"மோல யானை"

காடுவாழ் மக்கள் இந்த யானையை இந்தப் பெயரில்தான் குறிப்பிடுவார்கள்.இதை நாமெல்லாம் சொல்வது "மக்னா" அது என்ன மக்னா மற்றும் மோல யானை?

மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த இவைகள் மக்னாவாகின்றது என்பார்கள்.ஆனால் உண்மையில் இவை தந்தமில்லாமல் குறைபாட்டோடு பிறக்கும் ஆண்யானைகளே.தந்தமற்ற நிலையில் எந்தக்குழுவினோடும் தாக்குப்பிடித்து வாழமுடியாதநிலை. எந்தக்கூட்டத்திலும் இவற்றால் சேர்ந்து ஒரு முழு ஆண்யானையின் தன்மையோடு குழுவில் இருக்கமுடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் உண்டாகிறது. இந்த நிலைக்கு அவற்றின் மனஅழுத்தமே காரணமாகிறது...

ஆண்யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும் ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே இவைகளின் நிலை மிகப் பரிதாபமாகிவிடுகிறது...

பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணைசேரமுடியும் பலத்தைக்காட்ட போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாகவேண்டும்... தகுதியானவையே தப்பிப்பிழைக்கும் என்கிற விதியின்படி,போட்டியில் வெல்ல தந்தம் மிக முக்கிய ஆயுதம் நிராயுதபாணியான இவைகள் எல்லாக்கூட்டங்களிலும் விலக்கியே வைக்கப்படுகின்றன. எப்படிப்பட்ட மக்னாவானாலும் அவை தனித்தே வாழும் வருந்தத்தக்க சூழல்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RAMAMURTHI_RAM&oldid=2418410" இலிருந்து மீள்விக்கப்பட்டது