பயனர்:Nanxxika/மணல்தொட்டி

சிங்கப்பூர்த் துறைமுகம்

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்குத் துறைமுகமே முக்கியக் காரணம் என்று கூறுவது மிகையாகாது.  ஓரே தலைமுறையில் சிங்கப்பூர்  முதல்  உலகத் தரம் வாய்ந்த பொருளாதாரமாகியதற்குத் துறைமுகமே  காரணமாகும். இன்றும் சிங்கப்பூரின் முழு உள்நாட்டு உற்பத்தியில் 7% கடல்வழி வணிகம் மற்றும் கப்பல்கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் சேவைத்துறையே ஈட்டுகிறது.

இன்று நாளுக்கு 91000 கொள்கலகன்களும் 60 கப்பல்களுக்கு சிங்கப்பூர்த் துறைமுகத்துக்கு வருகின்றன. இயற்கை வளமில்லாத இந்நாட்டுக்கு உணவு வகைகள் முதல் கட்டுமானப் பொருட்கள்வரை இங்கு கையாளப்படுகின்றன. 19ஆம்& 20ஆம் நூற்றாண்டுகளில்  தீர்வையற்ற துறைமுகமாக இயங்கி வாணிகத் துறையில் முத்திரை பதித்துள்ளது. பிரம்மாண்டமான பாரந்தூக்கிகள், மின்னிலக்க முறைப்படுத்திய கணினி சேவைகள் மற்றும் மிகப் பெரிய கொள்கலக் கப்பல்கள் நங்கூரமிட ஆழமான நிர்ப்பகுதிகள் எனப் பற்பல வசதிகளாலும் மாற்றங்களாலும்தான் இச்சாதனை சாத்தியப்பட்டது.

சிங்கப்பூர்த் துறைமுகம்

 Telok Ayer Basin, 1940s

இப்போது சிங்கப்பூர்த் துறைமுகம்  உலகிலேயே   மிகப்  பரபரப்பான  இரண்டாவது  துறைமுகமாக விளங்குகிறது. உலகில் உள்ள கொள்கலன்களில் ஐந்தில் ஒரு பங்கை சிங்கப்பூர் துறைமுகம்  பெற்றிருக்கிறது..

உலகின் வருடாந்திர கச்சா எண்ணெய்  சுத்திகரிப்பு மற்றம் வழங்கும் சேவையில்  பாதியைச் சிங்கப்பூர் துறைமுகம்  செய்து வருகிறது. 600க்கும் மேலான வெவ்வேறு நாட்டுக் கப்பல்கள் நமது துறைமுகத்திற்கு வந்து செல்கின்றன.

 Port of Singapore, 2007

சிங்கப்பூர் குறைந்த நிலப்பகுதியையும்  , இயற்கை வளத்தையும்  உடைய  நாடாக இருப்பதால் ஒரு சிறந்த துறைமுகம் அதற்குத் தேவைப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து  இயற்கை வளங்கள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.  அவை சுத்திகரிக்கப்பட்டபின்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  வர்த்தக ரீதியில் பார்க்கும்போது  இவற்றிற்கு  சிங்கப்பூர் துறைமுகம் இன்றியமையாததாக இருக்கிறது.

வெகு தூரம் பயணம்  செய்யும் வெளிநாட்டு கப்பல்களுக்கு  சிங்கப்பூர் துறைமுகத்தில் அவற்றிற்குத் தேவையான வசதிகள் இருப்பதால்   பயணம் செய்யும் மக்களுக்குத் தேவையான  தண்ணீரையும் உணவையும் சிங்கப்பூர் துறைமுகம் விநியோகிக்கிறது.

Wiki Links (Port of SG, Ports, Port of Amsterdam)

https://en.wikipedia.org/wiki/Port_of_Singapore

https://en.wikipedia.org/wiki/Port

https://en.wikipedia.org/wiki/Port_of_Amsterdam 

Singapore Port Now

http://ngm.typepad.com/our_shot/november-1-2007.html

Telok Ayer Basin (Singapore Port Then)

http://www.captainsvoyage-forum.com/forum/club-international-things-from-around-the-world/the-world-pilot-guides/828-this-is-singapore

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nanxxika/மணல்தொட்டி&oldid=2250855" இலிருந்து மீள்விக்கப்பட்டது