யாழ்.திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயம் ............................................................ சேர் பொன் இராமநாதன் தலைமையில் 1923.12.09 அன்று கீரிமலையில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் சைவவித்தியா விரத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. எம்.எஸ்.இராசரத்தினம் , சேர்.வைத்திலிங்கம், துரைசாமி, அ.சபாபதி, எஸ்.சிவபாதசுந்தரம், எஸ்.கந்தையா உள்ளிட்ட ஆன்றோர்களைக் கொண்ட நிர்வாகசபை அமைக்கப்பட்டது. அதன் மனேஜராக எஸ்.இராசரத்தினம் நியமிக்கப்பட்டார். காலவோட்டத்தில் அவர் செயலாளராகி இந்துபோர்ட் இராசரத்தினம்; என அழைக்கப்படும் அளவிற்குப் பணியாற்றினார். இச்சங்கத்தின் நோக்கம் நவீன உலகிற்கு ஏற்ப சைவத்தமிழ்க்கல்விப்பணி புரிதல் ஆகும். இச்சங்க நிர்வாகத்தின் கீழ் மல்லாகத்தில் ஒரு பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது. இதனைத் தொடர்;ந்து பல பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டு சிறப்புற நடாத்தப்பட்டன. ஆத்தோடு தனிநபர்களினால் நடாத்தப்பட்டுப் பின்கைவிடப்படும் நிலைக்குச் சென்ற பாடசாலைகளும் சங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு நடாத்தப்பட்டன. 1960 இல் இலங்கையரசு பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் வரையான காலப்பகுதியில் சைவவித்தியா விருத்திச் சங்கம் 187 பாடசாலைகளை நடாத்தியது. இப்பாடசாலைகளில் கற்பிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர் தேவை என்பதையும் சைவத்தமிழ்க் கல்வியை வளர்க்கும் நோக்கிலும் 1928 இல் வைசவாசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது. மயிலிட்டி சுவாமி நாதன், அளவெட்டி பொ.கைலாசபதி எனும் மௌனத்துவ முனிவர் உபஅதிபராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத்தனி இடத்தை பேச்சு எழுத்து ஆசிரியப்பணி தனிப்பட்ட வாழ்;வு எனும் தளக்கூறுகளில் தனித்து முத்திரை பதித்தவரான பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை தமிழ்ப் பேராசனாக பணி புரிந்தார். இவ்வாறான திறமை மிகுந்த விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியால் சைவாசிரிய கலாசாலை அறுபதுகளில் அரசாங்கத்தினால் மூடப்படும் வரையான ஏறத்தாழ 1500 ஆசிரியர்களை எமது சமூகத்திற்கு அளித்தது. அறுபதுகளின் பின் ஏற்பட்ட கொம்யூனிசிய சித்தாந்த வளர்ச்சி முற்போக்கு வாதம் அரசியல் மாற்றம் நவீன கலை இலக்கிய வளர்ச்சி ஒரு தளத்தில் இயங்கின. ஏனில் இவற்றுக்கு சமாந்தரமாக பிறிதொரு தளத்தில் இப்பரம்பரையினர் இயங்கினர் எனலாம். துpராவிடக் கட்சிகளிடம் நாஸ்திகவாதம் காணப்பெற்றாலும் அவர்களின் தனித் தமிழ்வாதம் இப்பரம்பரை நீர்த்துப் போகாமல் புத்துயிர்ப்பு பெற உதவியது. இச்சைவாசிரிய கலாசாலையில் பயிலும் ஆசிரிய மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காகவும் சைவச்சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்கள் கல்வி கற்பதற்காகவுமே பயிற்சிப் பாடசாலையான முத்துத்தம்பி மகாவித்தியாலயம் உருவாக்கப்பட்டது. சைவத்தமிழும் பூவும் மணமும் போல வளர்த்தெடுக்கப்பட்ட இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களால் 1927 ஆம் ஆண்டு தை மாதம் 01 ஆம் திகதி 22 ஏக்கர் காணியில் நிறுவப்பட்ட பாடசாலைகளுள் முதன்மைப் பாடசாலையாக விளங்குகின்ற பாடசாலை தான் யாழ்.திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைந்துள்ள முத்துத்தம்பி மகா வித்தியாலயம். திருநெல்வேலியில் ஆரம்பப்பாடசாலையை ஏற்கனவே நிறுவிய முத்துத்தம்பி என்பவரின் பெயரையே இப்பாடசாலைக்கும் வைத்தனர். இன்று இப்பாடசாலையானது 650 மாணவர்களுடனும் 49 ஆசிரியர்களுடனும் இயங்கி வருகின்ற இப்பாடசாலையானது தரம் 01 இலிருந்து 13 வரையான வகுப்புக்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. இப்பாடசாலையில் ஆரம்பப்பிரிவு, கனிஷ்டபிரிவு, சிரேஷ்ட இடைநிலை மற்றும் உயர்தர வகுப்புக்கள் இடம்பெறுகின்றது. க.பொ.த உயர்தர வகுப்புக்களில் கலைப்பிரிவு, வணிகப்பிரிவுகள் காணப்படுகின்றது. இப்பாடசாலை 87 ஆண்டுகளுக்கு முன்னர் சைவப்பாரம்பரியத்தில் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு இன்று படிப்படியாக வளர்ச்சியடைந்து 1 சி பாடசாலையாக விளங்குகின்றது. அத்துடன் கல்விப்பாரம்பரியத்தையும் பழமை பெருமைகளையும் பேணிக்காப்பதோடு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற திருநெல்வேலி சைவச்சிறுவர் இல்லத்தில் வளரும் பிள்ளைகள் முதல் பெரியோர்கள் வரையில் அடைக்கலம் கொடுத்து இப்படசாலையானது தாயாக இருந்;து கல்வி போதித்து வருகின்றதோடு பல்வேறு துறைகளில் மாணவர்களை முன்னேற்றி வருகின்ற ஒரு பாடசாலையாகவும் இது விளங்குகின்றது. யாழ்.மாவட்டத்திலே இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களினால் நிறுவப்பட்ட முதன்மைப் பாடசாலையாக இப்பாடசாலை அமைவது பெருமைக்குரியது. அத்துடன் 188 பாடசாலைகளின் தாய்ப்பாடசாலையாக இருந்த சிறப்புக்குரியது இதுவே. இப்பாடசாலையின் மகுடவாசகம் “திரிகரண சுத்தியும் காரிய சித்தியும்” ஆகும். இப்பாடசாலையைப் பொறுப்பேற்ற அதிபர்கள் மிகுந்த கரிசனையோடும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியதோடு பௌதீக வள அபிவிருத்தியிலும் மற்றும் மனிதவள கல்விச் செயற்பாடுகளிலும் அதிக அக்கறை செலுத்தி பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் அதிபர்களாக 1950- 1957 திரு.எஸ்.சரவணமுத்து, 1958- 1960 திரு.பி.செல்லத்துரை, 1961-1972 திரு.எஸ்.சரவணமுத்து, 1973 திரு.எஸ்.சுப்பிரமணியம், 1974 திரு. ஆர்.கனகலிங்கம், 1975 திரு.ரி.சிவஞானம், 1976 திரு.ஏ.மகாதேவா, 1977 திரு.எஸ்.பத்மநாதன், 1979- 1981 திரு.ஆர்.திருநாவுக்கரசு, 1981-1988 திரு.எம்.முத்துலிங்கம், 1988-1995 திரு.கே.சிதம்பரநாதன், 1995-1997 திரு.கே.சுந்தரகாந்தன், 1997-1998 திரு.வி.ஞானகாந்தன், 1998-2008 திரு.ரி.சிவராஜா, 2008-2014 திரு.ரி.சத்தியபாலன் ஆகியோர் தமது அதிபர் பதவியிலிருந்து தமது கடமைகளை மிகவும் திறம்பட செய்து வந்தனர்.பின்னர் ஐனவரி 27 ஆம் திகதியிலிருந்து மே 15 வரை திருமதி க.சிவகுமாரன் அவர்கள் பாடசாலை அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்று மிகச்சிறப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்தார். ஆதன் பின் 2014 மே மாதத்திலிருந்து இன்று வரை திரு.இ.பசுபதீஸ்வரன் அதிபராக பொறுப்பேற்று மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம், இணைப்பாடவிதமான செயற்பாடுகளில் கண்ணும் கருத்துமாக அக்கறையுடனும் செயற்பட்டு வருகின்றார். பாடசாலைப் பிரதி அதிபராக திரு.க.மகேஸ்வரன் நியமிக்கப்ட்டுள்ளார். இப்பாடசாலையானது குடாநாட்டினைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு முதன்மையாகவும் மற்றும் சப்த தீவுகளிலிருந்து வருவோர்க்கும் வன்னிப்பிரதேசப் பிள்ளைகளுக்கும் எம் வித்தியாலயமானது தோளோடு தோள் நின்று கல்வியை வழங்கியமை குறிப்பிடத்தக்க ஒரு நற்செயலாகும். இப்பாடசாலையில் பிரபல கல்விமான்கள் கல்வி கற்றுள்ளார்கள். மயிலிட்டி சி.