Muthurajtsi
என்னை பற்றி,
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பொன்காசு விளையும் நல்ல தென்காசி வட்டத்தில் தமிழகமும் கேரளமும் இணையும் செங்கோட்டை மாமண்ணில் திரு.ராமையா - சாரதா அவர்களுக்கு தலை பிள்ளையாய் இந்த மண்ணிற்கு ஒரு தலைமகனாய் வந்து பிறந்தேன்,
தலைவிதி போலீஸ் காரரின் மகனாக பிறந்துவிட்டேன், தந்தைக்கு அடிகடி இடமாற்றம் அதுபோலத்தான் எனக்கும் இதுதான் சொந்த ஊர் என்று இதுவரை சொல்லமுடியாத ஒரு நிலை....
என்னுடைய பரம்பரை வாழ்ந்து வளர்ந்தது தென்காசி வட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள கல்லூரணி என்ற கருணையான கிராமம் என என் தாத்தா சொல்லி நான் கேட்டு இருக்கிறேன்,
நான் பிறந்தது முதல் இன்று வரை பல ஊர்களை பார்த்து இருக்கிறேன்,
- நான் பிறந்து சிலவருடங்கள் தென்காசி அருகில் உள்ள கீழப்புலியூர் என்ற கிராமத்தில் வளர்ந்தேன்,
- பின்னர் எல்.கே.ஜி முதல் ஒன்றாம் வகுப்பு முடியும் வரை திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் படித்துக்கொண்டே வளர்ந்தேன்,
- பின்னர் இரண்டாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை திரும்பவும் தென்காசி அருகில் உள்ள கீழப்புலியூர் என்ற கிராமத்தில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டுவிட்டே அங்கு வளர்ந்து வந்தேன்,
- பின்னர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த என்னை என் தந்தையர் சேரன்மகாதேவியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்தனர் பின்னர் என்னுள் தோன்றிய படிப்பு ஆர்வம் நன்றாக அப்படிப்பை முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்க, என் தந்தை பொறியியல் படிப்பினை மேற்கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டார், தந்தையின் ஆசைக்காக அதையும் படித்து முடித்தேன்,
பின்னர் படித்து முடிச்சாச்சி வேலை செய்யவேண்டுமே, பின் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்தாரை வரவேற்கும் சென்னை மாநகரில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியை தொடர்ந்தேன், நான் முதன் முதலில் என் கையில் வாங்கிய சம்பளம் 11,000 ரூபாய், முதன் முதலாக வாங்கிய சம்பளம் மனம் நிறைய சந்தோசம், அந்த சந்தோஷத்தில் முதன் முதலாக என்னை இந்த மண்ணுலகிற்கு தந்த என் தாய்க்கு ஒரு புடவை வாங்கி கொடுத்தேன், அப்போது என் தாயின் கண்ணில் வந்த ஆனந்த கண்ணீர்தான் நான் இந்த மண்ணில் சாதித்த முதல் சாதனை!!!
பின்னர் வோடபோன், ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், இண்டிகாம் போன்ற நிறுவனங்களில் வாடிகயாளர் சேவை அதிகாரி, ஜோன் பொறுப்பாளர், போன்ற பொறுப்புகளை வகித்தேன்,
பின்னர் கடவுள் கொடுத்த ஒரு வரபிரசாதம் சென்னை FAST TRACK INDIA PRIVATE LIMITED என்ற நிறுவனத்தில் HR EXCUTIVE என்ற பொறுப்பு கிடைத்தது, பின்னர் எனது தூரத்து சொந்தகாரர் ஒருவரின் உதவியால் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ADMIN HR-ஆக சேர்ந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது,
இன்று இறைவனின் அருட்கொடையால் திருநெல்வேலி மாவட்டம், பார்பவர்களை எல்லாம் பாசத்தால் அரவணைக்கும் பாவூர்சத்திரத்தில் ஒரு அழகான வசந்தமாளிகை என் வருங்கால மனைவிக்காக கட்டியிருக்கிறேன்,
ஆரம்பத்தில் நானும் தாய், தந்தையர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்றுதான் ரொம்ப ஆசை பட்டேன், என்று என் காதலியை பார்த்தேனோ அன்றே அந்த நினைப்பு உடைந்துவிட்டது, அவளை அவ்ளோ ஈசியாக காதலிக்க வைப்பதற்கு என்னால் முடியவில்லை, என் தலைவர் சிலம்பரசன் போல பல முயற்சிகளை கையில் எடுத்து என்காதலியை என் வசம் ஆக்கினேன், காதலியை கரெக்ட் செய்தால் போதுமா? அடுத்தது என் பெற்றோரை கரெக்ட் செய்யவேண்டுமே, அதுதான் இப்போது குழப்பமாக இருக்கிறது.... சீக்கிரம் நல்ல முடிவு கிடைக்கும்,
அன்பே உன்னை நான் நன்றாக பார்த்துகொள்வேன் கண்ணே... என்ன விட்டா உன்ன எவண்டி பார்த்துப்பான் , நல்லா பார்த்துபேனு சொல்லி பொய்யா நடிப்பான், ஒரு தகப்பன் போல இருப்பேன், ஒரு தாய போல இருப்பேன், உன் நண்பன் போல நடப்பேன், அந்த கடவுள் போல காப்பேன், உன் குழந்தையாவும் நான் பிறப்பேன்