Pcnarayanan
திரு. P.C.NARAYANAN BATTACHARYA (pcnarayanan); P.C.நாராயணன் பட்டாச்சார்யா; P.C.நாராயணன் ; P.C.N.; PCN BATTACHARYA ; PCN BATT ; P.C.N.பட்டாச்சார்யா ; ஜோதிடர் P.C.N. ; ஸ்ரீவைகாநஸ் ஜ்யோதிஷ் வித்வான் என்றெல்லாம் அழைக்கப்படும் திரு. நாராயணன் பட்டாச்சார்யா அவர்கள் - தஞ்சை மாவட்டம் - நாகைவட்டம் தற்போதைய ஓன்ஜிசி.ஆயில் நிறுவனம் அமைந்துள்ள “நரிமணம்” என்கிற ஊரிலிருந்து அங்குள்ள “ வெட்டாறு ” என்கிற ஆற்றின் மறு பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய க்ராமமான, “வங்காரமாவடி” என்கிற ஊரில் (சென்னை-56,பூவிருந்தவல்லியை சேர்ந்த ஸ்ரீ.உ.வே. சுந்தரராஜ பட்டாச்சார்யாரின் மூத்த மகன்) ஸ்ரீ.உவே. செல்லப்பா பட்டாச்சார்யாருக்கும் - (செங்கல்பட்டு மாவட்டம் நெம்பிலியை பூர்வீகமாக கொண்டு, மேற்படி வங்காரமாவடியில் வாழ்ந்துவந்த ஸ்ரீ.உ.வே. பார்த்தசாரதி பட்டாச்சார்யாரின் மூத்த மகள்) சௌ.இந்திரா அம்மங்காருக்கும், மூத்த மகனாக பிறந்தவர்தான். நம் P.C.நாராயணன் என்பவர். இவர் 1968-ம் வருடம் அக்டோபர் மாதம் 08-ம் தேதி, மேற்படி வங்காரமாவடியில் தாய்வழி தாத்தா (பார்த்தசாரதி பட்டாச்சார்யார்) வீட்டில் அன்று இரவு, சுமார் 10.35pm அளவில், சுகப்ரஸவமாக பிறந்தார்.
இவரது இயற்பெயர் : - லெக்ஷ்மி நாராயணன் தந்தை பெயர் : - செல்லப்பா பட்டாச்சார்யார் தாயார் பெயர் : - இந்திரா அம்மங்கார்
இவர் தனது இளமைக்காலம் தொட்டே கணிதத்திலும், அறிவியலிலும் மிகவும் ஆர்வமுடையவராய் விளங்கி வந்தார். பள்ளியில் கூட 100 க்கு 98 என்கிற அளவில் இந்த இரு பாடத்திலும் மதிப்பெண் பெற்றவர். 1986-ல் 12ம் வகுப்பு படித்து முடித்தவுடன், அன்றைய வறுமை காரணமாக பொறியியல் படிப்பை தொடரமுடியாது , வேலைக்கு சென்றுகொண்டே B.Com., C.L.I.S., Dip.COMPUTER APLICATION போன்ற படிப்புகளை சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பயின்றார். பிறகு ஒரு பள்ளியில் உதவி கணக்காளராகவும், க்ளெர்க் ஆகவும் 5 வருடங்கள் வேலை பார்த்தார். படிக்கின்ற காலத்திலிருந்தே, பல அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை ( Railway Recruitment , TNPSC, STAFF SELECTION , BANKING... )பலமுறை எழுதினார். அதில், ஒரு முறை ரெயில்வே துறையில் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், ரூ. 60,000/- பணம் கட்டினால்தான் வேலையில் சேரமுடியும் என்கிற நிலை இருந்ததால், வேலைக்கு சேரமுடியாமல் போனது. பிறகு, சில வருடங்கள் கழித்து 1998-ல் தமிழ்நாடு லைப்ரரிக்கு மாவட்ட அளவில் தேர்வெழுதி, அதிலும் தேர்வு பெற்று பணி நியமன கடிதமும் வந்தது. அதற்கும் இதே தொகையை கேட்டதால், அப்போதைய குடும்ப வறுமை காரணமாக மேற்படி உத்யோகத்திற்கும் செல்ல முடியவில்லை.
இவருக்கு 2 தம்பிகள் 1 தங்கை
மூத்த முதல் தம்பி : க்ருஷ்ணமூர்த்தி (a) மாதவன் இவர் தனது 42 வது வயதில் சென்ற வருடம் 8-05-2015-ல் உடல்நிலை சரியில்லாது காலமாகிவிட்டார்.
இரண்டாவது தம்பி : கஸ்தூரி ரங்கன் வயது 40 இவருக்கு கல்யாணமாகி மனைவி, இரு குழந்தைகள் இருக்கின்றனர்( 1 மகன் - 8வயது ; 1 மகள் - 6 வயது ) இவர் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
தங்கை சௌ. சுஜாதா வெங்கடக்ருஷ்ணன் பட்டாச்சார் - இவருக்கு கல்யாணமாகி ஒரு மகன் (சிரஞ்சீவி சந்தோஷ்-17 வயது) ; ஒரு-மகள் (சௌ. மயூரப்ப்ரீதி - 15 வயது) உள்ளனர். இவர்கள் சென்னை-4 மைலாப்பூரில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர் தகப்பனார் செல்லப்பா பட்டாச்சார்யார் அவர்களுக்கு தற்போது 77 வயதாகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை க்ராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருமழிசையாழ்வார்-ஸ்ரீமத்யஜெகந்நாத பெருமாள் திருக்கோவிலில், தலைமை அர்ச்சகராக பணியாற்றி கடந்த 1999-ல் ஓய்வு பெற்றார். தற்சமயம் பூவிருந்தவல்லியில் உள்ள ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு கௌரவ அர்ச்சகராகவும், ஆகம ஆலோசகராகவும் சேவையாற்றி வருகிறார். இவர் ஸ்ரீவைகாநஸ ஆகமத்தில் கர்ஷனாதி ப்ரதிஷ்டாந்தம் தேர்ச்சிபெற்று , தனது 15 வயது முதல் இன்றுவரை சுமார் 200 கோவில்களுக்கும் மேலாக பல கோவில் கும்பாபிஷேகங்களில் யஞ்ஞாதிகாரியாக இறைப்பணி செய்துவந்துள்ளார்/ வருகிறார்.
இவரது தாயார் திருமதி. இந்திரா அம்மங்கார் அவர்கள் குடும்பதலைவியாக வீட்டில் பணியாற்றி வருகிறார். வயது 67