Journalist
Musadeek Abdul Mujeeb
Under the Register of Department of Government Information Sri Lanka (Reg. No:PJ1447 - 2016/17)
பதவியில் உள்ளார்
பதவியில்
12 January 2015
Minister of Justice
குடியரசுத் தலைவர்Mahinda Rajapaksa
பிரதமர்D. M. Jayaratne
தனிப்பட்ட விவரங்கள்
தொழில்Lawyer
இணையத்தளம்rauffhakeem.lk

வாழ்க்கை வரலாறு

முஸாதிக் அப்துல் முஜீப் ஜுலை 18 ம் திகதி 1994 ம் ஆண்டு நீர்கொழும்பில் பிறந்தார்.தாய் (சிந்தா),தந்தை (முஸாதிக்) மற்றும் இரு சகோதரிகளை கொண்ட அழகான குடும்பத்தில் செல்வப் புதல்வனாவார்.

ஆரம்ப கல்வியை 1999ம் ஆண்டு நீர்கொழும்பு அல்-அஸ்கர் பாலர் பாடசாலையில் பயின்று முதற்கட்டமாக 2000 ம் ஆண்டு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் காலடி எடுத்து வைத்தார்.அன்று முதல் சிறந்த மாணவனாக பயின்ற இவர் 2010ம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையை முகம் கொடுத்தார்.பரீட்சையின் பெறுபேறு வரும் வரை காலத்தை கடத்தாமல் AAT கற்கை நெறியில் முதலாவது பரீட்சையை எதிர் கொண்டு சிறந்த பெறுபேற்றையும் பெற்றார்.

க.பொ.த சாதாரண பரீட்சையின் வெற்றியுடனான சிறந்த பெறுபேறுகள் வெளி வரவே 2011ம் ஆண்டு உயர்தரத்திற்கும் ஆயத்தமானார்.கணக்காளரை இலட்சியமாக கொண்டு வர்தக பிரிவை தேர்ந்தெடுத்தார்.

மற்றைய மாணவர்கள் போன்றே துடிதுடிப்பாக இருந்த போதிலும் கல்வியில் மிக ஆர்வம் காட்டி ஆசிரியர் மட்டுமன்றி அதிபர் மனதிலும் இடம் பிடித்தார். சுமார் ஒரு வருட காலத்திற்குள் AAT கற்கை நெறியை சம்பூர்ணமாக பூர்த்தி செய்தார். உயர்தரம் கற்க ஆரம்பித்த காலத்திலிருந்து கல்வியிலும் கல்வி சார்ந்த ஏனைய சில போட்டுகளிலும் பாடசாலை சார்பாக பங்குபற்றி பாடசாலைக்கும் பெறுமையை பெற்றுக்கொடுத்தார்.

உயர்தர 2ம் வருட தொடக்கத்திலே பாடசாலையில் சிறந்த மாணவனாக காணப்பட்ட இவர் பாடசாலை ஆசிரியர்களின் வாக்கேடுப்பின் முலம் மாணவத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டு பதவி ஏற்றார். விவாத போட்டிகளிலும் பங்கு பற்றி பாடசாலைக்கு நற் பெயரை வாங்கிக் கொடுத்தது மட்டுமன்றி பாடசாலை கால விளையாட்டு நிகழ்வில் நெடுந்தூர ஓட்ட வீரராக வலம் வந்து தங்கப் பதக்கம்,வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.

பாடசாலை சார்பாக வலையமட்டப் போட்டி மாவட்ட மட்ட போட்டி என்று பல திசைகளிலும் பாடசாலைக்கு பெறுமையை பெற்றுக்கொடுத்தார். இவ்வாறு இருக்கையில் பாடசாலை ஆசிரியர்களின் விருப்புக்கு இணங்க பாடசாலையின் ஊடக தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சிறிது காலம் செல்ல பாடசாலை மாணவமன்றத்தி தலைவராகவும் ஆசிரியர்களால் நியமிக்கப்பட்டார். மாவட்ட மட்ட,வலையமட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பாடசாலையினை மேலும் முன்னேற்றினார்.

கல்வி துறையில் மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் சிறந்த மாணவராக திகழ்ந்த இவரை ஊடகத்துறையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது.