சுவாமிநாதன், அளவெட்டி தந்த அறிவுச்செல்வர் மௌனதவமுனிவர், பொ.கைலாசபதி, உபஅதிபர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை போன்றவர்கள் இப்பாடசாலைக்கு தன்னலமற்ற சேவையை நல்கியதோடு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை இப்பாடசலையின் வளர்ச்சிக்கு உறுதுணையளித்தது. இப்பாடசாலையின் புகழ்பூத்த கல்விமான்கள் கல்வி பயின்ற புண்ணிய பாடசாலை. அதாவது பேராதனை விரிவுரையாளர் கனகரட்ணம், தமிழ்த்துறை பேராசிரியர் குழந்தைவேல், இந்துநாகரிக விரிவுரையாளர் அருள்நங்கை போன்றவர்களை குறிப்பிடலாம். இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் பலர் அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும் வேறு பல்வேறு உத்தியோகத்தர்களாகவும் மற்றும் சிலர் வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றமை பாரட்டத்தக்கது. இப்பாடசாலையில் பல்வேறுபட்ட அதிபர்கள் பல்வேறு காலகட்டத்தில் தமது பணியை ஆற்றி வந்த போதிலும் பாடசாலை மட்டத்தில் ஒரு சஞ்சிகை வெளியிடாமை இருந்தது ஒரு பாரிய குறையாக இருந்த போதிலும் அந்தக் குறைபாடு 2004 ஆம் ஆண்டு அக்குறைபாடும் நிவர்த்தி செய்யப்பட்டது. அதன் பெருமையானது அக்காலத்தில் அதிபராக இருந்த திரு.த.சிவராசா அவர்களை சாரும். அச்சஞ்கிகையின் பெயர் “சங்கமம்” என்ற பெயருடன் வெளி வந்தது. பாடசாலை பெறுபேற்றை நோக்குமிடத்து 2006 இல் இரு மாணவர்கள் , 2010 இல் இரு மாணவர்கள் , 2007 இல் ஒரு மாணவன், 2008 இல் இரு மாணவர்கள், 2009 இல் மூன்று மாணவர்கள், 2010 இல் ஒருவர் வணிகப்பிரிவிலும் ஒருவர் கலைப்பிரிவிலும், 2011 இல் நால்வர், 2012 இல் ஆறு மாணவர்கள் என்ற ரீதியில் பல்கலைக்கழகம், தேசியகல்வியற்கல்லூரிகளில் அனுமதியினைப் பெற்றுள்ளனர். 2014 இல் உயர்தரத்தில் 06 பேர் பல்கலைக்கழம் சென்றுள்ளனர். தமது கல்வியை தொடர்கின்றமை பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளது. 2011 இல் உயர்தர வகுப்பில் 71வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக உயர்கல்வியைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதோடு இணைப்பாடவிதமான செயற்பாட்டிலும் துரித முன்னேற்றம் கண்டு வருகின்றது. சாரணியம், தேசியமாணவர் படையணி ஆகியவற்றில் மாணவர்கள் பயிற்சியினைப் பெற்றுள்ளனர். அத்துடன் குருளைச் சாரணியப் பயிற்சியும் பெண் சாரணியப் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு விளையாட்டு, விவசாயபீடம், சங்கீதபாடம் போன்ற செயற்பாடுகளில் மாணவர்கள் அகில இலங்கை மட்டத்திலும், தேசியமட்டத்திலும் வெற்றியினை ஈட்டி பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளனர். பாடசாலை மன்றங்களின் வளர்ச்சி பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாக கவின்கலை வளர்ச்சியில் துரித முன்னேற்றம் கண்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. தேசபக்திப்பாடல், குழு இசைப்பாடல், நாட்டார்பாடல், வில்லுப்பாட்டு போன்றவற்றில் கோட்ட, வலய மட்ட அகில இலங்கை தேசிய மட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும் இங்கு இணைப்பாடவிதமான செயற்பாடுகள் ஒரு சீரான முறையில் பேணி வரப்படுகின்றது. பாடசாலையின் முகாமைத்துவம், ஒழுக்காற்றுக்குழு, மாணவமுதல்வர்குழு, பாடசாலை கல்விசாரா ஊழியர் மன்றம், இந்துமாமன்றம், கிறிஸ்தவமன்றம், கணிதவிஞ்ஞான