"சித்த மின்காந்த அலைகள்":

மின் காந்த அலை என்பது மின் மற்றும் காந்த அலை இணைந்த கலவை ஆகும்.நாம் பள்ளியில் மின் காந்ததூண்டல் முறை பற்றி படித்திருப்போம்.அதன் படி ஒரு இரும்பு ஆணியை சுற்றி கம்பி சுருளை சுற்றி அந்த கம்பி சுருளுக்கு மின்னோட்டம் அளிக்கும் போது அந்த இரும்பு ஆணியானது காந்தமாக வேலை செய்யும், அது போல கோள்களை சுற்றி ஒளி அலைகள் தொடர்ந்து சுற்றி வருவதால் கோள்கள் மற்றும் விண் பொருட்கள் அனைத்தும் காந்தாமாக மாறியுள்ளது என்றும் அதனாலேயே விண் பொருட்கள் அனைத்தும் ஈர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் வான் காந்த தத்துவம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

             அதன்படி காந்தமாக மாறியுள்ள விண் பொருளிலிருந்து ஈர்ப்பு மற்றும் விலக்கும் குணம் கொண்ட காந்த அலைகள் மற்றொரு விண் பொருளின் ஈர்ப்பின் காரணமாக விடுபட்டு பிரபஞ்சம் முழுவதும் பரவி வருகிறது. அவ்வாறு புவியை வந்தடையும் காந்த அலைகள் புவியிலுள்ள
   ஐம்பூதங்களான நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் உள்ளிட்டவற்றை ஒன்றோடொன்று பிணைத்தும்,பிரித்தும் வைக்கின்றன. இதனால் ஓரிடத்தில் மழையும்,ஓரிடத்தில் வறட்சியும்,இயற்கைப் பேரிடர்களும் உண்டாகின்றது.இதை கணிக்கும் முறை தான் பஞ்சாங்கம் ஆகும்.             வெளியில் உள்ள ஐம்பூதங்களுக்கே இந்நிலை என்றால் மனித உடலிலுள்ள ஐம்பூதங்களுக்கும் மாற்றம் வரும் அல்லவா? அந்த மாற்றமே வளர்ச்சி மற்றும் நோய் என்பதாகும் என்பது சித்த  மருத்துவத்தின் கொள்கை. 
             இவ்வாறு உண்டாகும் நோய்க்கு தீர்வு என்பதும் மின் காந்த கதிர் வீச்சு எனும் விண் ஒளியில் தான் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்,விண் ஒளியில் இருந்து வரும் நிறக் கதிர்களை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை செய்து தனக்கு ஒவ்வாத நிறங்களை வெளியேற்றி வருகின்றன ஒவ்வொரு விண் பொருட்களும்,அவ்வகையில் ஒத்த நிறத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு விண் பொருளும் ஒரே குணத்தை பெற்றிருக்கும்.அவ்வகையில் கிரகங்களும் நோய்களுக்கு காரணமாக உள்ளது என ஜோதிடம் கூறுகிறது. அந்த குறிப்பிட்ட கிரகத்தின் காந்த அலைகளால் உண்டாகும் நோய்களை அந்த கிரகத்தின் நிறக் கதிர்களை உடலினுள் மாற்றம் செய்ய நோயில் மாற்றம் உண்டாகும். இதற்கு ராசிக்கல் அணிவதை உதாரணமாக கூற முடியும். இதன்படி தான் பல்வேறு பரிகாரங்கள் அமைத்துள்ளனர். 
            இதன்படி தான் கிரகங்களுக்கு பொருந்தும் நவதானியங்கள், உலோகங்கள், என நமது முன்னோர்கள் பகுத்துள்ளனர்.

ஒளிச்சேர்க்கை&நிறம்:

            நடைமுறை அறிவியல் சொல்கிறது "ஒரு பொருளின் நிறம் என்பது அப்பொருள் தன்னை சுற்றி உள்ள ஒளியில் உள்ள நிறங்களை உறிஞ்சி பிரதிபலிக்கும் ஒளியே" என்பதாகும். இதுவே நிறக்கோட்பாடாகும்.
            இதன்படி ஒவ்வொரு விண் பொருளும் பஞ்ச பூத கலப்பால் ஆனவை.அந்த கலப்புகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு விண் பொருளும் ஒளியை உறிஞ்சி ஒவ்வொரு நிற ஒளியை உமிழ்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு நிறத்தை வெளியிடுகின்றன.
             அவ்வாறு கிரகங்கள் வெளியிடும் நிறத்திற்கு ஏற்ற நிறங்களை வெளியிடும் இரத்தினங்கள்,உலோகங்கள், தானியங்கள், என பகுக்கப்பட்டுள்ளன.

பரிகாரங்களும் காந்த அலைகளும்:

             பரிகாரங்கள் என்றால் முதன்மை வகிப்பது நவ தானியங்கள்.ஒருவருக்கு சூரிய ஒளியால் தோஷம் என்றால் அதற்கு உகந்த தானியமான கோதுமையை தானமாக வழங்க சொல்லும் வழக்கம் உள்ளது. அவ்வாறு வழங்கும் போது நம்மிடம் உள்ள சூரிய ஒளியின் மிதமிஞ்சிய நிறமானது கோதுமையால் உறிஞ்சப்படுகிறது.பின்பு சூரிய கிரகத்தின் பண்புகள் தேவைப்படுவோர் தானமாக பெரும் போது அவருக்கு தோஷம் நீங்குகிறது. அவ்வாறு பரிகாரத்தை செய்வோர்க்கும் சரி பரிகாரத்தை ஏற்ப்பவர்க்கும் சரி தோஷ நிவர்த்தியாகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karthik_kiruthika&oldid=2624550" இலிருந்து மீள்விக்கப்பட்டது