Pushparajah P
என் பெயர் புஷ்பராஜா. தந்தை பெயர் : பொன்னுமுத்து நாடார். தாய் பெயர் : லெட்சுமி அம்மாள். என் பிறந்தநாள் : 07.09.1956 எங்கள் சொந்த ஊர் : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முதுமொத்தன்மொழி".
05.09..1975ல் இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படையில் ஒரு GUNNERஆக சேர்ந்த நான், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் ரோடு கேம்ப் எனும் இடத்திலுள்ள, பீரங்கிப் படையின் பிரமாண்டமான பயிற்சி நிலையத்தில் ஒருவருட கால பயிற்சி நிறைவு செய்து, பின்னர் பீரங்கிப் படையின் ஒரு ரெஜிமேண்டில் போஸ்டிங் பெற்று, தேச பாதுகாப்பில் ஒரு அங்கம் வகித்தேன்.
தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கொட்டை, விசுவாசபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு. லாசர் நாடார் அவர்களின் மகள் ஆனந்தி எனும் மரிய ஆனந்தி கிறிஸ்டியை 02.06.1982அன்று திருமணம் செய்துகொண்டேன். 01.11.1983ல் என் மகன் சேவியர் அனில் மித்திரனும், 25.01.1987ல் என் மகள் அஸ்வினி மேரியும் பிறந்தார்கள்.
இந்திய இராணுவத்தின் பல பயிற்ச்சிகளையும் பாதுகாப்பு அனுபவங்களையும் பெற்ற நான், படிப்படியாக ஒரு JCO (JUNIOR COMMISSIONED OFFICER) ஆக NbSub எனும் ரேங்க் வரை முன்னேறினேன். 01.05.1994ல் விருப்ப ஓய்வு பெற்று இராணுவத்திலிருந்து வெளியே வந்தேன்.