Pasumarathaiyan
அருள்மிகு பசுமரத்தையன் திருக்கோவில், செங்கோடம்பாளையம் மற்றும் காரப்பாளையம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 638701,இந்தியா .
மேற்கண்ட நமது திருத்தலம் 300 ஆண்டுகள் பழமையானது . காங்கேய நாட்டினில் வட சரிவான காட்டினில் உயர்ந்தமேட்டினில் உருவான ஒரு சிறந்த சக்தி வாய்ந்த திருத்தலம் . மூலஸ்தானத்தில் அம்பாள் பத்ரகாளி வீற்றிருக்க , அய்யன் பசுமரத்தடியில் அருளாசி வழங்கி கொண்டிருக்கிறார்.
திருத்தலத்தில் கேட்ட வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன . வெள்ளி கிழமை இரவு 7 மணிக்கு மேல் பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அருளாசி மற்றும் குறி சொல்லப்படுகிறது. இத்திருத்தலத்தின் அம்மன் கருவலூர் மாரி அம்மனின் வழி தோன்றலாக கருதப்படுகிறார். சிறப்புமிக்க இத்திருத்தலத்தின் புனரமைப்பு பணிகள் சிறப்பாக நடை பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் குறி கேட்பதற்கும், பூ கேற்பத்திக்கும் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமைகளில் நிரம்பி வழியும்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபம் மார்கழி,மாசி,பங்குனி மாதங்களில் சிறப்பான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாசி மாதம் நடக்கும் சிவன் ராத்திரி திருவிழா மிகவும் சிறப்பானது.அச்சமயம் பக்தர்கள் அனைவர்க்கும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோவிலின் பூஜைகள் பெரிய வீட்டுக்காரர்களாலும், மற்ற வாக்கு சொல்லுதல்,குடி பணிகள் யாவும் மேட்டாங்காட்டு வம்சத்தினராலும் சிறப்பாக செய்யப்படுகிறது.
அனைவரும் வருக, அய்யன் அருள் பெற்று இன்புற்று வாழ்க..........