MUTHU KUMARAN SURESH
முத்துக் குமரன் சுரேஷ் இந்தியாவில் ,தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் ,பண்ருட்டிக்கருகே உள்ள புதுப்பேட்டையில் வசித்து வருகிறார். தந்தை பெயர் சு.அப்பர் சாமி .தாயார் பெயர் சுந்தர வள்ளி. முத்துக்குமரன் என்பது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் .சுரேஷ் என்பது இல்லத்தில் உள்ளோர் செல்லமாக அழைக்கும் பெயர் இரண்டையும் சேர்த்து முத்துக் குமரன் சுரேஷ் .என்ற பெயரில் தன்னை விளித்துக் கொள்ளும் இவர் ஓவியத்தில் பட்டயப் படிப்பையும் ,உளவியலில் இளங்கலைப் படிப்பையும் தமிழில் முதுகலை படிப்பையும் ,திருவாவடுதுறை ஆதீனத்தால் நடத்தப்படும் சைவ சித்தாந்த படைப்பையும் முடித்துள்ளார். சைவ சித்தாந்த ரத்தினம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.தற்போது பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் 2001 முதல் நெய்வேளிக்கருகே உள்ள காடாம்புலியூர் இரா ,கண்ணுசாமி அரசு மேல் நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். சாரண ஆசிரியராகும் பொறுப்பேற்றுள்ள இவர் அதில் உயரிய நிலையான இமய வனக்கலைப் பயிற்சியினை முடித்துள்ளார். இது வரையிலும் இரண்டு சாரணர்களுக்கு குடியரசுத்தலைவர் விருதினையும் ,49 சாரணர்களுக்கு ஆளுநர் விருதினையும் பெற்றுத் தந்துள்ளார். ஸ்வாசிகா என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவி மாணவர்களையே தலைவர் , செயலர் , பொருளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கச் செய்து அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் இவர் தொடர்ந்து 17 வருடங்களாக ஓவிய ஆர்வம் உள்ள மாணவர்கள் பயன்பெறும் விதமாய் கோடைக்காலத்தின்போது இலவசமாய் 10 நாட்களுக்கு ஓவியப் பயிற்சியை அளித்து வருகிறார் .பலமுஅரி பண்ணுருட்டி மாநகரில் ஓவியக் கண்காட்சியை நடத்திவரும் இவர் கடந்த வருடம் (2012)புதுவையில் நடைபெற்ற சாலையோரக் கலை விழாவில் பங்கேற்று தனது ஓவியங்களைக் காட்சிப் படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இசையார்வம் கொண்ட இவர் வில்லுப்பாட்டு நிகழ்சிகளை அமைப்பதிலும் ,கவிதைகளை இயற்றுவதிலும் தன்னை நிரூபித்து வருபவர். "சித்திரக் கவி மலர்" என்ற பெயரில் வலைப் பூ வினையும் (BLOG ) எழுதி வருகிறார். இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களை வலம் வரும் இவர் ஒரு சுற்றுலா விரும்பி. இன்னும் இவர் பற்றிய தகவல்கள் விரைவில்....!