படிமம்:Pon senthilkumar 2.jpg
பொன் செந்தில்குமார்
பசுமை விகடன் இதழை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவுக்கு மாப்பிளைத் தோழன் போல இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களை அழைத்து வந்த அற்புதமான தருணம்....
பசுமை விகடன் தொடருக்காக இந்தியாவின் மாதிரி கிராமம் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிரா மாநிலம் ராலேக்கான்சித்தி சென்றோம். 21 நாள் அந்த கிராமத்தை உருவாக்கிய காந்தியவாதியான அண்ணா ஹஜாரேவின் களப்பணிகளை காணும் போது...
வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் இயற்கை பாடம் பயின்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரிடம் சான்றிதழ் பெற்ற போது...

பொன்.செந்தில்குமார்,‘பசுமை விகடன்’ இதழின் நிர்வாக ஆசிரியர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைகளுக்கும் சென்று, உழவர்கள் மூலமும், ‘இயற்கை விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்தவர்.

படிமம்:பொன் செந்தில்குமார்.jpg
பொன் செந்தில்குமார்

கிராமங்களில் தான் உண்மையான இந்தியா உள்ளது என்று உணர்ந்து ஊரகப் பத்திரிகையாளராகவும் உருவானார்.

இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உழவர்களின் பண்ணைகளுக்கு நேரில் சென்று நேர்காணல் செய்திருக்கிறார். துணைவேந்தர்கள், வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கிராமத்து விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாட்டு வேளாண் வல்லுநர்கள் பலரைச்சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ‘நீங்கள் கேட்டவை-பாகம் 1’, ‘நீங்கள் கேட்டவை - பாகம் 2’, ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு ’ ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’ ‘மானாவாரியிலும் மகத்தான இலாபம்’ ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி’ ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’... பயனுள்ளநூல்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இவரது பெற்றோர்: பொன்னம்பலம்-மல்லிகா மனைவி:தேவ.எல்லம்மாள், பள்ளி ஆசிரியர். மகன்:பொன்னகத்தீசன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pon_senthilkumar&oldid=3025315" இலிருந்து மீள்விக்கப்பட்டது