பாண்டியர் தமிழ் பெயர்கள்: கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் வாழ்ந்த சங்ககாலப் பாண்டியர் அனைவரும் தூயத் தமிழ்ப் பெயர்களை உடையவரகள்.வடிம்பலம்பநின்ற பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,பாண்டியன் முடத்திருமாறன், பாண்டியன் மதிவாணன்,பொற்கைப் பாண்டியன்,கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,பாண்டியன் அறிவுடை நம்பி,ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்,தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இன்னும் பல பாண்டிய மன்னர்கள் தூயத் தமிழ் பெயர்களையுடையவர்கள்.களப்பிரர் ஆட்சிக்கு பின்பு கி.பி.ஆறாம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த பாண்டியர்கள் 'சேந்தன்' 'அரிகேசரி' என்ற வடமொழிப் பெயர்களையும் வடநாட்டு ஆரியமன்னர்களைப் போல் 'வர்மன்' என்ற வடமொழிப் பட்டம் புனைந்து ஆட்சி புரிந்தனர்.மாறவர்மன் அவனி சூளாமணி,செழியன் சேந்தன்,மாறவர்மன் அரிகேசரி,அரிகேசரி பராங்குச மாறவர்மன்,வரகுணவர்மன் போன்ற பல பாண்டிய மன்னர்கள் வடமொழி பட்டம் புனைந்து ஆட்சி புரிந்தனர். நூல்கள்:தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்,பாண்டியர் வரலாறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:R.VIKRAMAN&oldid=2590406" இலிருந்து மீள்விக்கப்பட்டது