அறிமுகம் தொகு

ம.நவீன் மலேசியாவில் வாழும் ஒரு தமிழ் எழுத்தாளர். மலேசிய அரசாங்கத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வல்லினம் எனும் இலக்கிய இதழின் தோற்றுனர்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

  • மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் 31.07.1982ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைக்கல்வியை லுனாஸ் இடைநிலைப்பள்ளியிலும் முடித்தார். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இவருக்கு ஒரு சகோதரி உண்டு.
  • 16 வயதில் எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் நட்பு கிடைக்க இவருக்கு வாசிக்கும் பழக்கம் உருவானது. ம.நவீனுடைய இலக்கிய பயணத்துக்கு அவர்தான் தூண்டுகோளாக குருவாக இருந்தார்
  • கோலாலம்பூர் வந்தபிறகு எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் வழி தீவிர இலக்கிய வாசிப்பு அறிமுகமானது.

ஈடுபாடுகள் தொகு

தொழில் தொகு

  • 2002ஆம் ஆண்டு  ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தார். 3 வருட ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி படிப்புக்குப் பின் அத்துறையில் டிப்ளோமா பெற்றார். பத்துமலை தமிழ்ப்பள்ளி, மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி எனத் தொடர்ந்து தற்போது (2019) சுங்கை ரம்பை எனும் தோட்டப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இதழ் ஆசிரியர் தொகு

  • மன்னன் எனும் ஜனரஞ்சக மாத இதழில்தான் ம.நவீன் சுமார் ஈராண்டுகள் இயங்கினார். அது அவருக்கு வாசகர் மத்தியில் பெரும் கவனத்தைக் கொடுத்தாலும் தீவிர இலக்கிய வாசிப்பின் காரணமாக அதிலிருந்து விலகினார்.
  • காதல் எனும் இலக்கிய மாத இதழுக்கு இணை ஆசிரியராகப் பொறுப்பெடுத்தார். அவ்விதழ் சுமார் 10 மாதங்கள் வெளிவந்தன.
  • வல்லினம் மாற்று இலக்கிய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ம.நவீன் அவர்களால் 2007இல் அச்சிதழாக தொடங்கப்பட்டு 2009 முதல் இணைய இதழாகத் தொடர்கிறது. இன்று வல்லினம் தமிழின் முதன்மையான இலக்கியவாதிகள் பங்களிக்கும் முதன்மையான இலக்கிய இதழ்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
  • பறை எனும் ஆய்விதழ் ம.நவீன் மேற்பார்வையில் 2014 தொடங்கி காலாண்டிதழாக வெளிவந்து 6 இதழ்களுடன் நின்றது.  பல மாற்று கருத்துகளை ஆய்வு பூர்வமாக நிறுவிய இதழ் இது. மலாய்/ சீன இலக்கியம், ஆற்றுகை, ஈழ இலக்கியம், குடிமை, உலக இலக்கியச் சிறப்பிதழ் என ஒவ்வொரு தலைப்பின் கீழ் முழு ஆய்வுகளோடு இதழ் தயாரிக்கப்பட்டது.
  • முகவரி எனும் இருவார நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ் நேசன் நிர்வாகத்தின் கீழ் வெளிவந்த இந்த அச்சு இதழில் தரமான இலக்கியங்களை வெகுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல பங்களித்தார். இந்த இருவார நாளிதழ் ஐந்து வெளியீடுகளோடு நின்றது.

