முல்லைக்கேசன்

தொகு

முல்லைக்கேசன் (Mullaikesan) என்ற பெயருடன் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகமாகிய இவர் ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகின்றார். இளங்கவிஞராக விளங்கும் இவர் தன்னுடைய "தூசிகள் படிந்த தேசம்" என்ற கவிதைத் தொகுப்பு வெளியீட்டின் மூலம் ஈழத்துக் கவிஞராக அடையாளப் படுத்தப்படுகின்றார். முல்லைத்தீவு முள்ளியவளை என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் மிகுந்தவராக திகழ்ந்துள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சு, ஓவியம் ஆகிய திறன்களில் மிகுந்த ஆர்வம் மிகுந்த வராக விளங்குகின்றார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறையில்  ஆங்கில மொழி மூலம் இளம் கலைமாணி பாட்டத்தை பூர்த்தி செய்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்திலேயே ஆங்கில மொழி முலம் முது விஞ்ஞான மானிப் பட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார். அதேவேளை வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தில் வருமான பரிசோதகராகவும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். 

Kumarasingam.kamsan
 
பெயர்முல்லைக்கேசன்
Mullaikesan
இயற்பெயர்குமாரசிங்கம் கம்ஷன்
பிறந்த நாள்(1991-01-28)சனவரி 28, 1991
பிறந்த இடம்முள்ளியவளை, முல்லைத்தீவு, இலங்கை.
கல்வி, தொழில்
தொழில்இணையத்தள வடிவமைப்பாளர், மொழி பெயர்ப்பாளர், ஓவியர், ஊடகவியலாளர், வலைத்தள அபிவிருத்தியாளர்.
கல்விபேராதனைப் பல்கலைக் கழகம்
கொள்கை, நம்பிக்கை
சமயம்இந்து சமயம்
தொடர்பு விபரம்
வலைப் பக்கம்www.esurfcompany.com

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

முல்லைக்கேசன் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு, முள்ளியவளை எனும் ஊரில் குமாரசிங்கம், மதிநாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். இவர் முள்ளியவளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் (தற்பொழுது முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை வவுனியா இந்துக் கல்லூரியிலும் நிறைவு செய்து தற்பொழுது பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறையை சிறப்புப் பாடமாக ஆங்கில மொழி மூலம் மேற்கொண்டு, தற்பொழுது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் தகவல் தொழில்னுட்பத்தில் Geo-informatics முது விஞ்ஞானமானிப் (Msc) (Master of science)(Msc in Board of Agriculture Engineering) பட்டத்தினை கற்றுக்கொண்டு இருக்கின்றார். பாடசாலை பருவத்தில் தமிழ்ச் சங்கம் , கலை இலக்கிய சங்கம் ஆகியவற்றின் தலைவராக (2007-2009) இருந்து பல நிகழ்வுகளை நடத்தியுள்ளதோடு, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறையின் தமிழ் மொழிமூல வருடாந்த சஞ்சிகையான புவிச்சாரல் சஞ்சிகையின் உறுப்பினராக இருந்ததோடு (2013) சஞ்சிகைகுழு தலைவராகவும் (2014)விளங்குகின்றார். ஒவியத் திறன் கொண்ட இவர் தேசிய மட்டத்தில் பல ஓவியப் போட்டிகளில் சான்றிதழ்களையும், பரிசில்களையும் பெற்றுள்ளார்.

கல்வி

தொகு

இவர் முள்ளியவளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் (தற்பொழுது முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை வவுனியா இந்துக் கல்லூரியிலும் நிறைவு செய்து தற்பொழுது பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறையை சிறப்புப் பாடமாக ஆங்கில மொழி மூலம் மேற்கொண்டு, தற்பொழுது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் தகவல் தொழில்னுட்பத்தில் Geo-informatics முது விஞ்ஞானமானிப் Msc (Master of science)(Msc in Board of Agriculture Engineering) பட்டத்தினை கற்றுக்கொண்டு இருக்கின்றார்.

