பயனர்:Nilaamaghal/மணல்தொட்டி
சுண்டைக்காய்....
அளவில் சிறிதான சுண்டைக்காய தன் கசப்பு சுவையால் நம் வியாதிகள் பலவற்றை நீக்க வல்லது. இதில் வைட்டமின் 'ஏ' நிறைந்துள்ளது. மேலும் இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், மற்றும் மாவுச் சத்து அடங்கியது.
உடலிலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது இதன் சுவை. மற்றபடி மார்பு சளியைப் போக்கவும் உதவுகிறது. வாத நோய உள்ளவர்கள் நாள்தோறும் சுண்டைக்காயை உணவில் சேர்க்க வேண்டும், வாயுத் தொல்லைக்கும் உண்ணலாம். போரியலாகவோ கூட்டாகவோ குழம்பில் இட்டோ உண்ணலாம். காய்களைக் கீறி உப்பிட்ட தயிரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி வெகு நாட்கள் உபயோகிக்கலாம்
வாய் கசப்பு உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று நாள் உணவில் சேர்க்கலாம்
வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் சுண்டைக்காய் செடியை வளர்க்கலாம் காட்டுப் பகுதியில் வளரும் சுண்டைக்காயில் மருத்துவ குணங்கள் மிகுதி
உஷ்ண பேதி உள்ளவர்கள் இதைச் சாப்பிட குணமாகும்.
--Nilaamaghal (பேச்சு) 03:08, 22 சனவரி 2013 (UTC)நிலாமகள்