இலக்கயச் செயல்பாடுகள் தொகு

  • தொடர்ந்து பத்து ஆண்டுகளாக (2009- 2018) நண்பர்களின் ஒத்துழைப்புடன் கலை இலக்கிய விழா எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறார்.
  • ஓவிய கண்காட்சி, நிழல்படக் கண்காட்சி, மேடை நாடகம், புத்தக வெளியீடுகள் என கலையில் பல தளங்களிலும் இவர் செயல்பட்டு வருகிறார். மேலும் உலகத் தமிழ்ப்படைப்பாளிகள் மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், எம்.ஏ.நுஃமான், ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, லீனா மணிமேகலை, யூமா வாசுகி, பவா செல்லதுரை, சு.வேணுகோபால், கோணங்கி, யவனிகா போன்ற ஆளுமைகளுடனான சந்திப்புகளை மலேசியாவில் ஏற்படுத்தியுள்ளார்.
  • இதுவரை 14 மலேசிய  - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

இலக்கிய ஆக்கங்கள் தொகு

இதுவரை இவரது ஒரு நாவல், மூன்று கவிதை நூல்கள், மூன்று சிறுகதை நூல்கள், மூன்று பத்தி நூல்கள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் ஒரு ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு, ஒரு பயண நூல் என 15 நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும் https://vallinam.com.my/navin/ என்ற தளத்தில் இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

பதிப்பாளர் தொகு

வல்லினம் பதிப்பகத்தின் மூலம் 39 நூல்களை பதிப்பித்துள்ளார். யாழ் பதிப்பகம் என மாணவர்களுக்கான பதிப்பகம் ஒன்றை உருவாக்கி பயிற்சி நூல்களையும் பாட நூல்களையும் பதிப்பித்து வருகிறார்.

இணைய இதழ் தொகு

www.vallinam.com.my எனும் முகவரியில் இலக்கிய இதழ் ஒன்றை நடத்தி வருகிறார்.

பிற பங்களிப்புகள் தொகு

  1. ராயல்டி – இதற்கு முன் அரசியல் மற்றும் வணிகர்கள் தயவில் இயங்கிய மலேசியத் தமிழ் இலக்கிய உலகை எழுத்தாளன் வாசகன் பலம் கொண்டு நிர்க்க வைக்க முனைந்தார். எனவே வல்லினம் பதிப்பகம் மூலம் தொடர்ந்து எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து அவர்களுக்கு 20% ராயல்டி வழங்கப்பட்டது. இத்தொகை நூல் விற்பனையாகும் முன்னரே எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது.
  2. வீதி நாடகம் – மை ஸ்கீல் அரவாறியத்துடன் வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் பிரளயன் துணையுடன் மலேசியாவில் 2013ல் நடத்தினார்.
  3. ஆவணப்படம் – மலேசிய சிங்கப்பூர் ஆளுமைகளின் வாழ்வை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல எழுத்தாளர்களையும் நேர்காணல் செய்து அதை ஆவணப்படங்களாக தயாரித்து வருகிறார். இதுவரை 14 ஆவணப்படங்கள் தயாரித்துள்ளார். அவை https://vallinamgallery.com/ எனும் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

நேர்காணல்கள் தொகு

  1. இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை - 2010
  2. ‘எதிர்’ வலைத்தளத்தில் நேர்காணல்' - 2011
  3. இன்னொரு இனக்குழுவின் அடையாளம் பகடிக்கு உகந்ததல்ல….- 2012
  4. தினக்குரலில் வெளிவந்த நேர்காணல்: என்னிடம் நன்றி உணர்ச்சி இல்லை ! - 2012
  5. சிற்றேடு இதழில் வந்த நேர்காணல் : சிங்கப்பூர் – மலேசிய இலக்கிய அடையாளமும் அதற்கான எதிர்ப்புகளும்! - 2012
  6. அம்ருதா நேர்காணல் (பாகம் 2) :ஒவ்வொரு எழுத்தாளனும் ஓர் இயக்கமாகவே செயல்பட வேண்டும். - 2012
  7. பறையனாக இருந்துவிட்டுப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை? - 2012
  8. “விருதுகள், வாங்குபவரின் தகுதியைவிட கொடுப்பவரின் தகுதியையே காட்டுகிறது “ - 2014
  9. “நானும் ஒரு பின் தங்கிய மாணவன்தான்” - 2015
  10. “எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.” - 2015
  11. பிபிசி தமிழோசையில் நேர்காணல்: மலாயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுமா? - 2016
  12. “அவதூறுகள் தரமான ஒரு விருதின் மூலம் பொடிப்பொடியாகின்றன” – 2019
  13. எதிர்முகம் நேர்காணல் - 2019
  14. நாடு கடந்த கலை இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வரிசை-3, மலேசியா - 2020
  15. அவதூறுகள் கலையை வீழ்த்தாது! - 2020

