Mithra4321
புக்கிட் பஞ்சாங் (Bukit Panjang)
புக்கிட் பஞ்சாங் நகரப் பகுதி சிங்கையின் வடமேற்கில் அமைந்துள்ளது. புக்கிட் தீமாவில் இருக்கும் நீளமான மலையால் இப்பெயர் வந்துள்ளது. இப்பகுதி ஒரு நீண்ட மலையின் தாழ்வான பகுதியில் உள்ளது. இப்பகுதியின் மேற்கே புக்கிட் பாத்தோக்கும், வடமேற்கே சோ சூ காங்கும், வடக்கில் சுங்காய் காடும், தெற்கே மத்திய நீர் பிடிப்பும் மற்றும் கிழக்கே புக்கிட் தீமா பகுதியும் உள்ளன. புக்கிட் பஞ்சாங் பகுதி 36 மீட்டர்/118அடி என்ற அளவில் உள்ளது.
பெயர் வரலாறு ‘புக்கிட் பஞ்சாங்’ என்ற பெயர் மலாய் மொழியிலிருந்து வந்ததாகும். புக்கிட் என்றால் மலை என்றும் பஞ்சாங் என்றால் நீளம் என்றும் மலாய் மொழியில் பொருள்படும். புக்கிட் பஞ்சாங் முதலில் சீன மொழியில் cheng hwa" என்று இருந்தது. அது பின்பு (ஹன்யுபின்யின்) எளிமையான சீன மொழி மாற்றமாக செங்குவா(zhenghua) என்று அழைக்கப்பட்டது. அப்போதும் அது மக்களிடையே பிரபலம் அடையாமல் இருந்தது. மலாய் மொழியில் புக்கிட் பஞ்சாங் என்று பெயர் மாற்றம் கண்டபின் பிரசித்திப் பெற்றது. மேலும், செங்குவா என்ற பெயர் அழியாது பாதுகாக்கச் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு இப்பெயரையே வைத்துள்ளனர். சிங்கப்பூரின் மேற்கே உள்ள புறநகர் பகுதிதான் புக்கிட் பஞ்சாங். இங்கு 1981 ஜூன் 15இல் வீடமைப்பு மேம்பாட்டுக் குழுவால் வீடுகள் கட்டத் தொடங்கப்பட்டன. 1985 மே 20 முதல் அடுக்குமாடி கட்டடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டன. ஆனால், ஓரறை, இரு அறை வீடுகளே கட்டப்பட்டன. 1989ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4,5 மற்றும் 6 அறைகள் கொண்ட வீடுகள் கட்டப்படுகின்றன.
நிர்வாகம் புக்கிட் பஞ்சாங் பல அடுக்குமாடி குடியிருப்பும் வணிக மேலாண்மையின் பராமரிப்பும் புக்கிட் பஞ்சாங் நகர மன்ற நிர்வாகத்தின்கீழ் வருகிறது. வீடமைப்பு, வசதிகள் மற்றும் இடங்கள் புக்கிட் பஞ்சாங் பலராலும் அறியப்பட்ட ஓர் அமைதியான நகரப் பகுதி. இப்பகுதி பழைய, புதிய அடுக்குமாடி கட்டடங்களின் கலவையாக உள்ளது. இங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு, கல்வி தேவைகளுக்காகப் புக்கிட் பஞ்சாங், செங்குவா, சென்ஜா-கேஷ்யூ ஆகிய சமூக மன்றங்கள் உள்ளன. பேரங்காடிகள் புக்கிட் பஞ்சாங் பிளாசா, ஹிலாயன் ஆகியன இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பேரங்காடிகளாகும். இது இப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே புக்கிட் பஞ்சாங் இலகு கடவு இரயில் (LRT) நிலையம், பெருவிரைவு இரயில் நிலையம், புக்கிட் பஞ்சாங் பேருந்து நிலையம் போன்றவை உள்ளன. பேரங்காடிகளுக்கு எதிர்புறத்தில் திருக்குன்றம் முருகன் கோவிலும் உள்ளது. சிங்கையிலுள்ள மற்ற வணிக வளாகங்களைப் போல இங்கு மக்களால் விரும்பப்படும் வகையில் பல உணவகங்களுடன் தற்போது இன்னும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் தேவைகளை பூர்த்திச் செய்யும் வகையில் வீடுகளின் அருகே உணவங்காடி, பல்பொருள் அங்காடி போன்ற அங்காடிகள் உள்ளன. மேலும், ஃபாஜார்(fajar), கிரீன்ஃரிட்ஜ்(green ridge), பங்கிட்(Bangkit) போன்ற பேரங்காடிகளும் உள்ளன.
