ஜம்ப்கட்ஸ்ஹரிபாஸ்கர்

ஜம்ப்கட்ஸ்ஹரிபாஸ்கர்

இவரது பிறந்த நாள் 13.11.1995 ஆகும்.

தனிநபர் நடிப்பில் தமிழ்நாட்டில் சிறந்த நடிகராக ஹரிபாஸ்கர் மோனோ ஆக்ட் சாம்பியன் என்று அழைக்கப்படுகிறார்.

திருச்சியை சொந்த ஊராக கொண்ட ஹரிபாஸ்கர் சென்னை லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிக்கேஷன் படிப்பை முடித்துள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையினரிடையே பல நல்ல கருத்துக்களை நகைச்சுவையாகவும்., அதே சமயம் சிந்திக்க தூண்டுபவையாகவும் தன் பண்பட்ட நடிப்பின் மூலம் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.ஆரம்ப காலங்களில் தனது நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை தனது நண்பர் நரேஷின் இயக்கத்தில் இணைந்து நடித்தார்.அது ரசிகர்களிடம் சிறந்த வரவேற்ப்பை பெற்றது.

முதல் குறும்படம்,தான் படித்த லயோலா கல்லூரியின் தேர்வுக்கான நுழைவுசீட்டு பெறுவது எவ்வளவு கடினம் என்பதை நகைச்சுவையாக நடித்து, அதே சமயம் மாணவர்கள் தேர்வு சமயம் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பதை உணர்த்தியும்,பல கேள்விகளையும் கொண்டு அக்குறும்படம் வெளிவந்தது.இது ரசிகர்களிடையே பலத்த வரவேற்ப்பை பெற்றது.

அதன் பின் நட்பு ,உறவு, சமூகம் ,அரசியல், நிகழ்வுகள், தேர்தல் ,மொழிகள், காதல் , குடும்பம் ,விளையாட்டு என ஒவ்வொன்றையும் மையப்படுத்தி தனது நண்பர் நரேஷின் இயக்கத்தில் குறும்படங்களை வெளியிட்டனர்.ஒவ்வொரு படமும் மிகசரியான முறையில் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்தது.பலத்த வரவேற்ப்பையும் பெற்றது.

தற்போது பதினான்கு லட்சத்திற்க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள்  கொண்டு ஜம்ப்கட்ஸ் வீடியோ நல்ல வரவேற்ப்பை கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹரிபாஸ்கரின் நடிப்புத்திறன் மட்டுமே ஆகும்

62 குறும்படங்கள் ஒன்ரரை வருடத்தில் வெளியாகி உள்ளன.இது பெரும் சாதனையாக யூடியூப் சானலில் பாராட்டுபெற்றுள்ளது.

சிறந்த இயக்குநராக சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் திகழவேண்டும் என்பது இவரது இலட்சியம் என குறிப்பிடுகிறார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pu_arthi_jmc&oldid=2617278" இலிருந்து மீள்விக்கப்பட்டது