இந்தியாவில் பழந்தமிழ் நாட்டில் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டிலேயே கடலில் கலப்பதும், வருடம் முழுவதும் வற்றாததுமான தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நான்குநேரி வட்டத்தில் முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய கிராமம் கீரன்குளம் ஆகும். இங்கு 10.12.1974 ஆம் ஆண்டு திரு தி.பொன்னையா திருமதி தங்கம்மாள் ஆகியோருக்கு நான்காவதாக நான் [பால்ராஜ்] பிறந்தேன். எனது தொடக்கக் கல்விவை கீரன்குளம் தொடக்கப் பள்ளியிலும், உயர்தொடக்கப் படிப்பை சோமநாதபேரியிலுள்ள நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை வகுப்பு முனைஞ்சிப்பட்டி குரு சங்கர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும்,மேல்நிலைக் கல்வியை மூலைக்கரைப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றேன். ஆசிரியர் பட்டையப் பயிற்சியை முனைஞ்சிப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராட்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் [1993 – 95] முடித்தேன். 2009 ம் ஆண்டு ஜுலை 16 ம் நாள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்ளிடம் ஒன்றியத்தில் வேட்டங்குடியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 2012ம் ஆண்டு ஜுலை 31 முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நல்லாடை ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கானோடையிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலிருக்கும் நேருநகரில் குடியிருந்து வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Keerankulam_Paulraj&oldid=1942433" இலிருந்து மீள்விக்கப்பட்டது