படிமம்:பழ.பிரபு (Pazha.Prabu ).jpg
பழ.பிரபு

ஊற்றங்கரை பழ.பிரபு என்று அறியப்பட்ட திரு.P.பிரபு அவர்கள் எழுத்தாளர் ,சொற்பொழிவாளர் ,உளவியலாளர் , தந்தை பெரியாரிய சிந்தனையாளர் ,தன்னம்பிக்கை பயிற்சியாளர் ,சமூக செயற்பாட்டாளர் என பன்முகங்களை கொண்டவர்

திராவிடர் கழகத்தில் மிகக் குறைந்த வயதில் (25 வயதில் ) மாவட்ட செயலாளாராக அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் தருமபுரி மாவட்ட செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் .

2009 ஆம் ஆண்டு முதல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்கிற அமைப்பை தொடங்கி அமைப்பின் செயலாளராக கலை ,இலக்கியம் ,மருத்துவம் ,அறிவியல் ,சமூகநீதி உள்ளிட்ட தலைப்புக்களில் மாதந்தோறும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்

சுடர் மனநல ஆலோசனை மய்யம் எனும் அமைப்பை நிறுவி மனநல ஆலோசனைகளை வழங்கி வருவதுடன் பள்ளி ,கல்லூரிகளில் உளவியல் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளையும் மனித வள மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்தி வருகிறார்

ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை ,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளை .தருமபுரி –கிருஷ்ணகிரி மருந்து வணிகர்கள் சங்க அறக்கட்டளை போன்ற பொது அமைப்புகளில் பொறுப்பு ஏற்று செயல்பட்டு வருகிறார்

பெரியார் ,அம்பேத்கார் சிந்தனைகள் குறித்தும் ,பேலியோ உணவு முறைகள் ,மருத்துவ அறிவியல் ,தமிழ்மொழி குறித்தும் இணையத்தில் தொடர்ந்து எழுதியும் ஆக்கபூர்வமான செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறார்

தனி வாழ்க்கை  :

1973 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 6 ஆம் நாள் சுயமரியாதை சுடரொளி அ.பழனியப்பன் –கலைமணி ஆகியோருக்கு தலைமகனாக பிறந்தார் இவருக்கு ம.வித்யா என்கிற மனைவியும் டார்வினா ,கியூபா என்கிற மகளும் உண்டு

கல்வி : இவரது கல்வித்தகுதி D.Pharm.,B.H.M.,M.B.A.,M.Sc (Counseling and Psychotherapy )

தனது தொடக்க கல்வியை ஊற்றங்கரை அரசு துவக்கப்பள்ளியிலும் ,உயர்நிலை கல்வியை திருப்பத்தூர் புனித டொமினிக் சேவியர் மேல்நிலைப்பள்ளியிலும் ,மேல்நிலைக்கல்வியை திருச்சி தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியிலும் கற்றார்

தனது இளங்கலை படிப்பை Bachelor of Hotel Management படிப்பை கருநாடக மாநிலம் மங்களூரில் ஸ்ரீனிவாசா காலேஜ் ஆப் ஹோட்டல் மேனஜ்மெண்டில் முடித்தார்

தமது D-Pharm படிப்பை ஈரோடு கோயம்பத்தூர் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியிலும் தமது Master of Bussiness Administration படிப்பை ஐரோப்பாவில் உள்ள Newport University இல் அஞ்சல் வழி கல்வி மூலம் கற்றார்

தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் M.Sc (Counseling and Psychotherapy ) முதுநிலை படிப்பை முடித்ததுடன் உளவியல் சம்பந்தமான சான்றிதல் பயிற்சிகளிலும் கற்று அறிந்தவர்

வகிக்கும் பொறுப்புகள்  :

ஒருங்கிணைப்பாளர் ,ஊற்றங்கரை மண்டல மருந்து வணிகர்கள் சங்கம்

செயலாளர் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

ஆலோசனை குழு உறுப்பினர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளை 

ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை

அறக்கட்டளை உறுப்பினர் ,தருமபுரி –கிருஷ்ணகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க அறக்கட்டளை

வாழ்நாள் உறுப்பினர் ,தமிழ்நாடு உளவியலாளர்கள் சங்கம்

வாழ்நாள் உறுப்பினர் பீனிக்ஸ் உளவியலாளர்கள் சங்கம்

இணைப்புகள் : https://www.facebook.com/profile.php?id=100000669814595 https://www.facebook.com/profile.php?id=100000669814595

https://www.youtube.com/user/pazhaprabu https://pazhaprabu.blogspot.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pazhaprabu&oldid=3295074" இலிருந்து மீள்விக்கப்பட்டது