ஒரு சுவாரஸ்யமான விடயம் .............................................. பரபரப்பாக நடைபெறும் கால்பந்து போட்டியின் ஒரு முக்கியமான ஆட்டத்தின் மும்முரமான தருணத்தில், ரசிகர் ஒருவர் ஆடுகளத்தில் இருக்கும் வீரரின் மீது வாழைப்பழம் ஒன்றை வீசி எறிந்தால் என்ன செய்வது ?

ஆட்டத்தை நிறுத்திவிட்டு வீசி எறிந்தவர் யாரென்று தேடி அவரை வசைபாடலாம், நடுவரிடம் முறைப்பாடு செய்யலாம், வீசி எறியப்பட்ட பழத்தை மீண்டும் ரசிகர்களை நோக்கி வீசலாம் அல்லது போனால் போகட்டும் என்று பழத்தை ஓரமாக எறிந்துவிட்டு ஆட்டத்தைத் தொடரலாம்.

           ஆனால் பார்சிலோனா அணிக்கும் வில்லாரியல் அணிக்கும் இடையே நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தன் மீது வீசிய வாழைப்பழத்தை என்ன செய்தார் தெரியுமா பார்சிலோனா அணியின் வீரர் டானி ஆல்வெஸ்?

அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வீசப்பட்ட பழத்தை எடுத்தார், உரித்தார், உண்டார். அப்போட்டியில் பார்சிலோனா அணி 3-2 எனும் கோல் கணக்கில் வென்றனர் என்பது வேறு கதை. ஆட்டத்தின் முக்கியமான ஒரு தருணத்தில் அவர் ஒரு கார்ணர் எடுக்கத் தயாரானபோதே பழத்தை எறிந்தார் ரசிகர் ஒருவர். ஆனால் இதற்கெல்லாம் அசராத டானி ஆல்வெஸ் அதை கையாண்டவிதம் பலரது பாராட்டையும், வீசிய ரசிகருக்கு ஒரு பதிலடியாக அமைந்தது. ரசிகர்களிடையே இருக்கும் போட்டி மனப்பான்மை மற்றும் தமது ஆதரவு அணி வெல்ல வேண்டும் என்கிற வெறி காரணமாக இப்படியாக ஆட்டத்தின் போது வீரர்கள் மீது பலவிதமான பொருட்களை வீசுவது ஸ்பெய்னில் புதியது அல்ல என்றாலும், இதை ஒரு நகைச்சுவை உணர்வோடு கையாள வேண்டும் என்று கூறுகிறார் ஆல்வெஸ்.

வீசிய பழத்தை ஆல்வெஸ் உரித்து தின்றவுடன் உடனடியாக பறந்து வந்தது டிவிட்டரில் செய்தி ஒன்று. அனுப்பியவர் பார்சிலோனா அணியின் முன்னாள் வீரர் காரி லினேக்கர். அதிலிருந்த செய்தி...அப்படி போடு என்பதே. இப்படியான இனவாத தாக்குதலை புறக்கணிப்பின் மூலம் கையாளுவதே சிறந்த வழி என லினேக்கர் அந்த டிவிட்டர் செய்தியில் விளக்கியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாகவே அல்வெஸ் ஸ்பெயினில் இப்படியன இனவாத வெறுப்புணர்வுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு ஆட்டத்தின் இடையே இப்படியான ரசிகர்கள் இப்படி நடந்து கொள்ளும்போது அச்செயல்களை புறக்கணிப்பதன் மூலம் அவர்களது எண்னம் ஈடேறாமல் செய்ய முடியும் எனவும் டானி ஆல்வெஸ் போட்டிக்கு பிறகு தெரிவித்தார். எதையுமே எளிதாக மாற்ற முடியாது எனவும் ஆல்வெஸ் கூறுகிறார். ஆக மொத்தம் பழத்தை வீசி எறிந்தவருக்குத்தான் ஒரு வாழைப்படம் நட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohamed_ijlan&oldid=1652800" இலிருந்து மீள்விக்கப்பட்டது