நான் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளன். மைசூரை தலைமையிடமாகக் கொண்ட இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவன் (Nature Conservation Foundation). பறவைகள் ஆராய்ச்சி, இயற்கைக் கல்வி, மக்கள் அறிவியில் ஆகிய துறைகளில் ஆர்வம் அதிகம். தஞ்சையை குறிப்பாக கரந்தையைச் சேர்ந்தவன். காட்டுயிரியலில் (Wildlife Biology) முதுகலைப் பட்டமும், பறவைகள் ஆராய்ச்சியில் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் பணிபுரிந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். இயற்கைப் பாதுகாப்பின் அவசியத்தை, இயற்கையின் விந்தைகளை, குழந்தைகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எளிய தமிழில் விளக்குவது எனது வேலைகளில் ஒன்று. பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில் அவரவர் தாய்மொழியில் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின் கடமை எனக் கருதுகிறேன். எனது தமிழ் படைப்புகளை உயிரி வலைப்பூவில் காணலாம்.

விக்கிப்பீடியாவில் பெரும்பாலும் ஒளிப்படங்களை (விக்கிமீடியா பொதுவகத்தில்) பதிவேற்றுவதிலும், அங்குள்ள படங்களை சரியான பகுப்புகளில் வைப்பதிலும், படங்கள் இல்லாத விக்கிப்பீடியா பக்கங்களில் தகுந்த படங்களை சேர்ப்பதிலும் ஆர்வம். எனது நண்பர்களுடனும், சக பணியாளர்களுடனும் சேர்ந்து இயற்கை சார்ந்த ஒளிப்படங்களை (குறிப்பாக இந்தியாவில் இருந்து) சேகரிக்கும் ஒரு விக்கி திட்டத்தை (Commons:WikiProject Nature and conservation in India) தொடங்கி, பங்களித்து வருகிறேன். ஒரு சில ஆங்கில விக்கிப்பீடியா பக்கங்களையும் தொடங்கியும், சில பக்கங்களில் அவ்வப்போது சிறிய அளவில் பங்களித்துக் கொண்டுள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவில் வரும் காலங்களில் முடிந்த அளவு பங்களிக்க முயல்வேன்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 6 மாதங்கள்,  10 நாட்கள் ஆகின்றன.
  உயிரி (UYIRI) என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
இப்பயனர் நாணயச் சேகரிப்பில் ஆர்வம் உடையவர்
இந்தப் பயனர் உயிரியலில் பயிற்சி பெற்றவர்
இந்தப் பயனர் அறிவியலாளர் ஆவார்.
இந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PJeganathan&oldid=3204538" இலிருந்து மீள்விக்கப்பட்டது