சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம்

தோற்றமும் வரலாறும்

19 ம் நுாற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே ஆங்கில மொழியையும் கிறீஸ்தவ சமயத்தையும் பரப்புவதற்காக ஆங்கிலேயர் பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். இந்த நிலையிலே சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வளர்ப்பதற்காக கல்விமான்களும் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பாடசாலைகளை ஆரம்பித்தார்கள். இந்த வரிசையிலே அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து தனது கிராம மக்களை மீட்பதற்காக சுதுமலையில் புகழ் பெற்று விளங்கிவரும் சிறந்த கல்விமானாகவும் சோதிடராகவும் வைத்தியராகவும் விளங்கியவராகிய திரு.நா.ஆ.சிந்நயபிள்ளை அவர்கள் 1885 ஆம் ஆண்டு ஆனி மாதம் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலையை அவர்கள் ஆரம்பித்தார். தானே அப்பாடசாலையின் முதல்வராக இருந்து அதன் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றினார். அவரின் மனைவியாரும் அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார்.

திரு.சிந்நயபிள்ளை அவர்கள் தம் 16ஆவது வயதில் இவ் வித்தியாசாலையை ஸ்தாபித்தார் என்பது பெரும் சாதனையாக அமைகின்றது.

சொந்தக்காணியில் ஆரம்பத்தில் கிடுகுக் கொட்டிலாக இருந்த இப் பாடசாலையை திரு.சிந்நயபிள்ளை அவர்கள் தனது கல்லால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறு தொகையினரான ஆசிரியர்களைளயும் மாணவர்களையும் கொண்டு விளங்கிய இப்பாடசாலை அவரின் பின் வந்தோரும் ஆற்றிய அரும் பணியால் வளர்சியடைய தொடங்கியது. அதனால் ஆசிரியர்களினதும் மாணர்களினதும் தொகை படிப்படியாக அதிகரிக்கத் தொங்கியது.

"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றிலிற் தோன்றாமை நன்று" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க திரு.சிந்நயபிள்ளை அவர்கள் எல்லொரும் போற்றப் புகழோடு வாழ்ந்தவர்.

திரு.சிந்நயபிள்ளை அவர்கள் பாடசாலையின் முதல்வராக 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார் அக்காலத்தில் பாலர் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடாத்தப்பட்டன. காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை பாடசாலையின் கடமை நேரமாக இருந்தது.

1905 இல் நன்கொடைபெறும் பாடசாலையாக இருந்தது. இப் பாடசாலையின் நிறுவுனர் திரு.சிந்நயபிள்ளை அவர்கள் 1942ஆம் ஆண்டு அவரது 73ஆவது வயதில் காலமானார். தமது 16 ஆவது வயதில் பாடசாலையை நிறுவினார் என்பதைப் பார்க்கும் போது மொத்தம் 57 ஆண்டுகள் அதாவது இப் பாடசாலையின் தற்போதைய ஆயுளின் அரை நுாற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் அன்னாரின் கண்காணிப்பின் கீழ் பாடசாலை இருந்து வந்துள்ளது என்பது புலனாகும்.

திரு.சிந்நயபிள்ளை அவர்களைத் தொடர்ந்து புங்குடுதீவைச் சேர்ந்த திரு.சின்னத்துரை என்பவரும் பின்பு ஏழாலையைச் சேர்ந்த திரு.சிவபாக்கியநாதன் என்பவரும் முதல்வராகப் பணியாற்றினார். அதன் பின் உடுப்பிட்டியைச் சேர்ந்த முருகேசு என்பவர் முதல்வராகப் பணியாற்றினார் காலத்தில் இப் பாடசாலை சிறப்பான நிலையை அடைந்தது என அறிய முடிகிறது. இவரின் காலத்தில் சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திர வகுப்புகளும் பால பண்டித வகுப்புகளும் இங்கு நடாதிதப்பட்டன மேலும் வடமாகான ஆசிரியர் நடாத்திய பரீட்சைகளிலும் மாணவர்கள் தோற்றினர்.

திரு.முருகேசு அவர்களின் காலத்தில் இலவச உணவுத்திட்டம் இரவுப் பாடசாலை முறை என்பன அமைந்திருந்தன என்பது வியப்பையும் மகிழ்வையும் தருவதாய் உள்ளது. திரு.முருகேசு அவர்களின் கீழ் திருவாளர்கள் கார்த்திகேசு தியாகராயஐயர் இராமலிங்கம் வியரத்தினம் சுப்பிரமணியம் என்போர் உதவி ஆசிரியர்களாய் பணியாற்றினர்.

அடுத்து சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த திரு.தம்பாப்பிள்ளை அவர்கள் முதல்வராக பணியாற்றினர். அவருடன் உதவி ஆசிரியர்களாக "தையலக்கா" எனப் பலரால் அழைக்கப்பட்ட திருமதி.தம்பிப்பிள்ளை இணுவில் "தையலாம்பாள்" என அழைக்கப்பட்ட ஸ்தாபகரின் மனைவியார் திருமதி.சிந்நயபிள்ளை திருவாளர்கள் ஏகாம்பரம் இராசவேல் ஆகியோர் பணியாற்றினர்.

