Mariithangam
Joined 27 பெப்பிரவரி 2023
மகாபாரதம் மகாகாவியம்
* பாரத நாடு பழம்பெரும் நாடாகும். இங்கு பல அறிஞர்களும் சாமான்யர்களும், புண்ணியவாதிகளும் பிறந்து அருள்புரிந்த நாடாகும். இத்தகு புண்ணிய கீர்த்திகளுள் மிகவும் முக்கியமானர் பராசர முனிவரின் மகனான வியாசர் ஆவார்.
* இந்த பூமியில் உள்ள வேதங்களை முறைப்படுத்திய பெருமைக்குரியவர் இவரே ஆவார். "மகாபாரதம்" என்கின்ற இந்தப் புண்ணிய இதிகாசத்திகளை உலகிற்கு அளித்தவர் வியாசரே ஆவார். நமது பண்பாட்டினை உணர்த்தும் இதிகாசங்கள் இரண்டு. அவை முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகும்.
* இந்த மகாபாரதம் என்பது ரிக், யசூர், சாம, அதர்வண என்கின்ற வேதங்களையும், அடுத்து விளகக்கூடிய ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகின்ற அளவிற்கு இயற்றப்பட்டது ஆகும். * இதிலே மனித வாழ்க்கையில் உண்டாக்கக் கூடிய அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூடிய பெருமை வியாசருக்கு உண்டு. இதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டார் வியாசர்.
* தாம் சொல்லச் சொல்ல இதனை யாரை கொண்டு உருவானபோது பிரம்ம தேவரே இவருடைய மனத்திலே உதித்தார். பிரம்மனை நினைத்து வழிபட்டார். பிரம்மரும் அவர் முன் தோன்றினார்.