M.Arvindd Shanmugam
Joined 18 நவம்பர் 2015
முத்துராமன் அரவிந்த் சண்முகம் (Muthuraman Arvindd Shanmugam) அல்லது அரவிந்த், கிறுஸ்து பல்கலைகழகம். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் (B.Com) பயின்று வருகிறார். தனது பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் 99/100 பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்தார். அனைத்து மொழிகளிலும் உள்ள சிறந்த திரைப்படங்களை காண்பது, புத்தகங்கள் வாசிப்பது இவரது பொழுதுபோக்குகளாகும். பங்குச் சந்தைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், வாரன் பஃபட்டை தனது முன்மாதிரியாகக் கொண்டுள்ளார்.
பிறப்பு :
இவர் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி சிதம்பரம் நகரில் பிறந்தார். இவரது தந்தையார் முத்துராமன் லட்சுமி செராமிக்ஸ் குழுமத்தின் நிறுவனர் தலைவர் ஆவார். இவரது தாயார் திருமதி கற்பகம் கணித பட்டதாரி ஆவார். வணிக பாரம்பரியமுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்தில் பிறந்தார். தனது தாத்தா சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்ததனால் தான் தாம் சிதம்பரத்தில் பிறந்ததாகக் கூறுகிறார் அரவிந்த். 1999 ஆம் ஆண்டு முத்துராமன்- கற்பகம் தம்பதியினருக்கு அழகு என்ற மகள் பிறந்தாள்.
இளமை :
தனது தந்தை கோவையிலே ஒரு தொழிற்சாலை வைத்திருந்ததால் அவரது இளம் பருவம் முழுவதும் அங்கேயே கழிந்தது. அவர் அங்குள்ள லிஸ்யு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் அவரது குடும்பமும் பள்ளியருகிலுள்ள பாரதி பார்க்கிற்கு இடம் பெயர்ந்தனர். அங்கே அன்னப்பூர்னா அப்பார்ட்மெண்ட்ஸில் சுமார் 8 ஆண்டு காலம் வசித்தனர். தமது எட்டாம் வகுப்பில் அவரும் அவரது தங்கையும் தி காம்ஃபோர்டு சர்வதேச பள்ளிக்கு சென்றனர். இங்கே படிப்பில் நாட்டம் கொண்ட சண்முகம் மதிப்பெண்களை அள்ளத் தொடங்கினார்.
கொள்கைகள் :
தமது இளவயதில் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் அரவிந்த். அப்பொது ஒரு கையெழுத்து பத்திரிக்கையும் நடத்தி வந்தார். பெரியாரின் கொள்கைகளிலும் நாட்டம் கொண்டார். தனது பதின்பருவத்தில் அவர் ஆர்.கே.நாராயன், ரஸ்கின் பான்ட், சுதா மூர்த்தி முதலிய ஆங்கில எழுத்தாளர்களின் நூல்களை விரும்பி வாசித்தார். மனி ரத்னம், கௌதம் வாசுதேவே மேனன் மற்றும் ராஜீவ் மேனன் இயக்கிய திரைப்படங்களை நேசித்து வருகிறார். விளையாட்டில் பெரிய ஆர்வம் கொள்ளாதிருந்தாலும் பூப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டார்.
கனவுகள் :
தனது பதினோராம் வகுப்பில் வணிகவியல் துறையைத் தேர்ந்தேடுத்த இவர், கணக்கியல் மீது பற்று கொண்டார். பட்டயக் கணக்காளர் ஆவதற்கான முதல் தேர்வான சி.பி.டி (Common Proficiency Test) பரிட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளார். அடுத்த கட்ட தேர்வுகளுக்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஒரு பட்டயக் கணக்காளர் ஆவதையே தமது லட்சியமாகக் கொண்டுள்ளார். இது தவிர பொருளியலும் தமக்கு பிடித்தமான துறை என்கிறார் இவர். பங்கு சந்தைகளை பற்றிய புரிதலையும் வளர்த்துக் கொண்டு வருகிறார்.