திரு.தம்பாப்பிள்ளை அவர்களைத் தொடர்ந்து திரு.இராசதுரை அவர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அவரின் காலத்தில் பாடசாலைத் சரித்திரத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இப் பாடசாலை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றப்பட்டதும். பாடசாலை அபிவிருத்திக்கென மேலதிகமான 10 பரப்புக் காணி பெறப்பட்டதுமாகும் இவரது காலத்தில் தான் கொள்வனவு செய்யப்பட்ட 10 பரப்பு காணியில் கட்டடம் கட்டப்பட்டது. அவரைத் தொடர்ந்து அதிபராக சுண்ணாகத்தைச் சேர்ந்த திரு.செல்லத்துரை அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதிபராக திருமதி.பாராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் கடமையாற்றினர். அடுத்து ஸ்கந்தவரோதயா கல்லுாரியில் ஆசிரியையாக அரும்பணியாற்றிய ஜெ.கிருஷ்ணசாமி அவர்கள் இப் பாடசாலையின் அதிபராக 1981 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் நியமிக்கப்பட்டார். அவரின் அயராத அரும்பணியினால் இப் பாடசாலை துரிதகதியில் வளர்ச்சி அடைந்தது. இதற்கு எமது ஊரைச் சேர்ந்தவரும் வேம்படி உயர்தரப் பாடசாலை அதிபராகவும் மன்னார் வித்தியாதிகாரியாகவும் இருந்த செல்வி.பதிமாசனி ஆறுமுகத்தினதும் உதவியும் கிடைத்தது.கல்வி விளையாட்டு கலை சமயம் போன்ற துறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வந்தன. அவர் பதவியேற்ற காலத்தில் 8 ஆசிரியர்களும் 267 மாணவர்களுமே இருந்தனர்.

பாலர் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையுமே வகுப்புகள் இருந்தன. ஆண்டு தோறும் மேல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் தொகையும் அதிகரித்தது. 24 நிரந்தர ஆசிரியர்களும் கடமையாற்றினர். தரம் 1 தொடக்கம் 11 வரையுள்ள வகுப்பகள் ஒவ்வொன்றும் இவ்விரண்டு பிரிவுகள் ஆக்கப் பட்டன.

அவரின் காலத்தில் கல்வியில் பாடசாலை துரிதகதியில் வளர்ச்சியடைந்துள்ளமைக்கு பல பரீட்சைப் பெறுபேறுகள் சான்றாக அமைந்துள்ளன. வருடா வருடம் நடைபெறும் 5 ஆம் புலமை பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் மாவட்ட ரீதியில் மட்டுமன்றி மாகாணரீதியிலும் திறமைச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.

1984 ஆம் அண்டு முதன்முதலாக 5 மாணவர்கள் கா.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றி சியச்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்தனர். இவ்வாறு சித்தி பெற்றமை பாடசாலையின் கல்வி வரலாற்றில் சிறப்பான அம்சமாகும். இதன் மூலமாக அம்மாணவர்கள் அனைவரும் கா.பொ.த (உ.த) வகுப்பில் கல்வி கற்பதற்குரிய தகுதியை பெற்று வேறு பல பிரபல பாடசாலைக்க சென்றுள்ளனர். கா.பொ.த (உ.த)பரீட்சையில் சித்தியடைந்த மாணவரகளிற் சிலர் உயர் புள்ளிகளைப்பெற்று அதன் மூலம் புலமைப் பரிசில்களைப் பெற்றுள்ளனர். இவ்வாறு இவரின் காலத்தில் பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக அமைந்தன.

திருமதி.ஜெ.கிருஷ்ணசாமி அவர்களின் பெரு முயற்சியால் விளையாட்டுத்துறையும் விருத்தியடைந்தது. அவரின் காலத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி மிகச்சிறப்பாக சடைபெற்றது. இங்கு ஆசிரியராக இருந்த செல்வி.சந்திரகுமாரி செல்லையாவும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற கோட்ட வலய மாவட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளிலும் பல மாணவர்கள் பங்கு பற்றி 1 ஆம் 2 ஆம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ் அதிபரின் காலத்தில் 1982 அம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடை பெற்ற 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவினர் கோட்ட மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்றனர். 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவினர் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று அகில இலங்கை ரீதியிலும் பங்கு பற்றும் தகுதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி.ஜெ.கிருஷ்ணசாமி அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலத்தில் வட்டார மாவட்ட ரீதியில் நடைபெற்ற தமிழ்தினப் போட்டி ஆங்கில தினப்போட்டி மற்றும் இசை நடன நாடக போட்டிகளிலும் பங்கு பற்றிப் பல மாணவர்கள் 1 ஆம் 2 ஆம் இடங்களைப் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு இவ் அதிபரின் இடையறாத முயற்சிகளின் காரணமாக இப் பாடசாலை முழுமை பெற்று இடைநிலை பாடசாலையாக விளங்கியது. திருமதி.ஜெயதேவி கிருஷ்ணசாமி அவர்கள் அதிபராக பணியாற்றிய காலம் இப் பாடசாலையின் "பொற்காலம்" என்பதில் ஐயமில்லை.

