பயனர்:Natkeeran/சைவ சமயம் மீதான விமர்சனங்கள்

சைவ சமயம் மீது இறையியல், மெய்யியல், சமூகவியல், வரலாற்றியல் நோக்கில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சைவம் சாதி முறையை ஏற்று வலியுறுத்துகின்றது தொகு

சைவம் பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி முறையை வலியுறுத்துகிறது.[சான்று தேவை]

விளங்கா மொழியில் வழிபாடு தொகு

தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பெரும்பாலன சைவர்கள் வடமொழி தெரியாத தமிழர்கள். ஆனால் சைவக் கோயில்களில் பெரும்பாலும் வழிபாடு வடமொழியில் நடைபெறுகின்றது. இது ஒரு பெரும் குறையாக பலரால் உணரப்படுகின்றது.[சான்று தேவை] மந்திரங்கள் ஓசை முறையில் அமைந்தவை, ஆகையால் வடமொழியிலேயே ஓதப்படவேண்டும் என்பது இம் முறைக்கான ஒரு காரணம் ஆகும்.[சான்று தேவை]

ஆய்வுகள் தொகு

பேராசிரியர் வி. நித்தியானந்தம் "ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்: அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள்" என்ற ஆய்வுக் கட்டுரையில் சைவசமயத்தின் பல குறைபாடுகளை தெளிவாகக் காட்டியுள்ளார் [1]. அவற்றின் ஒரு தொகுப்பு பின்வருமாறு:

  • விளங்கா மொழியில் வழிபாடு
  • சைவக் குருமார்கள் மக்களிடம் அன்னியப்பட்டு நிற்றல்
  • சமூக சேவையை முன்நிறுத்தாதல்
  • போட்டி மனப்பான்மையை ஏதுவாக்கி ஒற்றுமையைச் சீர்குலைத்தல்
  • சமூக வளங்களை வீணடித்தல்
  • சைவம் "முதலாளிகளிகளின்" சமயமாகப் பரிணாமித்து பொதுமக்களிடம் இருந்து விலகிச் செல்லல்

மேற்கோள்கள் தொகு

  1. வி. நித்தியானந்தம். ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்: அதன் சமூகப் பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள். கூடம், 45-67. 2006