பாடலாசிரியர் செந்தமிழ்


செந்தமிழ் ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஐம்பது தமிழ்ப் பாடல்களை(தனிப்பாடல்களும்) எழுதியுள்ளார்.

இவர் இதுவரை நான்கு கவிதைப் புத்தங்களும் ஒரு டுவிட்டு தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.


இவரது படைப்புகள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

மேலும் இவரது படைப்புகளில் ஒன்றான, “ஆச்சரியக் குறிகளோடு ஒரு கேள்விக்குறி” என்ற

கவிதைத் தொகுப்பு உலகத் தமிழ்ப்பல்கலைகழகத்தால் சிறந்த கவிதை நூலாக

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு நாட்டுப்புற கலை இலக்கியத்தின் சார்பாக “கலைமணி” என்ற விருதினையும்

பெற்றுள்ளார். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் “இளைய பாரதம்” என்ற

நிக்ழ்ச்சியில் கவிதையாற்றுகிறார்.

ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட தனியிசைப்பாடல்களை எழுதியுள்ள கவிஞர் செந்தமிழ், தற்போது,

திரையிசைப் பாடல்களையும், திரைக்கதை ஜாம்புவான் பாக்கியராஜ் அவர்கள் நடத்தும் பாக்யா

இதழில் சிறுகதைகளையும், சென்னை அகில இந்திய வானொலியில் கவிதைச்சரமும் எழுதி

வருகிறார்.

வளைத்தளம்: https://www.youtube.com/user/vasanthenga

எழுதிய நூல்கள்

1) அம்மாவின் கையும் பேசும் 2) மீண்டும் பள்ளிக்கு போகலாம் 3) ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி 4) ஊஞ்சலோடு ஜன்னல்,… ஜன்னலோடு மரம்

இதுவரை “அம்மாவின் கையும் பேசும்”, “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” மற்றும் “ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி” என்ற மூன்று கவிதைத் தொகுப்புகளை சென்னை புத்தக கண்காட்சியில் இயக்குநர் திரு. பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் திரு.லேனா தமிழ்வாணன் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். “ஊஞ்சலோடு ஜன்னல்,… ஜன்னலோடு மரம்” என்ற டுவிட்டு நூலையும் வெளியிட்டுள்ளார்.. இப்போது இயக்குநர் திரு. பாக்கியராஜின் “பாக்யா “வார இதழில் சிறுகதைகள் எழுதி வருகிறேன் அதைத் தொடர்ந்து சென்னை வானொலி நிலையத்தில் “கவிதைச்சரம்” நிகழ்ச்சியில் கவிதையும் பாடி வருகிறார்..

விருதுகள்தொகு

“ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி” என்ற கவிதை நூலை “அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம்” சிறந்த நூலாக தேர்வு செய்து விருது வழங்கியது பிறகு தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் எழுத்து துறையில் “கலைமணி” விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தற்போது புகழ்மிக்க சென்னை பச்சயப்பன் கல்லூரியில் எனது படைப்புகள் “புதுக்கவிதையில் செந்தமிழின் படைப்புகள் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எழுதிய பாடல்கள்தொகு

கவனிக்கப்பட்ட சில பாடல் தொகுப்புகள்:

1) கானா பாலா பாடி கலைஞர் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பபட்ட "நெகிழி" விழிப்புணர்வு பாடல்

2) கஜா புயலுக்காக எழுதிய உருக்கமான பாடல்

3) காஞ்சி உலகத் தமிழ் மாநாட்டிற்காக எழுதிய தமிழ்ப்பாடல்

4) கானா சுதாகர் எழுதி பட்டிதிட்டியெங்கும் பிரபலமான "பிடாரி" மற்றும் "குதுர வாலு" பாடல்

5) செந்தமிழ் பக்தி பதிக பாடல்கள்

Songs Details:

வ.எண்          பாடல்           பாடகர்

01        கொஞ்சி_பேசிட    - நித்திய ஸ்ரீ

02        ராப்பகலா  - வேல்முருகன்

03        கஞ்சஜங்கா            -           சின்ன பொன்னு & பிரபு

04        பூ பூக்கும்     -           திப்பு & வீனா

05        தூவானம்    - மெல்வின்

06        பூங்கொடி   - மில்லர்

07        பிளாஸ்டிக் ஒழிப்பு          - கானா பாலா

08        வெயில் பாடல்       - ஷாஜகான்

09        ஏறு தழுவுதல்         - சபேஷ் சாலமன்

10        சுதந்திர_பாடல்1   - மோகன்சிவா

11        முத்தமிழ்_கலைஞர்         - ஷாஜகான்

12        லவ்வுன்னா இன்னா மச்சி-காதலர் தின பாடல்   -           ஷாஜகான்

13        பிடாரி பாடல்         - கானா சுதாகர்

14        தேவதையே பாடல்          - உன்னிகிருஷ்ணன் & நேஹா

15        தமிழே...செந்தமிழே         - ஷாஜகான்

16        சாமியே சரணம் அய்யப்பா     - ஜெயபாரதி

17        கஜா புயல் பாதிப்பு உள்ளம் உருக்கும்  பாடல்      - கார்த்திகேயன்

18        கஜா புயல்   - மோகன்சிவா

19        அப்பா பாடல்         - தியாகா

20        புத்தாண்டு_பாடல்           - ரட்சகன்

செந்தமிழ்ப் பதிகம்! (பக்தி தனியிசைப்பாடல்கள்)தொகு

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செந்தமிழ் எழுதிய செந்தமிழ்ப்பதிகம் என்ற பக்தி இசை ஆல்பம் காஞ்சி காமட்சியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வெளியிடப்பட்டது.

பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம்.

மேற்கண்ட கூற்றின் படி, பத்து பக்தி பாடல்களை இந்த ஆல்பம் கொண்டுள்ளதால் இதற்க்கு “செந்தமிழ்ப் பதிகம்” என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

சிறப்பம்சம்: இந்த தனியிசைப் பாடல் தொகுப்பில், எல்லாக் கடவுளைப்பற்றியும் பாடப்பட்டுள்ளது. அம்மன்,பெருமாள்,விநாயகர்,முருகன்,முனீஸ்வரன் என்று எல்லா தெய்வங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் இது பாடப்பட்டுள்ளது.

வெளியீடு: செந்தமிழ்ப் பதிகத்தை காஞ்சி காமட்சியம்மன் கோயிலில் வெளியிட்டிருந்தாலும், இதன் ஒவ்வொரு தனிப்பாடல்களையும் ஒவ்வொரு திரைத்துறைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர்கள்: கவிஞர்களில், ஈரோடு தமிழன்பன், சிற்பி, அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன் மற்றும் பாடலாசிரியர் பிரியன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர்கள்:

இசையமைப்பாளர்களில், ஸ்ரீகாந்தேவா, ஜெஸ்டின் பிராபகர், வல்லவன், தன்ராஜ் மாணிக்கம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர்களில திரு, முனியப்பகுமார், ஸ்ரீராம், ராகேஷ் மற்றும் ராஜராஜா ஆகியோரும். நடிகர்களில் பசங்க சிவா மற்றும் லொள்ளு சபா ஜீவா, கொம்பு வெச்ச சிங்கம்டா பட எடிட்டர் டான்பாஸ்கோ ஆகியோரும் வெளியிட்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Poet_Senthamizh&oldid=2877044" இருந்து மீள்விக்கப்பட்டது