Marypaska
உயிரைக் கொல்லும் துரிதஉணவு.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' 'நாட்டின் வலிமையே, நலவாழ்வு' 'சுத்தம் சோறுபோடும், உணவே மருந்து.
தமிழினத்தின் இத்தகைய சொல்லாடல்கள் இன்று செயலிழந்து நிற்கின்றன. மருந்தே பலருக்கு (மாற்று இரை) உணவாகி விட்டது. அசுத்தமே பலருக்கு அமுதமாகி விட்டது. 1937 இல் 'விசான் பயருக்கு செல்லும் பாதை' என்ற நாவலைப் படைத்த ஜார்ஜ் ஆர்வெல் என்ற ஆங்கில எமுத்தாளர் சொன்னார்: "நீண்டகால நோக்கில் பார்க்கும்போது எந்திரத்துப்பாக்கிகளைவிட கொடிய ஆயுதங்களாகப் பதனப்படுத்தப்பட்டு டப்பாக்களில் விற்கப்படும் உணவு விளங்கும்." அது இன்று உண்மையாகி விட்டது.
மண்ணின் உணவுப் பழக்கங்களை மாற்றியமைத்து, மேலைநாடுகளின் துரித உணவுகளை அறிமுகம் செய்து, நம் மக்களை அடிமைகளாக மாற்றி வருகிறது பன்னாட்டு கம்பெனிகள்.ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்திசெய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவு வகைகள் அழிக்கப்பட்டு ஒரேமாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.கஞ்சி, கூழ் போன்ற நீராகாரங்கள் பற்றி பேசினாலோ,கேப்பைக் களி, உருண்டை, கீரைக்குழம்பு விவரத்தைப் பகிர்ந்தாலோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவரைப்போல் பார்கிறார்கள்.
பெரும்பாலானோர் நாவுகளில் பிட்ஸ்ஸா, பர்கர், பிரஞ்சு பிரை, நுடுல்ஸ், ஸ்கரேம் போன்ற குறுகிய ஆயுளுக்கான நீண்ட பட்டியல்கள். இவை இளயவற்களுக்கு மட்டுமல்ல, முதியவர்களுக்கும் விருப்ப உணவாகி விட்டன.தாய்லாந்து, மெக்சிகன், இத்தாலியன், சீனர்களின் இத்தகைய பல்வகையான துரித(வேக) உணவுகள் மேலாதிக்க வர்கத்தின் ஊடுருவல்களெ.
ஒவ்வொரு மீன் வகைகளையும் வெவ்வேரு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திய காலம் காணாமல் போய்விட்டது. கண்டங்கத்திரி,மணத்தக்காளிக்கீரை,அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, காசினிக்கீரை போன்ற மருத்துவக் குணம் கொண்ட கீரைகளை உணவில் சேர்ப்பது பட்டிக்காட்டான் பண்பாக அறநாகரீகமானவர் உணவாகவே பார்க்கப்படுகிறது. வாழக் கற்றுத்தந்த தமிழ் பண்பாட்டாளர்களின் வாரிசுகளுக்கு தற்போது சாகக் கற்றுத்தரும் வாய்பாடுகளே துரித உணவகங்களின் மெனுக் கார்டு.
விருந்தோம்பலுக்குப் பெயர்போன தமிழர் தங்கள் வீடுகளில் இன்று சமைப்பது குறைவே. வீட்டில் சமைப்பது சுமையாகி விட்டது. கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள். சமைக்க நேரமில்லை என்பது ஒரு காரணம். இதைவிட பல காரணங்கள் மறைவாக உள்ளது. வேலைத்தளங்களில் கட்டுச்சோறு எடுத்துச் செல்வது கெளரவப் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.எனவே, பெரும்பாலானோர் அலுவலகம் செல்கையில் வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதில்லை.கொஞ்சம் வசதி வந்துவிட்டதென்றால் விடுமுறை என்றாலும், விருந்தினர் வந்தாலும் உபசரிப்பு நடத்துவது பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் துரித உணவுகளோடு.
