கவிஞர் பச்சியப்பன்

கவிஞர் பச்சியப்பன் தமிழ்நாடு,திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். சீனிவாச கவுண்டர் ஆயியம்மாள் மகன் வயிற்று பெயரனும் ,துரைசாமி கவுண்டர் பூத்தானம்மாள் மகள் வயிற்றுப் பெயரனும் ராஜவேல் கவுண்டர் மணியம்மாள் ஆகியோரின் மகனும் ஆவார் .

25 . 6.1968 ஆம் ஆண்டு பிறந்தவர். அரசு மேல்நிலைப்பள்ளி ஒண்ணுபுரத்தில் பயின்றவர் . வேலூர் ஊரிசு கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் ' சென்னை மாநிலக்கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பயின்றவர் . அரசு கல்லூரி தமிழ்ப்பேராசிரியர்.

உனக்கு பிறகான நாட்களில், கல்லால மரம், மழை பூத்த முந்தானை , வேட்கையில் எரியும் பெருங்காடு , ஆகிய கவிதை நூல்களும் பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை, தும்பிகள் மரணமுறும் காலம், மண்ணில் எங்கும் நீரோட்டம் ஆகிய கட்டுரை நூல்களும் தம்பி நான் ஏது செய்வேன் என்கிற நேர்காணல் நூலும் படைத்தவர்.

வீரப்பன் கதையாகிய சந்தனக்காடு எனும் தொலைக்காட்சித் தொடருக்கு தலைப்பு பாடலும் ஈழம் என்ற தொடருக்கு தலைப்பு பாடலும் எழுதியவர் .


மகிழ்ச்சி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளா.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pachairaja&oldid=2772545" இலிருந்து மீள்விக்கப்பட்டது