எனது பெயர் வான்மதி. எனது இயற்பெயர் முத்துக்குமரன். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் எனது சொந்த ஊர். இளங்கலை ஆங்கிலம் படித்திருந்தாலும், தமிழின்மீது தணியாத தாகம் உண்டு. தமிழிலே பேசவேண்டும். தமிழிலே எழுதவேண்டும். தமிழாகவே வாழ வேண்டும் என்று விரும்புகிறவன். 1996 ஆம் ஆண்டு வான்மதி என்ற பெயரில் கையயழுத்துப் பிரதி மாத இதழை வெற்றிகரமாக நடத்தி பெயர் பெற்றதோடு, அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அச்சுப் பிரதிகளாக வெளியிட்டேன். இரண்டு ஆங்கில நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு தன்னம்பிக்கை நூல்கள், இரண்டு பொது அறிவு நூல்கள், இரண்டு கணினி தொடர்பான நூல்கள் வெளியிட்டுள்ளேன். தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதலே என்னை எழுதத் தூண்டியது. மேலும், எனதூரிலே, வான்மதி கணினி மையம் துவங்கி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்கி வருகிறேன். புராஜெக்ட் தொடர்பாக வரும் மாணவர்களுக்கு நமது விக்கிபீடியாவிலிருந்துதான் செய்திகளைத் தொகுத்து அவர்களுக்கு அளிக்கிறேன். அந்த வகையில் எங்களுக்கு உதவி வரும் விக்கிபீடியாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mkvanmadhi&oldid=264066" இலிருந்து மீள்விக்கப்பட்டது