Rajes~tawiki
ஈழநாதம்
தொகு”தமிழீழ மக்களின் தேசிய நாளேடு தற்போது இணையத்தில் வருகின்றது” இணைப்புத் தலைப்பு
ஈழநாதம் எனும் நாளேடு கடந்த18 ஆண்டுகளாக தாயகத்தில் மக்களின் இதய நாதமாக வெளிவந்து கொண்டிருந்தது. பல்வேறு நெருக்கடிகள்,பின்னடைவுகள்,ஆகியவற்றிக்கு மத்தியிலும் தனது பணியினை மக்களிற்கு வழங்கி வந்தது. அதன்பின் போர்ச்சூழல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து , மட்டுவில், மிருசுவில்,கிளி நொச்சி , மாங்குளம்,புதுகுடியிருப்பு என இடம்பெயர்ந்து சென்று 1999 வரை மக்களிற்கு தனது சேவையினை வழங்கி வந்த ஈழ நாதம் 2000 ம் ஆண்டளவில் மீண்டும் கிளி நொச்சியில் புது பொலிவுடன் தனது பணியினை ஆற்றிக்கொண்டு வந்ததுடன் தென் தமிழீழத்திலும் மட்டு நகரில் தனது நாளாந்த பதிப்பினை வெளியீடு செய்து கொண்டிருந்தது.
2008 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் போர் உச்சக்கட்டத்தினை அடைந்த போது மீண்டும் இடம்பெயர்ந்து வட்டக்கச்சி,தர்மபுரம்,வள்ளிபுலம்,புதுகுடியிருப்பு,இரணைப்பாலை, என நகர்ந்து இறுதியாக மே 14 2009 ம் ஆண்டு தனது பணியினை முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக இடை நிறுத்தியது.
போர்க்காலங்களிலும் சமாதானம் என்று சொல்லப்பட்ட காலங்களிலும் குறைந்த வளத்துடன் தன்னாலான மகத்தான பங்களிப்பினை ஆற்றிவந்தது. தற்போது மீண்டும் ஈழ நாததின் பொறுப்பு வாய்ந்தவர்களின் வேண்டுதலிற்கு அமைய அதன் துணை ஆசிரியர்களாக கடமை ஆற்றியவர்கள்,ஒரு சில மூத்த பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் அவர்களின் முயற்சியினால் முதற் கட்டமாக இணைய வழியே தனது சேவையினை ஆரம்பித்துள்ளது.
தொடர்புகளிற்கு
editor@eelanatham.net (ஆக்கங்கள்,செய்திகள் மற்றும் தகவல்களிற்காக)