Kavignar sathishkumar
கவிஞர் சதிஷ் அவர்கள் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமத்தில் பிறந்தார் !! பொறியியல் பட்டதாரியான இவர் தம் தமிழ் ஆர்வத்தால் அவ்வப்போது கவிதை எழுதி வந்தார் !! பிறகு குறும் படங்களுக்காகவும் ஆல்பம் பாடல்களுக்கும் வரிகள் கொடுத்துள்ளார் !!
மேலும் முகநூல் நேயர்களுக்காக அவ்வப்போது அவரவர் விருப்பத்திற்கு கவிதைகள் எழுதுவதில் வல்லவர் !!
இவர் பட்டிமன்ற பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது !!!
அவர் எழுதிய சில கவிதை தொகுப்புகள்!!!
ரசிகர்களின் விருப்பதித்திற்காக !!
மக்கள் மனதை உழைப்பால் வென்ற
தல தளபதிக்கு சமர்ப்பணம் !!
அன்று
இரு முகங்களின் அறிமுகம்
எள்ளி நகைத்து
ஏளனம் செய்யாதவர்
எவரும் இலர் !!
ஒருவரின் குரலையும்
மற்றொருவரின் நடனத்தையும்
நேர்படவே
இகழ்ந்த சூழ்ச்சி கும்பல்
இன்று
அவரின் குரலுக்காகவும்
மற்றொருவரின் நடனத்திற்காகவும்
திரையரங்கில்
அலைகடலென பறந்து வரும்
கூட்டத்தை பார்த்து
மிரண்டு நிற்கிறது !!
அன்று
வேண்டுமென்றே
இவர்களை அவமானப்படுத்துவதும்
இழிவுபடுத்துவதும்
தொடர்கதையாக இருந்தன !!
தோல்விகளும் சோதனைகளும்
சூழ்ந்து இருந்தன !!
காலத்தின் கட்டாயம்
அவர்களுக்கு தேவை
அங்கீகாரம்
ஒரே ஒரு வெற்றி
விடாது முயற்சியால்
தன்னம்பிக்கையுடன் போராடினர்
வெற்றியும் பெற்றனர் !!
அவ்வெற்றியை
அவர்கள் மகுடம் சூடாது
தன்
ரசிகர்களுக்கு சமர்ப்பித்து
இருவரும்
தனெக்கென்று தனி
அடையாளம் அமைத்து
நட்சத்திர அந்தஸ்த்து பெற்றனர் !!
வெற்றிகளை தன் ரசிகர்களுக்கு
சமர்பித்தலும்
அவ்வப்போது சறுக்கல்களை
தன் தோள்களில் சுமந்தனர் !!
காலத்தின்
கொடுமை
நண்பர்களாகிய இருவரையும்
பிரித்து வைத்து
அழகு பார்த்தது !!
அன்றைய அறிமுகங்களாகிய
இவர்களின்
இன்றைய அறிமுகத்திற்க்காக
ஏங்காத மனம்
இவ்வையகத்தில் இல்லை !!
இவர்களின் புகழிற்கு
அந்த வானம் எல்லையென்றால்
அது மிகையாகாது !!
கலை என்ற கடல்
உள்ளவரை
தல தளபதி என்ற
புயலின்
தாக்கம் இருந்தே கொண்டேதான்
இருக்கும் !!
மட்டற்ற மகிழ்வடைகிறேன்
இவர்களின் வெற்றியை
கொண்டாடுவதில்
மனநிறைவுடன் !!!
வீசும் காற்றில்
நான்
நேசமென
நேசித்தவள்
என் சுவாசம்
புகுந்து
உறைந்துபோகின்றாள் !!
என்னுள்
அவள் முகம்
கண்டதும் !!
வசியக்காரி
அவள்
விறைத்து நின்றாள்
அவள்
பெயர் சொல்லி
துடித்திடும்
இதயம் கண்டதும் !!
முகநூல் நண்பரின்
விருப்பத்திற்காக !!
உலக தாய்மார்களுக்கு
சமர்ப்பணம் !!
அன்பை கற்பித்தவள்
அன்பால் கட்டிப்போட்டவள் !!
சுமந்தது
பத்து மாதங்கள் என்றாலும்
நிற்க நிலையின்றி
உடலில் ஆதாரமின்றி
பசியில் துடித்ததும்
தன் ரத்தத்தை
உணவாக்கி ஊட்டி
வளர்த்தவள் !!
பெற்றெடுத்தது
ஊனமோ
பைத்தியமோ
கஷ்டப்படாமல்
இஷ்டப்பட்டு
கொஞ்சுபவள் !!
அம்மா
என
மெல்லமாக அழைத்தால்
கேட்டும் கேட்காததை
போல்
விளையாடுவாள்
அம்மாஆ ஆ
என அலறுகையில்
துடித்தே போவாள்
நம் வலி கண்டு !!
செய்தது
தவறே என்றாலும்
விட்டுக்கொடுக்காது
கெட்டியாக
பிடித்துக்கொள்பவள் !!
