டெங்கி காய்ச்சல்''''தடித்த எழுத்துக்கள்'


டெங்கி காய்ச்சல் என்றால் என்ன?

   * இது ஒரு வைரஸ் கிரிமியினால் ஏற்படும் காய்ச்சல்.
   * இவ்வகை காய்ச்சல் ஏடிஸ் இஜிப்டி வகை கொசு கடிப்பதினால் 

பரப்பப்படுகிறது.

   * இவ்வகை கொசு கடித்த  5 அல்லது 6 நாட்கள் கழித்து இந்த காய்ச்சல் 

ஏற்படுகிறது.

   * இவ்வகை காய்ச்சல் இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு 

காய்ச்சல், மற்றொன்று இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல்

   * டெங்கு காய்ச்சல் ஒரு மோசமான நோய், ப்லூ போன்று சுகாதார கேட்டினை 

விளைவிக்கும்.

   * இரத்தப்போக்குடன் கூடிய டெங்குகாய்ச்சல் மிகவும் மோசமான நோய். இவ்வகை
காய்ச்சல் மரணத்தையும் விளைவிக்கும்.
   * டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் 

இருக்குமோ எனத் தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் அடையாள, அறிகுறிகள்

   * திடீரென மிக அதிகபடியான காய்ச்சல் ஏற்படுவது.
   * தாங்கிக் கொள்ள முடியாத முன்தலைவலி
   * கண்களின் பின்புற வலி தோன்றும். இது கண்களின் அசைவையும் 

கடிணமாக்கும்.

   * தசை மற்றும் மூட்டுவலி ஏற்படும்.
   * ருசியை உணரும் தன்மை மற்றும் பசி ஏற்படுவது குறையும்.
   * மார்பு மற்றும் கைகளில் தட்டமை போன்று தழும்புகள் எற்படும்.
   * குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலின் அடையாள அறிகுறிகள், அதிர்சி (அ)

நிலைகுலைவுக்கான அடையாள அறிகுறிகள்.
   * டெங்கு காய்ச்சலுக்கான அனைத்து அறிகுறிகளும் காணப்படும்.
   * தொடர்ச்சியான தாங்கிக்கொள்ள முடியாத வயிற்றுவலி.
   * சருமம் வெளிர்தல், சில்லிட்டுப்போதல் மற்றும் பிசுபிசுப்புத்தன்மை 

ஏற்படும்.

   * மூக்கு, வாய், பல் ஈறுகள் மற்றும் தோலில் உள்ள கொப்புளங்களிலிருந்து 

இரத்தம் வடிதல் ஏற்படும்்

   * இத்துடனோ அல்லது இரத்தம் இல்லாமலோ அடிக்கடி வாந்தி பண்ணுதல்.
   * தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை ஏற்படும்.
   * தாகம் ஏற்படும் மற்றும் நாவு வரண்டுபோகும்.
   * வேகமான (படபடவென) பலவீனமான இரத்த நாடி காணப்படும்.
   * சுவாசிப்பதில் கடிணத்தன்மை ஏற்படும்.

டெங்கு காய்ச்சல் பரவுதலின்சுழற்சி இந்தியாவில் டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை

   * இந்தியாவின் எல்லா மாநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்நோய் 

பரவலாக காணப்படுகிறது.

   * திடீரென இந்நோய் வரவும் சூழ்நிலைமகாராஸ்டிரா மற்றும் கர்நாடகாவின் 

கிராமப்புரங்களில் மிக அதிகமாக உள்ளது என அறிக்கைகள் தெறிவிக்கின்றன.

இந்நோய்தொற்றக்கூடிய காலம்

   * டெங்கி காய்ச்சல் கண்ட நபரினால் இந்நோய் உண்டாவதற்கு 6 முதல் 12 மணி 

நேரத்திற்கு முன்னரே இவ்வகை டெங்கு காய்ச்சலை பரப்பி வைரஸ் மனிதனின் உடலிருந்து அந்த நபலை கடித்த கொசுவின் உடலுக்குள் சென்று அக்கொசுவில் 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் அக்கொசு மற்றொருவரை கடிக்கும் போது கொசுகடிப்பட்ட நபருக்கு டெங்கு காய்ச்சல் தோன்றுகிறது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நபரின் வயது மற்றும் இனம்

   * எல்லா வயதினர் மற்றும் இருபாலினத்தாரும் பாதிக்கப்படுகின்றனர்.
   * இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் திடீரென ஏற்படும்போது 

குழந்தைகள் இறப்பது மிக அதிகமாக காணப்படுகிறது.

டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு நோய்பரப்பும் காரணிகள்

   * ஏடிஸ்இஜிப்டி வகை கொசு டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு 

காய்ச்சலை பரப்புகிறது.

   * இது சிறிய கருப்பு வெள்ளை, வெள்ளை நிற கோடுகளை கொண்ட சுமார் 5 மில்லி
மீட்டர் அளவிலான ஒரு கொசு
   * இந்த வகை கொசக்களின் உடலில் 7 முதல் 8நாட்களில் டெங்கு காய்ச்சலை 

பரப்பும் வைரஸ் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்கிறது. பின்னர் இந்நோயினை மற்றவருக்கு பரப்புகிறது.

உணவுப்பழக்கம்

   * இவ்வகை கொசுக்கள் பகல் வேளைகளில் கடிக்கும்.
   * முக்கியமாக வீட்டிலும், வீட்டைச்சுற்றியுள்ள மனிதர்களின் இரத்தத்தை 

உட்கொண்டு வாழக்கூடியவை.

   * திரும்பத் திரும்பக் கடிக்கும் தன்மை கொண்டவை.

Cretid by : A. Kalaiarasan DCH.., ICT..,''''தடித்த எழுத்துக்கள்'

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalaiarasan~tawiki&oldid=1841608" இலிருந்து மீள்விக்கப்பட்டது