Muhilai Rajapandian
பிறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் முகிலன் குடியிருப்பு என்னும் ஊரில் அக்டோபர் மாதம் ஒன்பதாம் நாள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதாம் ஆண்டு பிறந்துள்ளார்.
பெற்றோர்
இவரது பெற்றோர் சு. இரெத்தினசாமி – பத்மாவதி ஆகியோர் ஆவர்.
கல்வி
திருநெல்வேலியில் உள்ள ம. தி. தா. இந்துக் கல்லூரியில் எம்.ஏ., படித்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., பட்டமும் பெற்றுள்ளார்.
பணி
சென்னை மாநிலக் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உதவி இயக்குநராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகவும் பணியாற்றியுள்ள இவர், திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியிலும் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியிலும் சென்னை, நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.
படைப்புகள்
ஐந்து நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாடக நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
இவரது அலைகளின் காலம் என்னும் நாவல், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தோள்சேலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
இவரது அருகருகே நான்கு வீடுகள் என்னும் நாவல், தென்திருவிதாங்கூரிலிருந்து தமிழ்ப் பகுதிகளைப் பிரித்து, தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு நடைபெற்ற போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தேரிமணல் என்னும் நாவல், மண்டைக்காட்டுக் கலவரத்தைப் பேசுகிறது. போகிற வழி என்னும் நாவல், மத மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது. ஆலங்கால் என்னும் நாவல், ஒரு சமுதாயத்திற்கிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விளக்கும்.