மன்றம், வணிகமன்றம், தமிழ்மன்றம், விவசாயம், கணினி, ஆங்கிலம், நுண்கலை, உயர்தரம் போன்ற மன்றங்களும் சாரணர்குழு, கடேச்குழு என்பன சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்களுடன் மன்றப் பொறுப்பாசிரியர்களின் வழிகாட்டலுடனும் செயற்பட்டு வருகின்றது. விஞ்ஞான மன்றமானது வருடந்தோறும் வானியல்பாசறை, கண்காட்சி என்பவற்றுடன் போட்டிகளையும் நடாத்தி வருகின்றது. இந்துமாமன்றம் வாணிவிழா, நவராத்திரி பூஜை, சமயகுரவர் பூஜைகளை சிறப்பாக நடாத்தி வருவதோடு சமயப்பெரியார்களை இவ்விழாவின் போது அழைத்து மாணவர்களுக்கு நற்சிந்தனையை வழங்குவதோடு தியான யோகப் பயிற்சிகளையும் சமயச்சுற்றுலாக்களையும் செயற்படுத்தி வருகின்றது. நுண்கலை மன்றம் வருடந்தோறும் அழகியற்கண்காட்சியை சிறந்த முறையில் நடாத்தி வருவதுடன் கலைவிழாக்கள், தியாகராஐர் ஆராதனை விழா போன்றவற்றை நடாத்தி வருகின்றது. இப்பாடசாலையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விசேட அலகு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் விசேட தேவையுடைய பல குழந்தைகள் கல்வி கற்பதுடன் இவர்களுக்கான விளையாட்டுக்களையும், கவின்கலைப் பயிற்சிகளையும் பெற்று போட்டிகளில் பங்கு பற்றி கோட்டமட்ட, வலயமட்ட, மாகாணமட்டங்களில் பதக்கங்களை பெற்றும் சான்றிதழ்களைப் பெற்றும் பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். அத்தோடு முறைசாரக்கல்விப் பிரிவும் இங்கு இயங்கி வருகின்றது. இங்கு தையல்கலை, கணினிப்பயிற்சி, அலங்கார ஒப்பனை வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் வளர்ச்சிகளுக்கும் யாழ்.வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், உதவி பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதுணையாக நின்று உற்சாகமளித்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறுபட்ட துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி வரினும் பாடசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதாவது மாணவர்கள் ஒன்று கூடுவதற்கான பிரார்த்தனை மண்டபம், மாணவர்கள் தமது கல்வியினை ஒரு சீரான முறையில் மேற்கொள்ள தளபாடங்களின் பற்றாக்குறை, விஞ்ஞான ஆய்வு கூடம், அலுவலகம், ஆசிரியர், மாணவர்களுக்கான வாகனத்தரிப்பிடம், சிற்றுண்டிச்சாலை அமைத்தல், மலசலகூட எண்ணிக்கையை அதிகரித்தல், நீர்த்தாங்கியின் அளவு விஸ்தரித்தல் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அத்துடன் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா ஒன்றினை தரமான முறையில் அமைக்க வேண்டும். அத்துடன் விளையாட்டு உபகரணங்கள் இருப்பினும் குறைந்தளவில் காணப்படுகின்றது. அதையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இப்பாடசாலையில் மல்ரிமீடியா ஒன்றுள்ளது. இன்னொன்;று கிடைக்கப் பெற்றால் மாணவர்கள் தமது கல்வியில் முன்னேற்றப்பாதையினை அடைவார்கள். அத்துடன் இங்கு சுப்பிரமணியம் மண்டபம் மிகப்பழமை வாய்ந்த ஒரு கட்டடமாக காணப்பட்ட போதும் அதே இடத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஒன்றினை மேற்கொள்ள ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆத்துடன் இப்பாடசாலைக்கு 60 அடி நீளமான விஞ்ஞானஆய்வுகூடம், நுலகம் மிகவும் அவசரமாக தேவையாக உள்ளது. இப்பாடசாலையில் 30 கணிணிகள் உள்ள போதும் 03 கணினிகளே செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றது. ஆகையால் 10 கணினிகள் பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற நிலையில் மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாய அமைச்சினால் 2016 இல் தூவர்பாசனம் கால்ஏக்கர் பரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளிலும் பாடசாலை அதிபரான திரு.