கள் அமரலாம். அந்த வட்ட வடிவிலான அறை மெதுவாகச் சுற்றி மேலே செல்லும். மேலே செல்லும்போது செந்தோசா, சிங்கப்பூர், தெற்குத் தீவுகள் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் இக்கோபுரத்தில் நின்றபடி நன்றாகப் பார்க்கலாம். மேலும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் பகுதிகளையும் காணலாம். கம்பி வண்டி, செந்தோசா லூஜ், செந்தோசா பெருவிரைவு ரயில் வண்டி, பேருந்து ஆகியவற்றின்மூலம் இம்பியாவைச் சென்றடையலாம்.

சிங்கப்பூர் அருங்காட்சியகம் (mages of Singapore (museum)) இது ஒரு சரித்திர அருங்காட்சியகம். இங்குச் சிங்கப்பூரின் சரித்திரத்தைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். 1893-1950 வரைக்கும் இம்மையம் இராணுவ மருத்துவமனையாகச் செயல்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இது சிறந்த கலாச்சாரப் பாரம்பரிய மையம் என்ற விருதை வென்றுள்ளது. பிரித்தானிய காலனித்துவம், ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைப் பற்றிய செய்திகளையும் சர் தாமஸ் ஸ்டாம்போர்டு, சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ ஆகியோர்களைப் பற்றிய செய்திகளையும் அருங்காட்சியகத்திலுள்ள கண்காட்சிகளில் காணலாம். இது சிங்கப்பூர் சிங்கத்திற்குப் பக்கத்திலும் செந்தோசா கம்பி வண்டி நிலையத்திற்கு அருகிலும் உள்ளது. இது சிங்கப்பூரின் அன்றிலிருந்து இன்று வரை உள்ள வரலாற்றைப் பற்றி எடுத்துக்காட்டுகிறது.

வண்ணத்துப்பூச்சி மற்றும் பூச்சிகள் பூங்கா (Butterfly Park and Insect Kingdom) வண்ணத்துப்பூச்சி பூங்காவானது இயற்கை வளம் பொருந்திய அழகிய பூங்காவாகும். இங்கு 15000 க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் வாழ்கின்றன. மேலும், இவ்வண்ணத்துப் பூச்சிகளில் 50 க்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இந்த வண்ணத்துப் பூச்சிகள் 25 மில்லிமீட்டர் முதல் 150 மில்லி மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. பூச்சிகள் பூங்காவில் 3000 இன அரிய வகைப் பூச்சிகள் இருக்கின்றன.


செந்தோசா நாற்பரிமாணப் பகுதி (Sentosa 4D Adventureland)

தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன் முறையாக நாற்பரிமாணப் பகுதி சிங்கப்பூரில்தான் உள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இச்சாகசப் பகுதி துவங்கப்பட்டது. இதை அமைப்பதற்கு 3.5 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது. இங்கு அமர்ந்து படத்தைப் பார்க்கும்போது உண்மையாக நடப்பது போன்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும். அதாவது, காட்டுப் பகுதிக்குள் போவது போன்று காட்சி வந்தால் நாமும் அக்காட்டுப் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வு இருக்கும். உலகிலுள்ள ஒவ்வொரு தீம் பூங்காவிலும் ‘பயணம் 2’ நகைச்சுவை உணர்வுள்ள காட்சி காண்பிக்கப்படுகிறது. செந்தோசா திரையரங்கம் (Sentosa Cine Blast)

இத்திரையரங்கம் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் பெரிய திரை ஒன்று இருக்கிறது. இங்குக் காட்டப்படும் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்ம்மறந்து பார்க்க வைக்கும். மெகாசிப் சாகசப் பூங்கா (MegaZip Adventure Park)

மெகாசிப் சாகசப் பூங்கா இம்பிய மலையின் உச்சியில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகவும் நீளமான, ஆழமான பகுதியில் செல்லக்கூடிய கயிறு கொண்டு அமைந்தது இச்சாகசப் பூங்காவாகும். இப்பூங்காவில் 12 மீட்டர் நீளமுள்ள கயிறு பயிற்சியும் வான்குடை பயிற்சியும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் சவாலான சுவர் ஏறும் விளையாட்டும் உள்ளது.

செந்தோசா லுஜ் மற்றும் வான் சவாரி (Sentosa Luge & Skyride)

செந்தோசா லுஜ் மற்றும் வான் சவாரியில் சுய திசைமாற்றியும், ஈர்ப்பால் இயங்கும் மூன்று சக்கர வண்டியும் உள்ளன. மலையிலிருந்து வேகமாகக் கீழிறங்க மோட்டார் இல்லாத வண்டி நியூசிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கீழிருந்து பார்த்தால் வான் சவாரி செய்பவர்கள் மிகவும் உயரத்தில் தெரிவர். இது சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் சுற்றுப்பயணிகள் அதிகம் இங்கு வந்து நம் சிங்கை வரலாற்றையும் கண்கொள்ளாக் காட்சிகளையும் பார்க்கின்றனர். இதனால் நம் சிங்கப்பூரின் பொருளாதாரம் வளர்கிறது. நம் நாடு மிகவும் செல்வச் செழிப்புடனும் வளர்ச்சியுடனும் திகழ்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kailasanpooja04&oldid=2251145" இலிருந்து மீள்விக்கப்பட்டது