வார இறுதியில் பங்கிட் பேரங்காடிப் பகுதியில் பல நடவடிக்கைகள் நடைபெறும். மேலும், சீன புத்தாண்டு கொண்டாட்டமும் நடைபெறும் புகழ்பெற்ற இடமாகும். இதை மேற்கு சைனா டவுன் என்றும் கூறுவார்கள். பார்வையாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் பல புதிய மாறுபட்ட விற்பனைகள் இம்மையத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் அல்-இமான் மசூதியும், செங் ஹுவா செர் சியா சீனக் கோவிலும் உள்ளது. ஹிலாயன் பேரங்காடி அடுக்குமாடியுடன் கூடிய தனியார் குடியிருப்பாகும். இது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இது புக்கிட் பஞ்சாங்கில் புதிதாகச் சேர்க்கப்பட்ட நவீன பேரங்காடியாகும். புக்கிட் பஞ்சாங்கில், புக்கிட் பஞ்சாங் பூங்கா, செங்குவா பூங்கா என இரண்டு பூங்காக்கள் உள்ளன. இவ்விரு பூங்காக்களையும் இணைத்து இடையே விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிப் பகுதி, 2.5 கி.மீ. தூரம் மிதிவண்டி ஓட்ட, மெதுவோட்டம் ஓடத் தடங்கள் உள்ளன. புக்கிட் பஞ்சாங் பூங்கா அருகேயுள்ள குளத்தின் விளிம்பில் ஒரு விளையாட்டு மையமும் சமூக மன்றமும் உள்ளன. இவை சென்ஜா-கேஷ்யூ சமூக மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்குள்ள நீச்சல் குளம் ஒலிம்பிக் நீச்சல் குளத்தினைப் போன்று பெரியது. இதனுள் பலதரப்பட்ட மைதானங்களும், முக்கிய நிகழ்வுகள் நடைபெற அறைகளும் உள்ளன.
சமூக மன்றங்கள் -செங்குவா சமூக மன்றம் -புக்கிட் பஞ்சாங் சமூக மன்றம் -சென்ஜா-கேஷ்யூ சமூக மன்றம் கல்வி தொடக்கப்பள்ளிகள் -பெக்கான் தொடக்கப்பள்ளி -புக்கிட் பஞ்சாங் தொடக்கப்பள்ளி -கீரீன் ரிட்ஜ் தொடக்கப்பள்ளி -வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி -வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி -செங்குவா தொடக்கப்பள்ளி உயர்நிலைப் பள்ளிகள் - அசம்சன் இங்கிலிஸ் உயர்நிலைப் பள்ளி - பாஜார் உயர்நிலைப் பள்ளி - கீரீன் ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளி - வெஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப் பள்ளி - செங்குவா உயர்நிலைப் பள்ளி
போக்குவரத்து புக்கித் தீமா, கிராஞ்சி ஆகிய இரு விரைவுச் சாலைகள் புக்கிட் பஞ்சாங் வட்டாரத்தின் அருகே உள்ளன. இவை மற்ற வட்டாரங்களுக்கு விரைவாகச் செல்ல உதவும் நுழைவாயில்களாக உள்ளன.
புக்கிட் பஞ்சாங் இலகு இரயில்(LRT) நிலையம் 1999 ஜூன் 11 முதலாக முழுமையாக ஓட்டுநர் இன்றிச் செயல்பட ஆரம்பித்தது. பல பகுதிகளை இணைக்கும் பேருந்து சேவைகளும் இங்குள்ளன. மேலும், மற்ற பேருந்துகள் இப்பகுதியிலிருந்து மற்ற நகர பகுதிகளுக்கு செல்லும் வகையிலும் செயல்படுகின்றன.
. புக்கிட் பஞ்சாங் டௌன்டவுன் விரைவு ரயில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செயல்படத் தொடங்கியது. இச்சேவை மற்ற நகரங்களுக்கு விரைவாகச் சென்றுவர உதவுகிறது. இது இலகு இரயில்(LRT) நிலையத்தினுள்ளே அமைந்துள்ளது.
அரசியல்
புக்கிட் பஞ்சாங் அரசியல் மூன்று பகுதிகளாகச் செயல்படுகிறது. அங்குத் திரு தியோஹோ பின் வடமேற்குச் சமூக மேயராகவும், லியாங் எங் ஹ்வா அவர்கள் ஹாலந்த்-புக்கிட் தீமா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திரு விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் செங்குவா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் செயல்படுகின்றனர்.
நன்றி. மித்ரா பாலமுருகன் (2E1) யூனிட்டி உயர்நிலைப்பள்ளி
Mithra Balamurugan (2E1) Unity Secondary School