நீர்வை. தி.மயூரகிரி

இலங்கை யாழ்ப்பாணத்து நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். தியாகராஜசர்மா மயூரகிரி ஆகிய இவர் 1989.09.20 ஆம் திகதியன்று பிறந்தவர்.

22 வயதேயான இவர் பல்வேறு தமிழ்க் கவிதை, கட்டுரைகளை எழுதி வருவதுடன் சிறந்த சொற்பொழிவாளருமாவார். பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயம் பெற்றுள்ளார். யாழ். இந்துக்கல்லூரி, மற்றும் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் இவர் கல்வி கற்றவர்.

தற்போது இலங்கை அரச முகாமைத்துவப் பணியில் இணைந்து செயலாற்றும் இவர் தி.மயூரகிரி சர்மா என்ற பெயரிலும் மயூரகிரி என்ற பெயரிலும் பல்வேறு தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.

தமிழ்ஹிந்து என்ற தளத்தில் இவரது பல்வேறு சமயச்சார்பு கட்டுரைகளைப் படிக்கலாம். அது போல, நீர்வேலி இணையம் என்ற தளத்தின் ஆசிரியர் குழவிலும் இவர் அங்கம் வகிக்கிறார்.

இவரது பல்வேறு சொற்பொழிவுகளை இணையத்தில் (யூரியூப்பில்) பார்க்க.. கேட்க முடியும்.

இளைஞரான இவர் புத்தாக்க முயற்சியில் ஈடுபாடுடையவர். இதனால் பெரிதும் பேசப்படுபவராக இருக்கிறார். ஒரு இந்துக் குருவாகவும் இவர் செயற்பட்டு வருகிறார்.

இவர் எழுதிய சில கட்டுரைகள் பலராலும் விமர்சிக்கப்படுவனவாயும், இந்து சமயத்தளத்தில் முக்கிய பார்வைக்குரியனவாயும் காணப்படுகின்றன.

இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் இவரது சில நூல்கள் வருமாறு..

மஹத்துவம் மிக்க மஹாவிஷ்ணு வழிபாடு -2006 எவ்வழி நல்வழி அவ்வழி நாடுவோம்- 2009 நீர்வைக் கந்தன் பிள்ளைத்தமிழ்- 2010 கருணை நிறை காமாட்சி- 2011 இலண்டன் திருமுருகன் பிள்ளைத்தமிழ்- 2011

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:M.kiri&oldid=986496" இலிருந்து மீள்விக்கப்பட்டது