தத் தவம் அஸீ


                            தலைமகன் வணக்கம்

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் -நல்ல

குணமதிக மாமருணைக் திருவண்ணாமலை கோபுரத்திலே மேவு

கணபதியே கைதொழுதக் காள் ”

                             -விவேக  சிந்தாமணி     


                 'இந்திய  மதங்கள்  ஒரு  சிறுபார்வை

காலத்தால் மிகவும் தொன்மைவாய்ந்த நாகரிகத்தை கொண்டது நம் பாரததேசம்.இப்பரந்த பாரத தேசத்தில் எண்ணற்ற மதங்கள் தோன்றின. இந்து மதம் என்ற மதம் சிந்து சமவளி நாகரிகத்தின் மூலம் அறிகின்றோம். ஆதியில் இந்துமதத்தினை சனாதனதர்மம் என்று அறியப்பட்டு வந்தது.

மனித அறிவிற்கும்,ஆராய்சிக்கும் இன்றளவும் தீனி போட்டு வரும் நம் இந்தியாவின் தோன்றிய நிலை அறிய முடியாமல் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வரும் மதத்தை புத்துயிர் கொடுத்து உலகின் புராதன சனாதன மதமான ந்து வரும் இந்து மதத்தினை இவர்தான் தோற்றுவித்தவர் இவர் தான் பரப்பியவர் என்று யாரும் கிடையாது பிற மதங்களின் இருப்பது போன்று எந்த ஒரு கட்டுபாட்டு அமைப்பும் கிடையாது.இந்து சமயம் பல வகையான வழிபாட்டு முறைகளையும் (சடங்குகள்),நம்பிக்கைகளையும் கொண்ட மதமாகும். இறைகொள்கையில் ஓரிறைகொள்கையே பின்பற்ற படுகிறது.உருவம் தான் வேறு முடிவில் பரம்பொருள் ஒன்று தான் என்பது இந்துகளின் இறைகொள்கையாகும்.

இந்துமதத்தினை இந்தியர்கள் மட்டும் இன்றி உலகத்தின் பல்வேறு நாடுகளில் பின்பற்றபடுகிறது.குறிப்பாக நேபாளம், சிங்களம், ஈழம், இந்தோனேசியா,மலேசியா,சிங்கப்பூர்,சுரினாம்,பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்த்,திபெத்,தாய்லாந்த்,பர்மா, கம்போடியா, போன்ற நாடுகளில் பெருமளவு காணபடுகின்றது.

சமண,பெளத்த மதங்களின் தாக்கத்தால் அழிவு நிலையில் இருந்த இந்து மதத்தை புத்துயிர் கொடுத்து உலகின் புராதன சனாதன மதமான இந்து மதத்தை தூக்கி நிறுத்தினார் மகான் ஆதிசங்கரர். கிபி. 788 இல் கேரளாவின் தெற்கு திருவாங்கூரில் உள்ள காலடி என்ற ஊரில் பிறந்த ஞானசுரியன் ஆவார். ஆதியில் தோன்றிய இம்மதம் இன்று சுமார் 850 மில்லியன் மக்களால் பின்பற்ற படுகின்ற மற்றும் உலகின் மூன்று முக்கிய சமயங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

இந்து மதம் “முன்னே பழமைக்கும் பழமையாய் பின்னே புதுமைக்கும் புதுமையாய்” உள்ளது. கிமு 6 அம் நூற்றாண்டின் தோன்றிய மகதர், மகாவீரர்,புத்தர் போன்ற மகான்கள் புதிய வழிபாட்டு முறையை கொண்டு வந்தனர். இவர்கள் தோன்றிய காலத்தில் இந்து மதம் தன் தனித்துவத்தை இழந்திருநதது.மக்கள் இந்து மதத்தின் மீது இருந்த நம்பிக்கை சில சுயநலவாதிகளின் செயலால் இழக்க நேரிட்டது.

மகாவீரர்,புத்தர் போன்ற அரசு வாரிசுகள் எழிமையான வழிபாட்டு முறையையும்,அன்பு,கருணை போன்ற குணங்களின் மேன்மையை உணர்த்திடவும் மக்கள் அதனை பின்பற்றிடவும் வித்திட்டனர்.இவை முறையே சமணம் எனவும்,பௌத்தம் எனவும் வழங்கலாயிற்று.இவர்களுகு பின் வந்த மத குருமார்களும் அசோகர் போன்றசக்ரவர்த்திகளும்,அரசர்களும் இம்மதங்களை சீரும் சிறப்புமாக வளர்த்தனர்.