இவரது காலத்தில் வகுப்புகள் உயர உயர வகுப்பறைப் பற்றாக்குறையை நிவரத்தி செய்வதற்காக 100 அடி நீளமான ஒரு கொட்டகை அமைக்கப்பட்டதுடன் நிரந்தரமாக அதிபர் அலுவலகம் ஒன்று உருவாக்கப் பட்டது. இவரது காலத்தில்தான் தற்போதய பாடசாலைக் கீதம் சின்னம் சாரணிய செயற்பாடுகள் என்பன ஆரம்பிக்கப்பட்டன.

04.06.1993 திருமதி.ஜெ.கிருஷ்ணசாமி சேவையிலிருந்து ஓய்வு பெற ஸ்தாபகரின் உறவினரும் இப் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி.சூ.ஜெயவீரசிங்கம் அவர்கள் அதிபராக பணியேற்றார். இவரது சேவைக்காலம் மிகவும் குறுகியது ஆயினும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளிளும் பங்குபற்றி வெற்றியீட்டியதடன் வாத்திய அணியும் (பாண்ட்)முதன் முதலாக உருவாக்கப் பட்டது.

திருமதி.சூ.ஜெயவீரசிங்கம் அவர்கள் இடமாற்றமாகி செல்ல மாவட்டபுரத்தை சேர்ந்த திரு.செல்லத்துரை குபேரநாதன் அவர்கள் 01.01.1995 அன்று தொடக்கம் அதிபரானார் இவரது காலத்தில் சமய விழாக்கழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 05.06.1996 ஆம் ஆண்டு முதன்முதலாக நுாலகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் பரீட்சைப் பெறுபேறுகளிலும்ம கூடிய வளர்ச்சி காணப்பட்டது. இப் பாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்த்த இவர் முற்பட்ட போதிலும் நாட்டின் சூழ்நிலைகள் காரணமாக இது கைகூடி வரவில்ல. இவரது காலத்தில் திரு.இந்திரன் காராளசிங்கம் அவர்களால் தரம் 1 மாணவர்களுக்கான இரு வகுப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்டன. விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு அமரர். நிரஞ்சலா பாலசுப்பிரமணியத்தின் நினைவாக நுால்நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருமதி.பராசக்தி பாலசுப்பிரமணியத்தினால் ஆரம்ப பிரிவுக்கான வகுப்பறைகள் கட்டப்பட்டன. விளையாட்டு மைதானமும் பெற்றோர் நலன் விரும்பிகள் ஆசிரியர்கள் ஆகியோரிடம் நிதி சேகரிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டது. பாடசாலையின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறுவதற்கு முன்னோடியாக இருந்த உப அதிபர் திரு.தியாகராஜா அருட்பிரகாசபிள்ளை அவர்கள் ஏற்று நடத்தினார். 1999 ஆம் ஆண்டில் புலமை பரிசில பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடம் கிடைத்தது. புலமை பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.

திரு.செல்லத்துரை குபேரநாதன் அவர்கள் 22.02.2002 ஆம் ஆண்டு இடமாறிச்செல்ல 25.03.2002 கட்டுடையை சேர்ந்த திரு.தப்பையா தர்மசோதி அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். இவரின் காலத்தில் பெளதீக வளங்கள் பெருகின நுால்நிலையம் திறப்பவிழா இடம்பெற்றது. கனனிக்கூடம் அமைக்கப்பட்டு கனனிகள் பெறப்பட்டன. நிகொட் ஜி.ரி.சட் ஆகிய நிறுவனங்கள் மூலமும் "வடக்கின் வசந்தம்" மூலமும் கிடைத்த நிதி மூலம் கட்டடங்கள் நிறைவு செய்யப்பட்டன. மேலைத்தேய வாத்திய உபகரணங்கள் கிடைத்தன. எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரான திருமதி.ஜெகசேதி இராசரத்தினத்தின் உதவியால் மைதானதிதிற்கு மதில் அமைக்கப்பட்டது.

23.02.2011 முதல் 21.02.2014 வரை திரு. சண்முகசுந்தரமூர்த்தி அவர்கள் அதிபராக கடமையாற்றினார் தொடர்ந்து 03.04.2014 இலிருந்து திரு.ஆ.பேரிம்பநாயகம் அதிபராக கடமையாற்றினார். கடந்த அண்டிலிருந்து திரு. ம.மகேந்திரன் அதிபராக தற்பொழுது கடமையாற்றிவருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raajini_Raveenthiran&oldid=2191405" இலிருந்து மீள்விக்கப்பட்டது