இ.பசுபதீஸ்வரன் அவர்களின் அயரா உழைப்பு பாடசாலைக்கு உறுதுணையாக இருப்பதுடன் இவரது அனைத்து செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பினை நல்கி வரும் ஆசிரியகுழாமும் அதனை சிறந்த முறையில் உள்வாங்கி செயற்பட்டு வரும் பாடசாலை மாணவர்களது செயற்பாடுகளும் பாடசாலை முன்னேற்றத்திற்கு ஊன்று கோலாயுள்ளது. மேற்குறிப்பிட்ட தேவைகள் பூர்த்தி செய்யும் நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை மேலும் அதிகரிக்க செய்வதுடன் அம்மாணவர்கள் இனிவருங் காலங்களில் சிறந்த ஒரு சமூகத்தின் சிற்பிகளாக விளங்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 2014 ஆம் ஆண்டில் தமிழறிவு வினாடி வினாப் போட்டியில் மாகாண மட்டத்தில் ஐந்தாம் பிரிவில் மூன்றாம் இடத்தையும், தமிழறிவு வினாவிடைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், வடமொழி கூத்து நாடகப் போட்டியில் வலயமட்டத்தில் முதலாம் இடத்தையும், சக்கரநாற்காலி ஓட்டத்தில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை செல்வன் கஐன், 100 மீற்றர் ஓட்டத்தில் செல்வன் றோனுஷன், முதலாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். விளையாட்டுத்துறையில் 25 வீதம், தமிழ்த்தினப் போட்டியில் 20 வீதம் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். 2016 இல் மாகாண மட்டத்தில் 1 ஆம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 01 ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். மற்றும் உயர்தரப் பெறுபேற்றில் 95 வீதம் சித்தியடைந்து பல்கலைக்கழகம், தேசியகல்வியற்கல்லூரியில் தமது படிப்புக்களை தெடர்கின்றனர். வலய மட்டங்களில் இடம்பெறும் சித்திரப்போட்டியில் இப்பாடசாலையிலிருந்து அதிகளவான மாணவர்கள் பங்கு பற்றி சான்றிதழ்களை பெற்றுத் தருகின்றனர். சாரணர், கடேச் போன்றவற்றிற்கு யாழ்.மாவட்டத்தில் ஒரு பாடசாலையாக எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டு மாணவர்கள் கண்டி சென்றமை பாராட்டத்தக்கது. இப்பாடசாலை ஒரு விவசாய நிலப்பரப்பில் அமைந்துள்ளமையால் யாழ். மாவட்டத்தில் வடமாகாணத்தினால் விவசாய ஆய்வு கூடம் ஒன்று வழங்கப்பட்டது. இது 85 பரப்பில் காணப்படுகின்றது. இங்கு விசேட தேவைக்கான அலகு உருவாக்கப்பட்டு ஆரம்பத்தில் 22 மாணவர்கள் கல்வி கற்று தற்போது அம்மாணவர்கள் உட்புகுத்தல் கல்வி செயற்பாட்டிற்கு உள்வாங்கப்பட்டு தற்போது 18 மாணவர்கள் இவ்வலகில் கற்று வருகின்றனர். இப்பாடசாலை 230 மீற்றர் நீளமும், 100 அடி அகலமும் கொண்ட ஒரு பாடசாலையாகும். ஆண்களுக்கான கோட்டமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை 17 வயது, 19 வயது பிரிவினர் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். களுக்கான கோட்டமட்ட “செயற்பட்டு மகிழ்வோம்” போட்டியில் தரம் 05 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், தரம் 04 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், தரம் 03 மாணவர்கள் ஏழாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். 2014 நடைபெற்ற மாகாண மட்ட தமிழறிவு வினாவிடைப் போட்டியில் இரண்டாம் இடத்தை எமது மாணவர்கள் பெற்றுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MTMV&oldid=2178034" இலிருந்து மீள்விக்கப்பட்டது