வெளிவந்த நூல்கள்

தொகு
  1. கண்ணடிச் சிதறல்கள் (2010)

கவிதைத் தொகுப்பு

  1. தூசிகள் படிந்த தேசம் (2012)

இக் கவிதைத் தொகுப்பு (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-41210-0-3) 2014 இல் வெளியிடப்பட்டது. உள்னாட்டு யுத்தத்தின் பின் வெளிவந்த இன்னூல் ஈழத்தின் சுமைகள் சுமந்த கவிதை தொகுப்பாக உள்ளது.45 கவிதைகளுக்கு மேல் உள்ள இந்த தொகுப்பில் அனைத்துக் கவிதைகளும் நவீன கவிதை முறையில் இலக்கிய நயம் மிகுந்த சொல்லாடல்களுடன் அமைந்துள்ளது. இக்கவிதைத் தொகுப்பு ஒரே நேரத்தில் மின் நூலாகவும், புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

தூசிகள் படிந்த தேசம் மின்னூலைப்] பார்வையிட ISSUU.COM | image =

ஓவியத் திறன்

தொகு

சிறுவயதிலிருந்து ஒவியம் வரையும் இவர் தேசிய மட்டங்களிலான போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார். ஒவியர்களில் கே.கேசன் (K.K.San) என்ற புனை பெயரில் அறியப்படும் இவர் சுவரோவியங்கள், புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள், விளம்பர ஓவியங்கள் எனப் பல வரைந்துள்ளார். 2006 இல் இருந்தே பலபாடசாலைகள் அரச நிருவனங்களின் பெயர்ப்பலகைகள், விழிப்புணர்வு ஓவியங்கள், அலங்கார ஓவியங்கள் எனப் பல சுவரோவியங்களையும், பெயர்ப்பலகைகளையும் வரைந்துள்ளார்.

மொழிபெயர்ப்பு துறை

தொகு

பல்கலைக் கழக கல்வியைத் தொடர்கின்ற காலத்தில் இருந்தே (2010 - இன்று வரை) அரச சார்பற்ற தனியார் நிறுவனங்களில் ஆய்வு உத்தியோகத்தராகவும், மொழிபெயர்ப் பாளராகவும் கடமையாற்றியுள்ளார். தற்பொழுது இலங்கையில் செயப்படும் உலக மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களில் பகுதிநேர மொழிபெயர்ப்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார். மேலும் ஒருசில அரச நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலான மொழிபெயர்ப்பாளராகவும், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்பவராகவும் கடமையாற்றி வருகின்றார்.

2016 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாணத்தை சேர்ந்த பல அரசசார்பற்ற நிறுவனங்களின் ஆய்வு அறிக்கை மொழிபெயர்ப்பாளாராகவும், அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ ஆவண மொழிபெயர்ப்பளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

வலைத் தள வடிவமைப்பு

தொகு

பல்கலைக் கழக கல்வியைத் தொடர்கின்ற காலத்தில் இருந்தே அமைப்புக்கள், வியாபர நிலையங்கள், தனிநபர் போன்றோருக்கான இணையத்தளங்களை வடிவமைத்தல் மற்றும் விருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் பெரும்பாலான வலைத்தளங்கள் சேவை அடிப்படையில் இலவசமாகவும் வியாபார நிலையங்களுக்கான இணையத் தளங்கள் வர்த்தக நோக்கிலும் வடிவமைக்கப்படுகின்றன.

இவரது இணையதளங்கள் நவீன அம்சங்களைகளையும் பண்புகளையும் கொண்டவைகளாக வடிவமைக்கப் படுவதோடு, நவீன உலகின் போக்கைப் பிரதிபலிப்பதாய் அமைகின்றது.

பங்களிப்பு செய்யும் வலைத்தளங்கள்

தொகு
தொ.இல வலைத் தளங்கள் கவிதைகள்
01 எழுத்து.காம் கவிதையைப் பார்வையிட
02 வார்ப்பு கவிதையைப் பார்வையிட
03 நிலா முற்றம் கவிதையைப் பார்வையிட
04 தழிழ் நண்பர்கள் கவிதையைப் பார்வையிட
05 தமிழ் மன்றம் கவிதையைப் பார்வையிட
06 தமிழ் சி என் என் கவிதையைப் பார்வையிட
07 முல்லைக்கேசன் கவிதைகள் கவிதையைப் பார்வையிட

வெளிவர உள்ள கவிதைத் தொகுப்புக்கள்

தொகு
  1. தொலை தூர முற்றங்கள்
  2. பனியின் சுமை

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kumarasingam.kamsan&oldid=3641698" இலிருந்து மீள்விக்கப்பட்டது