Rajesh kilimangalam
Joined 5 ஆகத்து 2016
அப்பாக்கள் ____________
எங்கள் அடுக்கக முன்னத்தி வாசலில் ஒரு பிள்ளையார் இருக்கிறார் சின்னதொரு கோவிலில்.
அப்பனே முருகா என்று எப்போதோ விளித்த பழக்கத்தில், பெரியப்பு என்பேன் இவரை அவ்வப்போது.
குடமுழுக்குச் செய்ய வரி வேண்டினார்கள் தந்துவிட்டேன். நட்சத்திரம் கேட்டார்கள், வேண்டுவாராம் பட்டர் என் பெயருக்கும். வேண்டாமே என்றேன்.
களவுபோன முந்திய கும்பமும் உண்டியலும் நினைவுக்கு வந்தன.
மூன்று நாளும் சாப்பாடு, மரக்கறி; ‘பேலியோ’ வழி பற்றுவதால் மறுக்க நேர்ந்தது.
இன்று, சாலை மறுகரைக்கு ஒரு கிழவியைக் கைப்பிடித்தேன். கடந்ததும்...