பிரமநாயகம்

தொகு

பிரமநாயகம்


பிரமநாயகம் 1963 ஆம் வருடம் இந்தியாவில், தமிழகத்தில் கடையநல்லூர் கிராமத்தில் திரு.ஆறுமுகம் திருமதி.கோமதி தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். சிறு வயது முதல் மிகுந்த துடிப்புடைய சிறுவனாக விளங்கினார்.

தன்னுடைய இளம் வயதில் குடும்பத்தில் வாங்கப் பட்ட தேங்காய் நார் தயாரிக்கும் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதில் இரவு பகல் பாராமல் பாடுபட்டு அந்த நிறுவனத்தின் மீது இருந்த கடனை நீக்கினார். தன்னுடைய இடை விடாத உழைப்பால் அந்த நிறுவனத்தை விரிவாக்கத் தொடங்கினார்.

சமுதாயத்தில் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் இந்த பிரமு.

கொடுப்பதே இன்பம் என்கிற கொள்கை உடையவர் இவர். இந்த வார்த்தைகளை எழுதுகிற எனக்கு சொந்தக்காரர் இவர், கான்சர் நோயை எதிர்த்துப் போராடிய வீரர். தன்னை சுற்றி இருக்கிற பலருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர். அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைய தன்னால் முடிந்ததை செய்தவர். கஷ்டப் படுகையில் தனக்கு என்ன சம்பந்தம் என்றும், ஒதுங்கியும் போகிற உலகத்தில் அவர்களுக்கு பொருள் உதவி, செயலால் உதவி என்று செய்தவர். சிறிய தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தவர். விடா முயற்சி கொண்டவர், சுய சிந்தனை என்பது இவருடைய மூச்சு. தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசுவார் இவர். தன்னுடை வெளிப்படையான பேச்சாலும், சுய சிந்தனைப் படி நடப்பதாலும் பார்க்கிற சிலருக்கு தலைக்கனம் பிடித்தவர் போல தோன்றுவார் இவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Laxmiraajan&oldid=1012821" இலிருந்து மீள்விக்கப்பட்டது