Mohansakya
"திரிக்குறள்" மீட்பால் நம் வரலாறு மீளும்--Mohansakya (பேச்சு) 02:28, 21 சூலை 2012 (UTC)Sakya Mohan
பரிமேலழகர் மற்றும் உ. வெ. சாமிநாதர் போன்ற "தமிழ் தாத்தா"க்களால் "வள்ளுவ " புத்த தம்ம காலத்து சாக்ய பேரறிஞர் போதிசத்துவர் நிலை அடைந்த திருவள்ளுவர் தமிழில் வழங்கிய "திரிக்குறள்" எனும் பதினெண் கீழ்கணக்கு நூல், பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுவது போல், "உலகு புகழ் அறிய திரிபேத வாக்கியங்கள் என்றும், திரிபீட வாக்கியங்கள் என்றும் வழங்கிய மூவருமொழியாம் முதல் நூலுக்கு வழி நூலாகத் தோன்றியவை திரிக்குறளும், சார்பு நூலாக தோன்றியவைகள் திரிமந்திரம், திரிவாசகம், திருவெண்பா, திருமாலை, திரிகடுகம், சித்தர்கள் நூல் முதலியவைகள் ஆகும்."நமது பாட்டன் அறிவுச் சொத்தை எல்லாம் நம்மிடம் இருந்து பிடுங்கி தமதாக்கிக்கொள்ளும் தமிழர் ஜாதிகளுக்கு பண்டிதர் கூறும் செய்திகள் அதிர்ச்சியாகவும் இருக்கும்.
"இத்திரிக்குறளுக்கு "திரு"வென்னும் அடைமொழி சேர்த்துத் "திரு"க்குறள் என சிறப்பு வழங்கினும் தன்ம பிடக, சுத்த பிடக, வினைய பிடக என்னும் மகட பாஷா முதல் நூலுக்கு திராவிட பாஷா வழி நூலாம் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் திரிக்குறளே உடன்பாடாதலின்" திருவென்னும் அடை மொழி சிறப்பாயினும், தமிழியப்படுத்துதலின் பொருட்டு சைவ ஜாதிகள் செய்த இருட்டடிப்பாகவே இன்றைய நிலையில்" சாக்ய குடிகளின் பூர்வ சொத்து களவாடப்பட்டு "திருக்குறள்" என வழங்கப்பட்டு வருகிறது. நாம் இந்த போதி அறிவுப் பொக்கிஷத்தை நமதென்று அறிவிக்க இதன் மூலப் பெயரான "திரிக்குறள்" எனும் பெயரை மீண்டும் மீட்க வேண்டும் இதன் வழி இந்த திரிபிடகத்தின் வழிநூலை மீட்கும் நிலையில், நமது அறிவாற்றல் மிக்க சமூகம் ஏன் தாழ்த்தப்பட்ட சமூகம் என ஆக்கப்பட்டது என்பதை இந்த ஜாதிகளுக்கு விளக்கலாம். விவரம் அறிய பண்டிதமணி அயோத்திதாசரின் "தமிழன்" பத்திரிக்கையை அடியொற்றி வெளியிடப்பட்ட "அயோத்திதாசர் சிந்தனைகள்" தொகுப்புகளை படியுங்கள்.