Parthiban Gandhirajan
ஜோதிடம் என்பது என்ன?
ஜோதிடம் என்பது மனிதர்கள் உடற்கூறு தத்துவத்தில் ஒன்றுபட்டிருந்தாலும், கலாச்சாரம், கல்வி, வாழ்வியல் முறை, இன்னும் பல நிலம்சார்ந்த, மாறுதல்களை கொண்டுள்ளார்கள், மேலும் அவர்கள் சமுதாயத்திலும் பல்வேறுபட்ட குணாதிசயங்களை, செல்வநிலைகளை, கூட்டாளிகளை, தொழில்களை, குடும்பங்களை, நோய்களை, கொண்டுள்ளார்கள் இப்படி ஒவ்வொரு நபரும் வேறுபட்டிருக்க காரணம் என்ன? என்பது பற்றி ஜோதிடத்தின் முதல் தலைமுறைகளை கொண்ட அறிஞர்கள் மனிதனின் வாழ் முறைகளுக்கும் கிரக நகர்வுகளுக்கும் ஏதோ ஒரு ஒத்திசைவு உள்ளது என்பதை உணர்ந்தனர், அவற்றை ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தி தந்திருப்பதுதான் ஜோதிடம்.
அப்படி என்றால் இது அறிவியல் இல்லையா ? என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம்.
நமக்கு இன்று அறிவியல் என்றவுடன் நமக்கு உடனே நினைவில் வருவது அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்தான் அவர் தனது Out of my later years -ல் Science is the attempt - to make the chaotic diversity of our sense experience - correspond to a logically uniform system of thoughts.
அறிவியல் என்பது ஒரு பொருளை பகுத்து ஆராயும் போது கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட அனுபவங்களை, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும்முயற்சியே ஆகும் என்று குறிப்பிடுகிறார்..
இந்த கூற்று ஜோதிடத்திலும் ஒத்துதான் போகிறது,
ஜோதிடம்.
ஜோதி + இடம்
முதலில் ஜோதி என்பது என்ன என்ற விளக்கம் தெரிந்தால் ஒழிய அதன் இடத்தை அதாவது நிலையை உணர்ந்து கொள்ள முடியும்,
ஜோதி என்பது கண்களுக்கு புலபடும் பரு பொருளற்ற ஒன்று, ஏனெனில் ஜோதி என்பதற்கு நிழல் கிடையாது, ஒளி சிதறலென்ற ஒன்று நடைபெறாமல் ஒளியின் பயனத்தை நமது கண்களால் கானமுடியாது,
உதாரணம் :
நமது வீட்டில் உள்ள மின் விளக்கில் இருந்து வெளியேறும் ஒளியானது சுவரோ பொருளோ இல்லாவிட்டால் கண்களுக்கு தெரிவதில்லை மேலும் சுவற்றிற்கும் விளக்கிற்கும் இடையில் உள்ள ஒளியையும் நமது கண்களால் உணரமுடிவதில்லை,
ஒளி (light) என்பது நமது கண்களால் உணரக்கூடிய அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் , அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது.
இது அலை-துகள் இரு வேறு காரணிகளை உள்ளடக்கியது, இதன் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
இவை 380 நானோமீட்டர்கள் முதல் 740 நானோமீட்டர்கள் வரையில் அலைநீளத்தையுடைய மின்காந்த அலைகளாகும்.
ஒரு ஒரு பருபொருளின் மீது பயனிக்கும் போது ஒளி சிதறல் , ஒளி விலகல் , ஒளி பிரதிபலிப்பு ஒளி ஊடுருவல் என பல்வேறு பரினாமங்களை அடைகிறது ,அது அப்பொருளின் மீது சில வேதியல் மற்றும் இயற்பியல் மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது, ஒளி சிதறல் , ஒளி விலகல் , ஒளி பிரதிபலிப்பு ஒளி ஊடுருவல் என எது நடந்தாலும் ஒளி கிரகிக்கபடாமல் மாறுபட்டு வேறு அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளாக அப்பொருளின் தன்மைகளையும் சுமந்துகொண்டே தனது பயனத்தை தொடங்குகிறது, இது மீண்டும் ஒரு பருபொருளின் மீது படும் போது இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே உள்ளது,
காந்த அலைகள் ப்ரபஞ்சத்தில் பரவி பயனித்து கொண்டே உள்ளது,
சூரியன் எனும் நட்சத்திரத்தின் தன் அணு வெடிப்பின் மூலம் உமிழும் காந்த அலைகள் அதை சுற்றியுள்ள கிரகப்பொருட்களில் பட்டு மாறுதலடைந்து, ஒவ்வொரு கோனத்திலும் மீண்டும் பட்டு மாறுதலடைந்து கொண்டே உள்ளது, இது கண்களால் உணரக்கூடிய மற்றும் உணர இயலாத பலதரபட்ட அலைகளை வலைகளாக்கி ப்ரபஞ்சத்தை சூழ்ந்து கொண்டுள்ளது. அப்பிரபஞ்ச எல்லைகளுக்குள் வாழும் ஜீவ ராசிகளும் ஒரு சில இயக்கத்தின் அடிப்படை கொண்டே தீர்மானபடுத்தபடுகிறது, மனிதனும் விதிவிலக்கல்ல,
அவ்வாறு ப்ரபஞ்ச வெளியில் சூரிய ஒளியானது அதாவது மின்காந்த அலைகளானது பலதரபட்ட கிரகங்களின் சிதறல்களால் நம்மை வந்தடைகிறது, அவ்வாறு அடையும் பலதரப்பட்ட அலைகளின் கூட்டு நடவடிக்கைகளை ஏற்கனவே நம்மிடமுள்ள சில தரவுகளை கொண்டு ஒப்பிட்டு இனி நடக்க உள்ளதை முன் கூட்டி ஊகிப்பதே ஜோதிடம்,
ஊகமென்றவுடன் தவறானதென பொருள் கொள்ள வேண்டாம்,
அறிவியலின் அதி உண்ணத புரட்சி மருத்துவம் கூட ஊகத்தின் அதாவது இதற்கு முன் நடந்தவைகளின் ஒன்றுபட்ட நிகழ்வுகளை ஒருகினைத்தே, மருத்துவம் செயல்படுகிறது,
பொறியியலும் அவ்வாறே.
வேதியியலும் அவ்வாறே.