தீக்க்ஷா தாகர்:


இந்தியாவைச் சார்ந்த ஒரு பண்பட்ட குழிப்பந்தாட்டக்கார் ஆவர் . ஜாஜார், ஹரியானாவைச் சேர்ந்த இவர் 2018ஆம் ஆண்டு, ஐரோப்பியாவில் நடந்த பெண்களுக்கான மகளிர் குழிப் பந்தாட்டத்தில் இளம் வயதிலேயே பட்டம் வென்றவர் ஆவார்.(1) மேலும் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான இரண்டாம் இடத்தையும் இந்தியாவின் சார்பில் வென்றவர் ஆவார். பிறப்பிலேயே கேளாத் திறனுடன் பிறந்திருந்தாலும் அதை தன் திறமையின் மூலமும் சாதனைகளின் வாயிலாகவும் முறியடித்த இந்தியாவின் இளம் வீராங்கனை ஆவார்(1). இவர் 2017 ஆம் ஆண்டு சம்மர் டெப்ளம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்தார்(2) . 2019 ஆம் ஆண்டில் தனது பதினெட்டாம் வயதில் இந்தியாவைச் சேர்ந்த அதிதி அசோக்கிற்கு அடுத்து திறமைமிக்க குழிப்பந்தாட்டக்காரராக தகுதி பெற்றார்(8).


ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி:

டிசம்பர் 14 2000 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிறப்பிலேயே கேளாத் தன்மையுடன் பிறந்ததால் தனது ஆறாம் வயதில் கேட்கும் திறனுக்கான கருவியை பொருத்திக் கொண்டார். ஏழாம் வயதில் தனது சகோதரனுடனும் மற்றும் தந்தையான யோகேஷ் தாகர்( முன்னாள் குழிப் பந்தாட்டக்காரர் மற்றும் இராணுவ அதிகாரி) ஆகியோரின் மேற்பார்வையில் குழிப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கி அதுவே வாழ்க்கையாக மாறிப்போனது. (3)


இளம் வயது வீராங்கனையாக ஒரு பயணம்:


இடக்கை குழிப்பந்தாட்டக்காரராக அறிமுகமாகி துள்ளியமாக பந்தை அடிக்கக்கூடியவராக 2012ஆம் ஆண்டில் கலம் காணப்பட்டார் . 2015ஆம் ஆண்டிற்கான மகளிர் குழிப் பந்தாட்டத்தின் மிகவும் இளம் வயது வீராங்கனையாக பல பட்டங்களையும் போட்டிகளையும் வென்றார் . 2016ஆம் ஆண்டிற்கான 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான முதல் 500 இடங்களில் இடம்பெற்றார்.  2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறு பேர் கொண்ட குழுவில் ஒருவராக விளையாட அங்கீகரிக்கப்பட்டார். (4)


தனிப்பட்ட தகவல்கள் :


பிறப்பு :     14 டிசம்பர் 2000   ஜாஜார்  , ஹரியானா, இந்தியா.


நாடு:        இந்தியா .


தொழில் :


பண்பட்ட குழிப்பந்தாட்டக்காரராக மாறியது :

2019 சமீபத்திய பயணம் லேடிஸ் யூரோப்பியன் டூர்.


வெற்றி பெற்ற போட்டிகளின் எண்ணிக்கை: லேடிஸ் யூரோப்பியன் டூர் 1.  


மற்றவை  1


பண்பட்ட வெற்றிகள்  2


விருதுகளின் பதிவு :

2017 டெப்ளம்பிக்ஸ்


தொழில்முறை வாழ்க்கை:

2019 ஆம் ஆண்டில் இவர் முழுநேர பண்பட்ட குழிப்பந்தாட்டக்காரராக மாறி அந்த ஆண்டு நடந்த தெற்காசிய தீவுகளுக்கான போட்டியில் வெற்றியாளராக வலம் வந்தார். இதுவே இவரின் முதல் மற்றும் இளம்வயது சாதனையாகும் . (3)(2)


இளம் வயது சாதனைகள் :

2015ஆம் ஆண்டிற்கான கிழக்கிந்திய நாடுகளுக்கான போட்டி.


2016 சண்டிகர் மகளிர் போட்டி மற்றும் பால்டோ சாம்பியன்ஷிப் போட்டி .


2017 தெலுங்கானா மகளிர் போட்டி வட இந்திய மகளிர் போட்டி .


மேற்கிந்திய மகளிர் சாம்பியன்ஷிப் .


2018 சிங்கப்பூர் மகளிர் போட்டி .


பண்பட்ட வெற்றிகள்:


லேடிஸ் யூரோப்பியன் டூர் வின்ஸ் 2019 .


மற்ற வெற்றிகள் :

2017 ஹீரோ வுமன் ப்ரோ கோல்ப் லீக்.


References

https://www.livehindustan.com/sports/story-indian-golfer-diksha-dagar-create-history-wins-south-africa-womens-open-2450925.html [1]

https://www.hindustantimes.com/other-sports/indian-amateur-golfer-diksha-dagar-credits-dad-for-her-silver-win-at-deaflympics/story-ZQUIqD3vOP6UPUVb4f7rfO.html  [2]

https://www.bbc.com/hindi/india-45195574  [3]

https://zeenews.india.com/hindi/sports/indian-amateur-golfer-diksha-dagar-credits-dad-for-success/432133 [4]

https://timesofindia.indiatimes.com/sports/golf/top-stories/golfer-diksha-dagar-remains-focused-on-olympic-ambitions/articleshow/75172294.cms [5]

https://www.espn.in/golf/story/_/id/26286722/the-right-clubs-changed-everything-left-handed-diksha-dagar [6]

https://www.thehindubusinessline.com/news/sports/diksha-dagar-becomes-youngest-indian-woman-to-win-on-ladies-european-tour/article26561497.ece [7]

https://www.indiatoday.in/sports/asian-games-2018/story/india-at-asian-games-2018-full-squad-of-india-1310326-2018-08-09 [8]


For box details (From newspaper, television news sites and sports sites)


முழு பெயர் : தீக்க்ஷா தாகிர்

தேசியம் : இந்தியன்

பிறப்பு: 14 டிசம்பர், 2000

பிறந்த இடம்:  ஜாஜார், ஷரியானா

விளையாட்டு : குழிப்பந்தாட்டம்.

பயிற்சியாளர்: நரேந்திர தாகர் .


பதக்கங்கள்: 


இந்தியாவை முன்னிறுத்தி:


வெள்ளிப்பதக்கம்- டெப்ளம்பிக்ஸ் ,  துருக்கி 2017.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Poorani98&oldid=3105595" இலிருந்து மீள்விக்கப்பட்டது