இதன் தூண்டுதலாக நீர்கொழும்பு சார்பாக சக்தி,சிரச ஊடகவியலாளரை தெரிவு செய்யும் செயலமர்வு ஒன்று சக்தி,சிரச தலமைக்காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் நீர்கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 150ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதிலும் நீர்கொழும்பு சார்பில் இரண்டு பேர்கள் தெரிவுசெய்யப்பட்டனர் அதில் இவரும் ஒருவர். தொலைகாட்சியில் பற்பல தகவல்களை ஒளிபரப்பு செய்தார். நீர்கொழும்பு நகரத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் பிரதேச மக்களின் தேவைகள் போன்றவை இவர் மூலம் நிறைவேற்றப்பட்டது. தொலைக்காட்சி மட்டுமன்றி பத்திரிகையிலும் மக்களுக்காக பிரசுரம் செய்தார்.இதன் விளைவால் நீர்கொழும்பு சம்பந்தமான பல தகவல் வழங்கியவர் என்ற ரீதியில் நீர்கொழும்பிலே பிராந்திய செய்தியாளராக முடி சூடப்பட்டார்.

உயர் தர பரீட்சை கூட முடிவடையாத நிலையில் கம்பனி ஒன்றில் கணக்காய்வாளருக்கான பயிற்சிக்கும் சேர்த்துக் கொள்ளட்பட்டார். நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் அவர்களின் நற் தொடர்பில் இருந்தமையால் அப்துல் முஜீப் அவர்கள் நவமணி பத்திரிகையின் விஷேட நிருபராகவும் நியமிக்கப்பட்டார். இதற்கான இலங்கை சனநாயக சேசலிச குடியரசின் ஊடக அமைச்சின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

சமூகவலைத்தலங்கள்,தொலைக்காட்சி பத்திரிகை எங்கும் இவரது ஆக்கங்கள்,செய்திகள் வெளி வந்த வண்ணம் காணப்படும். இதனடுத்த கட்டமாகவே இவர் உயர்தர பரீட்சையை முகங் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறுபேற்றையும் பெற்றுக் கொடுத்தார்.இவர் பாடசாலையின் முன்னால் செயலாளாளர் ஆகவும் வகி பாகம் வகித்தார். பாடசாலை வாழ்க்கை முற்றுப் பெற்றதை அடுத்தும் பாடசாலையுடன் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து தளபாட வசதிகள்,பாடசாலை முன்னேற்ற நடவடிக்கைகளில் மும்முறமாகவும் ஈடுபட்ட வண்ணம் உள்ளார்.

AAT கற்கை நெறியை பூரணப்படுத்தியதன் அடுத்து CHARTERED ACCOUNT பாட நெறியின் முதலாம் கட்டத்தையும் முடித்துக் கொண்டார். இதனால் கொழும்பு கொல்லுப்பிடியிலுள்ள NIHAJ OVERSEAS (PVT)LMT கு கணக்காளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

ஊடகத்துறையை கைவிட்டு விடாமல் ஒரு புறம் வேலை மறு புறம் ஊர் நலன் கருதி சொந்த முயற்சியால் 3 பங்காளர்கள் சேர்த்து தொலைக்காட்சி அலையொன்று ஆரம்பித்து அதற்கு UTv Srilanka என்றும் பெயரிட்டனர். பாராளுமன்ற மறு சீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்து அரச அங்கீகாரமுடைய ஊடக அலை வரிசையாக வழி நடத்தி வருகின்றார்கள்.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் ஊடக பிரிவில் இணைந்து ஜனாதிபதி சம்பந்தமான தகவல்களை திரட்டியது மட்டுமன்றி ஜனாதிபதியுடனான பயணமொன்றில் பாரிய குழுவுடன் பயணத்தில் ஈடுபட்டு உடனுக்குடனான தகவல்களையும் வழங்கினார். இதன் நோக்கில் பெரும் அதிஷ்ட வசமாக நினைத்த இலக்கிற்கான வேலை ஒன்று தேடி வர கட்டார் நாட்டிற்கு பயணமானார்.

கட்டாரிலும் பகுதி நேர ஊடகவியளாளராக இணைந்து கட்டார்,இலங்கை சம்பந்தமான தகவல்களை திரட்டி கட்டாரில் இருந்த வண்ணமே சக்தி,சிரச தொலைக்காட்சிக்கு மட்டுமன்றி நவமணி பத்திரிகைகளுக்கும் தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளார். இச் சிறு வயதிலே கட்டாரிலும் கட்டார் சர்வதேச ஊடடவியளாளராகவும் கானம் அல் தானி அமைப்பின் கீழ் AL RAWDA DAIRY & JUICE PRODUCT ல் கணக்காளராக பணியாற்றி வருகின்றார்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Musadeek_Mujeeb&oldid=3294416" இலிருந்து மீள்விக்கப்பட்டது