இவ்விரு மதங்கள் இந்தியாவில் இருந்து இலங்கை,சீனா,திபெத்,ஜப்பான் போன்ற நாடுகளில் மிக ஆழமாகபரவியது எனினும் இந்தியாவில் இவ்விரு மதங்களும் தன் பொழிவை இழந்தன. உலகில் புனித மதம் என்று அழைக்கப்படும் இஸ்லாம் மதம் கிபி 712ல் அரபு நாட்டின் படைத்தளபதி முஹமது பின் காசிமின் கொள்ளை தாக்குதலால் இந்தியாவில் இஸ்லாம் மதத்தின் கால் ஊன்றப்பட்டது.இந்தியாவின் வடக்கே உள்ள பெர்ஷியா படையெடுப்பின் மூலம் பெற்ற வெற்றியின் உத்வேகத்தில் அருகில் இருந்த இந்தியாவின் மீது அவனின் பார்வை பதிந்தது. எண்ணற்ற செல்வமும்,வளமும்,வைர தங்கசுரங்ககளும், கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அக்காலத்தில் கோவில்கள் தான் கருவுழமாக இருந்தன அதனால் கனக்கில்லடங்காத கோவில்கள்,சமண,புத்த மடாலயங்கள் கொள்ளயடித்தது மட்டும் இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டன.

கச்ணவித்,முஹமதுகோரி,போன்ற போர் படை தலைவர்களை தொடர்ந்து பர்மினி சுல்தான்கள், டெக்கான் சுல்தானியர்,துர்கியர்கள்,பாஷ்டுன்கள்,துக்ளக்மரபு,கில்ஜி போன்றஅடிமை மரபினர் அவர்களை தொடர்ந்து மங்கோலியா வம்சம் எனும் தைமூர் அரசர் பாபர் இந்தியாவின் நிலையான இஸ்லாமிய சாம்ராஜியத்தை நிறுவினார்.கிட்ட தட்ட 1200வருடங்கள் தொடர்ந்த இஸ்லாமியர்ஆட்சியினால் இஸ்லாம் மதம் ஓர் இரை கொள்கை மற்றும் திரு குர் ஆன் என்னும் வேதம் , தேவ தூதர்,நபிகள் பெருமனாரின் போதனைகள் போன்ற மூன்றுமுக்கிய எடுகொல்களால் அறியபடுகின்றது. உலகிலேயே இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இரண்டவுது நாடாகும் இந்தியா.இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தின் கலப்பே சிக்கியமதம்.இதனை நிறுவியவர் குருநானக் (1469-1539) இவரே இதன் முதல் குருவாவார்,இதன்சாயலை கொண்டதே அக்பரின் அயனி அக்பரி என்ற மதமாகும்.

பிற்கால இஸ்லாமியஆட்சியாளர்களின் திறமையற்ற,திடமற்ற ஆட்சி முறையினால் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தினை வெகுவாக அறிய பட அடித்தளம் அமைக்கபட்டது . வாச்கோடகோமாவின் இந்தியாவிற்கான கடல் வழி கண்டு பிடிப்பு இந்தியாவின் மேற்க்கு இந்தியநாடுகளான டச்சு, போர்ச்கள், பிரான்ஸ், பிரிட்டிஷ் நாடுகளின் வியாபார நோக்கம் நிறைவேற்றப்பட்டு பின்னர் படி படியே நிலையானஆட்சியமைபிற்கு வழிகோலியது.ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதிகத்தால் கிறிஸ்துவ மதம் அசுர வேகத்தில் இந்தியாவில் வளர்ச்சியடைந்தது.

இயேசு பிரானின் தியாகம்,கருணை மற்றும் அவரின் அறிவுரைகள்தான் கிறிஸ்துவ மதத்தின் தூண்களாகும். எழிமையான வழிபாட்டு முறையும் மதபிரட்சர்ரர்களாலும்,ஆட்சியர்ளர்களர்லும் நன்கு வளர்ந்தன.

எனவே உலகின்மூன்று முக்கியமதங்கள் இந்தியாவில் உள்ளன.இவளவு சிறப்பு வாய்ந்தது நம் இந்தியதிரு நாடு தோன்றிய நிலையறிய முடியாத இந்துமதம், மற்றும் மகாவீரர்,புத்தர்,இயேசு,நபிகள்,குருநானக் போன்ற புனித ஆத்மாக்கள் தோற்று வித்த மதங்களும், மத்வர்,வள்ளலார்,சித்தர்கள் முதலானவர்களால் தோற்று விக்க பட்ட வழி பாட்டு முறைகளும் வழக்கத்தில் உள்ளன.

எனவே தான் இந்தியா பல மதங்களின் சங்கமாகும் புனித நாடாக விளங்குகின்றது.அனைத்து மதங்களும் இறைவன் என்றும் ஒரு பரம்பொருளையே சரணடைகின்றன அகவே அணைத்து மத மக்களிடையும் ஒற்றுமை சகோதரத்துவம்,அன்பு,நட்பு .பரப்ப வேண்டும்.மத வேற்றுமைகள் அற்று மத கசிப்பு தன்மை வளர்ந்து வாழ வேண்டும்.ராமகிருஷ்ண பரமகம்ஷர்,வடலூர் வள்ளலார்,சாய்பாபா போன்ற புனித சீலர்கள் போதித்த சமரச சன்மார்க்க முறையை பின்பற்றி மத பேத மின்றி வாழ்வோம்.

                                             நன்றி
                                                                                           -                                                                இறைவனடிமை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Paramporul_seva_sangam&oldid=3845167" இலிருந்து மீள்விக்கப்பட்டது