ஆளி என்னுமொரு விலங்கு பெரிய மலைப் பக்கத்தில் ஆளி என்னுமொரு விலங்கு திரியும் அது கொல்ல வல்ல நகங்களையும் அழகிய கோடுகளையும் உடையதாய் விளங்கும். வலிய களிற்றி யானையை இரையெனக் கொள்ளும் யானையைப் பற்றி இழுத்துச் செல்லும் வலிமையுடைய இந்த விலங்கு நெருங்குதற்கரிய காட்டின்கண் வாழும் என்பதை " ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்,

 மீளி  வேழத்து நெடுந்தகை புலம்ப
 ஏந்தல் வெண்கோடு வாங்கி குருகு அருந்தும்
 அஞ்சுவரத் தகுந ஆங்கண்........(அகம்.381:1-5) என்று மதுரை இளங்கெளசிகனார் குறிப்பிடுகிறார்.  இச் செய்தி நற்றிணை 205 ஆம் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. சீவக சிந்தாமணியில் 

முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானை தலைநிலம் புரள வெண்கோடு உண்டதே போன்று.... என்று இடம் பெற்றுள்ளது.. ஆளி என்பது யாளி என்பதி திரிபாக இருக்கலாம் (யாறு-ஆறு, யாண்டு-ஆண்டு) எனினும் ஆளி மிக்க வ்லிமை உடையதாகச் சுட்டப்படுகிறது. ஆண் ஆளி ( ஒருத்தல்) களிறு வருந்துமாறு அதன் ஏந்திய தந்தத்தை பிடுங்கி அதன் குருத்தைத் தின்னும் என்றும் கண்டார்க்கு அச்சம் தரக் கூடியது என்றும் இலக்கியங்கள் சுட்டுகின்றன. ஆளியைச் சிங்கத்தில் ஒரு வகை என்றும் குறிப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalappiran&oldid=841149" இலிருந்து மீள்விக்கப்பட்டது