சுடச்சுட சூப்பு வகைகள், விதவிதமான நிறங்களில் அறுசுவை உணவுகள், பார்த்து பார்த்து பாட்டி சமைத்ததில் இல்லா சுவை, இழைத்து இழைத்து அம்மியில் அம்மா அரைத்து சமைத்ததில் இல்லா சுவை-எப்படி துரித உணவுகளில் சாத்தியம்? கேள்விகேட்டு பார்த்தோமா? 1909 இல் சந்தைகளில் அறிமுகமானது மோனோ சோடியம் குளுடாமேட்.(எம் எஸ் ஜி) என்று சுருக்கமாகச் சொல்லப்படும் இது ஒரு செயற்கைச் சுவைக் கூட்டி. 'இயற்கைச் சுவை விரட்டி' எனலாம். அஜினோ மோட்டோ என்று கடைகளில் நாம் வாங்கும் பொருள்தான் இது. இது தான் துரித உணவின் சுவைக்குக் காரணம். நீயுரான்களைத் தூண்டி சுவையை அதிகளவில் உணரச்செய்வதே இதன் வேலை. மூலைத்திசுக்கள் இறக்கவும், அல்ஜீமீயர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்கள் அதிகமாகவும், உடலின் எடையைக் கூட்டவும், அல்சர், கேன்ஸர் போன்ற வியாதிகள் உடலைப் பாதிக்கவும் காரணமாகின்றன என்கிறது மருத்துவ உலகம்.
துரித உணவுகளின் சுவையில் குறைவில்லை.. உண்மைதான். ஆனால் தரத்தில் நிறைவில்லையே! பிரிசர் வேட்டிவ்ஸ் எனும் வேதிப் பொருட்களை பயன்படுத்தி இனியும் வாழ்வின் ஆயுளை குறைப்பதா? மோனோசோடியம் குளுடாமேட் என்னும் செயற்கை குவைகூட்டியை பயண்படுத்தி வாழ்வின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதா! சாதத்தோடு பாசத்தையும் குழந்தைகளுக்கு துரித உணவுனள் ஊட்ட முடியாது. இனியும் வீட்டல் சமைப்பதைக் கைவிடுவதா? உறவுகள் உணர்வுகளை உறக்க பெரிய பெரிய மால்களில் அமர்ந்து பேச முடியாது- இனியும் வீட்டிற்கு வெளியிலா உறவுகளை உபசரிப்பது? வேண்டாம்.
முதலாவது, நுகர்வு தந்த நகர்வுதான் துரித உணவு களாச்சாரம் என்பதை புரிந்திடுவோம். ஆங்கிலேயர் நம்மை விட்டுச் சென்றார்களே தவிர, நாம் அவர்களை விட்டு இதுவரை விளகவில்லை. உணவு, உடை, ஊறைவிடம், பண்பாடு என எல்லா நிலைகளிலும் நாம் அவர்களையே பின்பற்றுகிறோம். அதுவே மேன்மை என கருதுகிறோம். இத்தகைய மனநிலைகள் மீண்டும் நம்மை அடிமைகளாக்குகிறது. உதாரணமாக, பீட்ஸ்ஸா எனும் வேக உணவை எடுத்துக் கொள்வோம். சுத்திகரிக்கப்பட்ட தவிடு நீக்கப்பட்ட மாவில் பழைய காய்கறிகள், பாலாடைக் கட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது இது. இதில் வெறும் மாவுச் சத்து மட்டுமே உண்டு. இத்தாலியர்களின் உணவு இது. இத்தாலியர்களுக்கு பொருத்தமான இந்த உணவு அமெரிக்கா சென்று உலக ருசியாக மாற்றப்பட்டு இன்று இந்தியாவின் மேட்டுக்குடியினரின் உணவாகிவிட்டது என்றால் பாருங்கள்.
நாட்டின் தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, விளைநிலங்களில் விவசாயத்தின் தன்மை, மக்களின் உடல் அமைப்பு, சமுகப் பொருளாதாரச் சூழல் ஆகிய வற்றை உள்ளடக்கியதே உணவுப்பழக்கம். அப்படியெனில் வெப்பமண்டல நாடுகளில் வாழும் நமக்கு இந்த வகை உணவுப் பொருட்கள் தெவையில்லை.