என் பெயர் மிருத்துன் ஆதித்யா ரத்தினசபாபதி (Mrithun Aditya Rathinasabapathi).பெற்றோர்களுக்கு முதல் குழந்தையாக திருப்பூர் நகரில் 1997 அக்டோபர் 14 ஆம் தேதி எனக்கு இந்த உலகம் அறிமுகமானது.எனக்கு பிறகு 2001 ல் என் தம்பி பிறந்தான்.என் அழகிய குடும்பத்தில் நான்கு பேர்.நான்,என் பெற்றோர்கள் மற்றும் என் தம்பி.ஓர் மனிதன் முன்னேறவும் அவன் சந்தோஷமாக இருக்கவும் நல்ல குடும்பம் என்பது அவசியம்.இந்த விஷியத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.எனக்கு ஒரு அற்புதமான் குடும்பம் அமைந்துல்லது.என் வெற்றிக்கு காரணம் என் குடும்பம் மட்டுமே. என் வாழ்கையை சீர் படுத்தியது என் குடும்பம் மட்டுமல்ல,என் பள்ளிக்கூடமும் தான்.நான் ஒரு உறைவிடப் பள்ளியில் படித்தேன்.என்னுடைய ஏழு வருட காலத்தை பள்ளியில் தான் கழித்தேன்.அதனால் என் பள்ளியும் என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தது. பள்ளி பரூவத்தில் எனக்கு புத்தகங்களின் மீது நாட்டம் வந்தது.டான் பிரௌன்,பாலோ கொயிலோ,அமிஷ் ட்ரிபதி புத்தகங்களை நான் மிகவும் விரும்பி படித்தேன்.பள்ளிக்கூடத்தில் தான் எனக்கு விளையாட்டிலும் ஈடுபாடு வந்தது.கால்பந்து,மட்டை பந்து மற்றும் கோடைப் பந்து ஆகிய விளையாட்டுகளில் பங்குபெற்றேன்.ஒழுக்கம்,குழுவாக பனிபுரிதல் ஆகிய முக்கிய குணங்களை எனக்கு இந்த விளையாட்டுகள் கற்றுக்கொடுத்தது.என் பள்ளிக்காலம் எனக்கு தந்த மிகப் பெரிய பரிசு என் நன்பர்கள் தான்.என்னை புரிந்துகொல்லும் படி எனக்கு சில நெருங்கிய நன்பர்கள் கிடைத்தர்கள்.இன்னும் அவர்கள் என்னுடன் நெருக்கமாக இருக்கிரார்கள். நான் ஒரு சினிமா பைத்தியம்.நான் எந்த குறிப்பிட்ட நடிகரின் ரசிகன் அல்ல.எல்லா நல்ல படங்களையும் பார்த்து ரசிப்பேன். நல்ல திரை இசை பாடல்கலுக்கு நான் அடிமை.எனக்கு பிடித்த பாடல்களே என் மிகப் பெரிய போதை.என் இன்ப துன்பத்தில் கழந்திருப்பது இசை மட்டும் தான். எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை.அதாவது நான் என் சொந்த உழைப்பால் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.சிரிதோ,பெரிதொ ஒரு நிருவனத்தை நான் தொடங்க வேண்டும்.அதுவே என் வாழ்க்கை லட்சியம்.என் மிகப் பெரிய வாழ்க்கை தத்துவம் என்னவென்றால் என் செயல்களால் நான் யாரையும் துன்புறுத்தக் கூடாது மற்றும் எல்லா மனிதர்களையும் சமமாக மதிக்க வேன்டும்.இந்த தத்துவமே என் முழு வாழ்க்கையையும் வழிநடத்துகிறது. இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை தந்ததற்காக இறைவனுக்கு நன்றிகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mrithunaditya&oldid=1968798" இலிருந்து மீள்விக்கப்பட்டது