ManGRow3D
தமிழர் வாழ்ந்த சரித்திரம் தேடல் மற்றும் தமிழ், தமிழரின் வரலாறு. தமிழர் மரபு தோன்றி எத்தனை வருடங்கள் ஆகின்றன
தொகுதனது மரபு தோன்றி எத்தனை வருடங்கள் ஆகின்றன என்ற கணக்கை தேடி பல நாடுகளும் ஏடுகளும் அலைந்து திரிந்து கொண்டு உள்ளன. பலர் இதை தேவையற்ற அலசல் என்றும் கூறுவதுண்டு. நாம் தேடிக்கொண்டுள்ளது வெறும் கலாச்சாரத்தை மட்டும் அல்ல. அதன் வரலாற்றில் ஒளிந்துகொண்டுள்ள பண்டைய உணவு பழக்கம் மற்றும் மருத்துவ குறிப்புகளையும் தான் நாம் தேடி வருகிறோம். மண்ணில் என்ன மருத்துவ குறிப்பு கிடைத்துவிடப் போகிறது என்கிறீர்களா. ஆம், கல்வெட்டுகளை சரியான முறையில் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலே போதும், அதில் உள்ள மிக பழமையான மருத்துவ குறிப்புகள் இன்று நமக்கு பலவிதமான நோய்களை குணப்படுத்தும் அபூர்வம் கொண்டவையாக இருக்கும்.
2200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் வாழ்ந்துள்ளான் என்ற கணக்கை நாம் எடுத்து வைக்கும் போதே நாம் சில உண்மைகளை மறைத்து மறந்து போகின்றோம். நாம் இப்பொழுது இருக்கும் வருடம் 2020. வெறும் 100 வருடம் என்பதே மிக குறுகிய காலம் என்பது நம் சான்றோர்களுக்கு தெரியும். நாம் நம்புகிறோம் எந்த ஒரு உலக அழிவும் அதிகம் இல்லாமல் நாம் 2000 வருடம் வாழ்கிறோம். அதற்க்கு முன் (2000 ற்கு முன்) ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பு மட்டும் தான் 10 அடி 20 அடி மண் மேடு உருவாக்கி மக்களை அழித்திருக்க முடியும். இங்கே மட்டும் இல்லை பல இடங்களில் நாம் தோண்டி எடுக்கின்ற புதை வடிவங்கள் அதே போல் தான் புதையுண்டு கிடக்கின்றன. ஒரு இனம் அல்லது ஒரு ஊர் முழுவதும் மக்களோடு புதையுண்டு கிடக்கிறதென்றால், அது மிக பெரிய பிரளயம் தான் உருவாக்கி இருக்கக்கூடும். இதிலிருந்து நாம் அறியவேண்டியது ஒன்று உள்ளது. நாம் பல வருடங்களாக படித்து வருகிறோம், - மனிதன் கல் ஆயுதம் பச்சை மாமிசம் மலை வாச பழங்கள் என்று உண்டு வாழ்ந்து வந்திருக்கிறான். ஒன்றை நன்றாக யோசியுங்கள். இதையெல்லாம் வழி வழியாக சொல்லி வந்தது யார் நமக்கு ?
நமது திருக்குறள் 2200 ஆண்டுகள் பழமையானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் நாம் இதற்க்கு முன் கண்டெடுத்த புதை பொருட்களின் ஆயுள் 2200 வருடங்கள். அதை வைத்து நாமும் இந்த கால கட்டத்தையே அதிகபட்சமாக கூறி வந்தோம். இன்று கிண்ணிமங்கலம் என்ற சிறு கிராமம். அங்கே உள்ள ஆதி ஏகநாதர் கோவிலை சுற்றி கண்டு பிடிக்கப்பட்ட கல் வெட்டுகள் நம் தலை முறையை உணர்த்தும். இன்றும் பல கிராமங்கள் விரிவடையாமல் அங்கே உள்ள மக்கள் புலம் பெயராமல் தன்னுடைய மூதாதையர் வாழ்ந்த இடம் என்ற செருக்கோடு குடியிருக்கிறார்கள். அது போன்ற பல நூறு வருடங்கள் ஒரு கிராமம் இருந்து கொண்டு உள்ளதென்றால், அந்த கிராமம் கண்டிப்பாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஊராகும். அந்த மண்ணில் ஆழம் பார்த்தால் நம் தமிழ் மரபு பல கிராமங்களில் கிடைக்கும். ஏனென்றால், மக்கள் ஒரு இடத்தில் மட்டும் வாழ்ந்ததாகத் தான் நாம் கணக்கில் கொண்டு தேடி வருகிறோம். உலகம் முழுதும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆக, ஒரு இடத்தில் மக்கள் குடியிருந்த அடையாளம் கிடைத்ததென்றால் அந்த ஊரை சுற்றி பல ஊர்களில் இன்னும் மிக பெரிய அளவிலான தமிழ் பொக்கிஷங்கள் கிடைக்கலாம்.
2200 வருடங்களுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய ஓலை சுவடிகளை கண்டால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக வரையப்பட்டு உள்ளது. அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நமக்கு தெரிந்து கல் வெட்டுகளில் உள்ள பழங்கால தமிழ் நம்மால் இயல்பாக படித்து விட முடியாது. அப்படி வாழ்ந்த மக்கள் எங்கே பொய் விட்டார்கள். அவர்களின் தொடர் மற்றும் தொடர்பு எங்கே போய்விட்டது. அதை தேடித் தான் இந்த பயணம் செல்கிறது. அடிக்கடி உலகம் அழியப் போகிறது என்று வதந்தி வந்த வண்ணம் உள்ளது. யோசித்துப் பாருங்கள். நாம் தோண்டி எடுக்கும் ஒவ்வொரு கீழடியும் கிண்ணிமங்கலமும் திரளியும் ஆதிச்சநல்லூரும் ரெட்டியபட்டியும் கூறும் உண்மை என்னவென்றால் நமக்கு முன் 2200 அல்லது 2300 வருடம் முன்பு ஒரு மாபெரும் அழிவு நிகழ்ந்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக மடிந்துள்ளனர். நோய் அழிந்திருந்தால் இவ்வெளவு பெரிய பண் மூடி அதற்க்கு மேல் ஒரு ஊர் உருவாக்கி இருக்காது. அங்கிருந்து தப்பி பிழைத்தவர்கள் தனது பரம்பரை வாழ்ந்த இடத்தில் தொடர்ந்து குடியேறி வாழ்ந்து வருவதால் தான் நாம் ஒவ்வொரு கிராம நகர பகுதிகளில் புதை பொருட்களை எடுக்கின்றோம்.
2200 வருடங்களுக்கு பிறகு நாம் சகல வசதிகளையும் உருவாக்கி வாழ்ந்து வருகிறோம் என்றால் 2000 வருடங்கள் நமக்கு ஆகி உள்ளது இவற்றை கண்டு பிடித்து உருவாக்க, என்பது தானே பொருள். அப்படி என்றால் 2200 வருடங்களுக்கு முன் அழிந்த தமிழ் இனமானது சகல வசதிகளுடன், இயந்திர உருக்கு ஆலைகள் விவசாயம் அமைப்பான வாடுகளுடன் குழுக்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்றால், அவர்களுக்கு அந்த விஷயங்களை அடைய கண்டிப்பாக குறைந்தது 2000 வருடங்கள் கடந்திருக்கும். ஆக நம் தமிழ் மரபின் ஆயுட்காலம் குறைந்தது 4500 வருடங்கள் முதல் 5000 வருடங்களாக கருத்தில் கொள்ளலாம்.