உரை தொகு

  • மலேசியாவில் ஏன் நவீன இலக்கியம் வளரவில்லை? - 2020

எதிர்வினை தொகு

  1. பேய்ச்சி நாவல் தடை (2020) - New Stairs Times
  2. பேய்ச்சி நாவலில் ஒரு வரியை கூட நீக்க மாட்டேன் - அறன் செய்
  3. 'பேய்ச்சி' மீதான தடை - பழிதீர்க்கும் படலமே - SBS தமிழ்
  4. புலம்பெயர் தமிழர்களின் வாழ்வைப் பேசும் 'பேய்ச்சி' நாவல் - ஆனந்த விகடனில்
  5. Malaysia bans Tamil novel "Peichi", support pours in for M.Navin from literary circle - The news Minute
  6. வசைச்சொற்கள் அள்வுகோல் ஆகுமா? - இந்து தமிழ் திசை
  7. பேய்ச்சி நாவலின் தடை, பெரும் கவனத்தை ஈர்த்த தண்டனை - மலேசியாகினி
  8. ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு - ஜெயமோகன்
  9. பேய்ச்சி: முதல் வாசிப்பு -
  10. பேய்ச்சி நாவல் தடை விதித்துள்ள மலேசியா அரசுக்கு தமுஎகச கண்டனம் - தீக்கதிர் / தமுஎகச
  11. பேய்ச்சி நாவலுக்குத் தடை ! ம.இ.கா. தமிழ்மொழிப் பிரிவுக்கு சமூகவலைத்தலங்களில் தமிழ் ஆர்வலர்களாலும் இணையவாசிகளாலும் குவியும் பாராட்டு ! - அநேகன்
  12. ‘பேய்ச்சி நாவலை தடைசெய்தமைக்கான எமது கண்டனம்’ - இலங்கை தலித் சமுக மேம்பாட்டு முன்னனி கலகம்

பரிசுகள் / விருதுகள் தொகு

  1. 2010 இளம் கவிஞருக்கான விருதினை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியது.
  2. Canada - 2019

படைப்புகள் தொகு

புனைவுகள் தொகு

  1. சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
  2. வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல்)
  3. மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு)
  4. போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு)
  5. பேய்ச்சி (2019) நாவல்
  6. மகாராணியின் செக் மெட் (2019) கவிதை
  7. உச்சை (2020) சிறுகதை தொகுப்பு

அ-புனைவுகள் தொகு

  1. கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு)
  2. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு)
  3. வகுப்பறையின் கடைசி நாற்காலி – 2015 (கட்டுரைத் தொகுப்பு)
  4. மீண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு)
  5. நாரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு)
  6. மலேசியா நாவல்கள் (2020) தொகுதி 1

பயணம் தொகு

  1. மனசிலயோ - 2020 (கேரள பயணக்கட்டுரை)

உலக இலக்கியம் தொகு

  1. உலகின் நாக்கு 2017 (உலக இலக்கிய அறிமுகக் கட்டுரை)

திரை துரை தொகு

மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசனகர்த்தாவாகவும், ‘வெண்ணிர இரவுகள்’ (மலேசியா) , ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளார்.

கலை இலக்கிய விழா தொகு

தொடர்புகள்     தொகு

இணைய தளம்

  • http://vallinam.com.my/

மின்னஞ்சல்

தொலைப்பேசி எண்

  • +60163194522

புலனம் எண்

  • +60163194522

ம.நவீன் அகப்பக்கம்

  • ம.நவீன் பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Navin_Manogaran&oldid=3091563" இலிருந்து மீள்விக்கப்பட்டது