எத்தனை கோடி செல்வங்கள்
கொண்டு வந்தாலும்
பெற்றக்கடனை
அடைக்க முடியாதென்று
எனக்கு தெரியும் !!!
அம்மா என்று
நான் அழைக்கையில்
நீங்கள் கொள்ளும்
சந்தோசம்
எனக்கு புரியும் !!!
துயரங்கள் தொடர்வண்டியாக
தொடர்ந்து வந்தாலும்
அம்மா என்றவுடன்
உன்முகம் பெரும்
பொலிவு
கோடி சந்தோசம்
எனக்குள் !!
கடமைப்பட்டிருக்கின்றேன்
பத்து மாதம் வயிற்றில்
சுமந்த உங்களை
என் ஆயுள் வரை
நெஞ்சில் சுமப்பதிற்க்காக !!
சுமையாக அல்ல
சுகமாக !!
வணங்குகிறேன் அம்மா
உன்
ஈடற்ற தியாகத்திற்கு !!
பெருமை கொள்கிறேன்
அம்மா என்றழைப்பதற்கு !!!
பெண்மையின் இயல்பும்
நீரின் தன்மையும்
ஒன்றே !!
விடாது அடம்பிடிப்பதில்
மழை நீராகவும்
தொடரும் கவலைகளில்
நதி நீராகவும்
அன்பை வெளிப்படுத்துதலில்
அருவி நீராகவும்
உறவுகளுக்குள் விளையாடுவதில்
கடல் அலைகளாகவும்
சினம் மிகும் நேரத்தில்
வெள்ளமாகவும்
என
பக்குவங்கள் பல
என்றாலும்
குடும்பம் சமூகம் சூழ்நிலை
என
நின்று செல்லும் கரையான்களால்
கானல் நீராய் கரைந்து செல்லும்
அவர்களின்
கனவுகள் ஆசைகள் வெற்றி லட்சியங்களை
காணும் போது
என் விழிகளில்
இரு சொட்டு !!
நண்பரின் விருப்பத்திற்காக !!
வலிமிகுந்த வரிகள்
உங்களுக்காக !!
நிஜமே நிஜங்களை தொலைத்தது ஏனோ
நெஞ்சத்தில் உள்ளதை கொன்றது ஏனோ
பொய்யாக வாழ்வெதென்ன வாழ்வு
மெய்யாக இறப்பதே வாழ்தலின் மீன்பு !!
நீயே நான்
நானே நீ
என்று தினம் சொன்ன
நெஞ்சம் எங்கே ??
உன் கவிதை நான்
என் கவிஞன் நீ
என்று சொன்ன
நெஞ்சம் எங்கே ??
என்னுடன் வா
வாழ்வே நீயென
வாழ்க்கையை வாழுவேன் !!
உன் சந்தோஷம் தொலைந்திட்டால் ,
மண்ணில் நானே
புதைவேன் !!
என் உயிரே நீ
என்று
நானும் சொல்ல மாட்டேனே
வாழும் வாழ்க்கையில்
அதுவே
உனக்கு புரியுமே !!
சேர்ந்து வாழலாம்
அருகில் வா
விழிகள் நோக்கி
விரல்கள் கோர்த்து
என்னை மட்டும் பார்
உண்மை என்ன என்பது
உனக்கு புரியும் !!
நிஜமே நிஜங்களை தொலைத்ததது ஏனோ
நெஞ்சத்தில் உள்ளதை கொன்றது ஏனோ ??
சொர்க்கமே அழைக்கின்றது
நம் காதல் கதை அறிந்து
வேண்டாம் மட்டும் சொல்லாதே
காதல் மறைத்து கொண்டு !!
நம் காதல் சேரவில்லையென்றால்
உலகத்தில் காதல் ஒன்று
இல்லையென்று ஆகுமே !!
கோடி காதல் வெற்றி கொண்ட
பூமியில்
என் காதல் தோல்வியுற வேண்டாமே !!
நெஞ்சம் தொட்டு பார்
அதுவே உனக்கு சொல்லுமே
உலகில் நான் இல்லையென்றால்
உண்ணனால் வாழமுடியாதென்றும் !!
நெஞ்சமே ஒரு முறை மட்டும்
என்னை பார்
அன்பு புரியும் காதல் புரியும்
வாழ்வும் புரியும்
காத்திருப்பேன் என்றும் உனக்காக !!
நிஜங்களை மறைத்து கொண்டு
வாழவே வாழாதே
ஒரு நாள் வாழ்தலும் வாழ்வே
உலகமே வியக்கும் !!
அந்த வாழ்வை கண்டதும் !!
வந்து சேர வேண்டுவேன்
வரம் ஒன்று கிடைத்திட
வரம் கிடைத்தால்
வாழ்வு கிடைத்தால்
நானே முதல்வன்
அன்பை வெல்வேன் நானடி
வந்து சேறடி !!
காத்திருக்கிறேன் நானடி !!